ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சிறு முதலீட்டாளர்களுக்கு பங்குகள் வெளியீடு
September 20, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, செப். 20- தேசியப் பங்கு சந்தை (National Stock Exchange - NSE) மூலம், தங்குத் தரகு சேவையைப் பணியாற்றி வரும் முன்னணி இந்திய நிறுவனங்களில் ஏஞ்சல் புரோக்கிங் (Angel Broking) ஒன்று ஏராளமான சிறு முதலீட்டாளர்களைத் தனது பங்குகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. ரூ.10 முகமதிப்பு கொண்ட இந்தப் பங்குகளின் பொது விற்பனை 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி, 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கணினி மூலமாக நடைபெறும் இந்த ஏல விற்பனையில் இந் நிறுவனப் பங்குகளின் இறுதி விலை நிர்ணயிக்கப்படும். இந்நிலையில், ஒரு பங்கிற்கான விலை வரம்பு ரூ.3055 முதல் ரூ.306 வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.

செயலி மூலம் நோய் தடுப்பூசி

சென்னை, செப். 20- மும்பையைச் சேர்ந்த ஹெல்த்-டெக் ஸ்டார்ட் அப், இந்திய குடிமக்களுக்கு அருகிலுள்ள மருத்துவர் அல்லது தடுப்பூசி கிளினிக்கில் தங்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான முன் பதிவு செய்ய ஒரு அப்ளிகேஷனை அறிமுகம் செய்துள்ளது.

மிகவும் தேவையான வசதி மற்றும் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும், இந்த தளம் தடுப்பூசி இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சென்று அடையும் என்பதை உறுதி செய்யும். சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான , ஒரு ஆப் மூலம் சம்பந்தப்பட்ட குடிமக்களுக்கு தடுப்பூசி எளிதில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் தகுதிவாய்ந்த சுகாதார சேவை வழங்குநர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கெனவே தனது  நுகர்வோர் ஆப்பில் 180 பிளஸ் சுகாதார வழங்குநர்களை பட்டியலிட்டு பட்டியலிட்டுள்ளது, இது இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார வழங்குநர்களின் ஒருங்கிணைப்பாளராக மாறியுள்ளது என  நிறுவனரும் இயக்குநருமான பங்கஜ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

வாகன விற்பனையில் தரத்துடன் சேவை

புதுச்சேரி, செப். 20- புதுச்சேரியில் உள்ள பெனெல்லி வாகன தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விற்பனை, சேவை மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந் ததை வழங்க பயிற்சி அளிக்கப்படுகிறது, இதனால் வாடிக்கையாளர் களுக்கு சிறந்த தரத்தையும், மன அழுத்தமில்லாத உரிமையாளர் அனுபவத்தை அனுபவிக்க முடியும்.

 வாடிக்கையாளர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து பெறப்பட்ட பெனெல்லி பிராண்டின் மீதான ஆர்வம், உற்சாகம் மற்றும் மரியாதை, பெனெல்லி இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என இந்நிறுவன நிர்வாக இயக்குனர் விகாஸ் ஜபாக்  தெரிவித்துள்ளார்.