ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை மய்யம் அறிமுகம்
September 12, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, செ. 12- அப்பல்லோ டயாலிசிஸ் கிளினிக்குகள் - சிறுநீரக நோய்களுக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சென்னையில் பாதுகாப் பான டயாலிசிஸ் கிளினிக்குகள் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி கள் தொடர்ச்சியாக டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும். அத்தகைய நோயாளிகளுக்கு, நோய்த் தொற்று ஏற்படு வதற்கான அபாயம் உள்ளது.

இதுகுறித்து பேசிய அப்பல்லோ டயாலிசிஸ் கிளினிக்கின் மூத்த நெப்ராலஜிஸ்ட் மருத்துவர் வெங்கடேஷ் கூறுகையில், "பாதுகாப்பை மய்யமாகக் கொண்டு தரமான சுகாதார சேவையை வழங்குவதில் அப்பல்லோ குழு எப்போதும் முன்னணியில் உள்ளது. எங்கள் பிரத்யேக நோய்த் தொற்றுக் கட்டுப்பாட்டு குழுவுடன் இணைந்து, டயாலிசிஸ் நோயாளி களுக்கும், நோய்த் தொற்றுகளுக்கு ஆளாக கூடிய பிற நோயாளிகளுக்கும் நோய்த் தொற்று அபாயத்தைக் குறைக்க வேண்டிய நெறிமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை நாங்கள் வகுத்துள்ளோம்" என்று கூறினார்.

குப்பை - பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற தொண்டு நிறுவனங்களின் முன் முயற்சி

சென்னை, செப். 12- 2020ஆம் ஆண்டின் உலக தூய்மைப் படுத்தல் நாள் 19.9.2020 அன்று தொடங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்கு நடைபெறவுள்ளது. இதில், அலையன்ஸ் அமைப்பின் ஆயிரக்கணக்கான  தன்னார்வலர்கள், பங்கேற் கும் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் அல்லாத நிறுவனங் களின் ஊழியர்கள், கூட்டாளர்கள், பங்காளிகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தனி நபர்கள் தங்கள் சமூகங்களில், தாங்கள் காணும் ஏதோ ஒரு குப்பையைக் கண்டறிதல், அடை யாளம் காணுதல், சேகரித்தல் மற்றும் அகற்றுதலை மேற்கொள் ளவுள்ளனர்.

"உலகளாவிய குப்பை சவாலின் அளவு அச்சுறுத்தும் வகையில் இருப்பினும், உலக தூய்மைப்படுத்தும் தினத்தில் வளர்ந்து வரும் பங்கேற்புகள், தனி நபர்கள் தங்கள் பங்கைச் செய்ய ஆர்வமாக உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளது" என்று அலையன்ஸ் டு எண்ட் பிளாஸ்டிக் கழிவுகள் தலைவர் ஜேக்கப் டியூயர் கூறினார்.

கல்வி மற்றும் செயல்பாடுகள் மூலம், நாம் குப்பைகளை குறைக்க முடியும் மற்றும் உலகில் நீடித்த நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்" என்று TED-Ed நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் லோகன் ஸ்மாலி அவர்கள் கூறினார்.