ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சிறீ ரங்கத்தில் பெரியார் சிலைக்குக் கூண்டா
October 12, 2020 • Viduthalai

சிறீ ரங்கத்தில் பெரியார் சிலைக்குக் கூண்டா?

எதிர்ப்பை ஏற்றுக் கொண்டது காவல்துறை

திருச்சி, அக். 12- திருச்சி சிறீரங்கத்தில் அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார் சிலையைச் சுற்றி காவல்துறையினர் கூண்டு அமைக்க ஏற்பாடு செய்தனர். அதற்கு திராவிடர் கழகம்சார்பில் தெரி விக்கப்பட்ட எதிர்ப்பை ஏற்றுக் கொண்ட காவல்துறை கூண்டு அமைக்கும் பணி யைக் கைவிட்டது.

நேற்று முன்னாள் 10.10.2020 சிறீரங்கம் காவல் நிலையத்தின் வாசல்  அருகில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி கூண்டு அமைக்கும் பணியைத் தொடங்கினர். இதனைச் செய்யக் கூடாது. இந்த இடம் பெரியார் சுயமரியாதை நிறுவனத்திற்கு சொந்தமான இடம் சட்டப்படி முறை யாக ஆவணங்கள் இருக்கின்றன என காவல்நிலையத்தில் நகரத் தலைவர் கண்ணண் தலைமையில் கழகப்பொறுப் பாளர்கள் புகார் கொடுத்தனர். இத னால் தற்காலிகமாக கூண்டு அமைக்கும் பணி நிறுத்திவைக்கப்பட்டு, மீண்டும் நேற்று (அக் 11) காலை கூண்டு அமைக்கும் பணியை தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழகத்தினர் திரண்டனர். 

காவல் நிலையம் முன்பு பெரியார் சிலையை கண்காணிப்பதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கி றது. 24 மணி நேரமும் பாதுகாக்க காவ லர்கள் போடப்பட்டுள்ளனர். இந்நிலை யில் பெரியார் சிலைக்குக் கூண்டு அமைப்பதா? என கண்டனம் தெரிவித்து  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில தொழிலாளர் அணி செயலாளர் சேகர், மாவட்ட செயலாளர் மோகன் தாஸ் மற்றும் கழகப்பொறுப்பாளர்கள், திமுக, காங்கிரஸ், லோக்தந்திரி கட்சி, பெரியார் தி.க, ம.க.இ.க., மக்கள் அதி காரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களை சேர்ந்தவர்கள் கலந்துகொண்ட னர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல் உதவி ஆணையர் சுந்தர மூர்த்தி மற்றும் சிறீரங்கம் காவல் ஆய்வாளர் செந்தில் வேலன் உள்ளிட்டோர் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சிறீரங்கத்தில் அமைக் கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலை பட்டாவில் உள்ளது. பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு சொந்தமான இடம். இதற்கான ஆவ ணங்கள் இருக்கின்றன. இதில் எங்களை கேட்காமல் கூண்டு அமைக்கக் கூடாது என எடுத்துரைத்தனர். முறையான ஆவ ணங்கள் அவர்களிடம் உள்ளது. அது அவர்களுடைய இடம் அவர்களை கேட்காமல் நாம் கைவைக்கக் கூடாது. இதனால் கூண்டு அமைப்பதை நிறுத்துமாறு வட்டாட்சியர் கூறினார். காவல்துறையினர் கூண்டு அமைக்கும் பணியை நிறுத்தினர். இச்சம்பவத்தால் சிறீரங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது