ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சிதையிலிருந்து பாதியிலேயே அகற்றப்பட்ட தாழ்த்தப்பட்ட இளம்பெண் பிணம்... பாஜக ஆளும் உ.பி.யில் அரங்கேறிய ஜாதியக் கொடூரம்!
August 4, 2020 • Viduthalai • இந்தியா

லக்னோ, ஆக. 4, தாழ்த்தப்பட்ட பெண்ணின் உடலை எரிக்க விட மாட்டோம் என்று, அராஜகத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்கள், சிதையில் வைக்கப்பட்ட உடலைப் பாதியிலேயே அகற்ற வைத்த சம்பவம் உத்தரப்

பிரதேச மாநிலத்தில் அரங்கேறி யுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ளது காகர்புரா கிராமம். இங்கு கடந்த ஜூலை 19 அன்று, பூஜா என்ற 26 வயது தலித் இளம்பெண், கருப்பை தொற்று காரணமாக இறந்து போகவே, அவரது உடலை அடக்கம் செய்ய, கணவர் ராகுல் உள்ளிட்ட குடும்பத்தினர் சுடுகாட் டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.சிதையில் பூஜாவின் உடலை வைத்து, அவரது 4 வயது மகன் கொள்ளி வைக்கப் போகும் நேரத்தில், அங்கு வந்த தாக்குர் சமூகத்தினர், இந்த சுடுகாடு உயர் ஜாதியினருக்கானது; இங்கு தலித் பிணத்தை எரிக்க விட மாட்டோம் என்றுகூறித் தடுத்துள் ளனர். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பார்ப்பனர் ஒருவர் ஆக் கிரமித்து வைத்திருப்பதைக் குறிப் பிட்டு, தலித் மக்கள் எவ்வளவோ போராடியும் சுமார் 6 மணிநேரம் வரை பிணத்தை எரிக்க விடாமல் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் சிதையில் வைக்கப்பட்ட தலித் இளம்பெண் பூஜாவின் உடலை எரிக்க முடியாமல், அவரது குடும் பத்தினர் பாதியிலேயே அங்கி ருந்து எடுத்து,4 கி.மீ. தூரத்திலுள்ள நாக்லா லால் தாஸ் என்ற இடத்திற்கு எடுத் துச் சென்று தகனம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். குற்றவாளி களைப் பிடித்து தகுந்த தண்டனை அளிக்கவேண்டும் என்று வலியுறுத் தியுள்ளனர். எனினும் இச்சம்பவம் தொடர்பாக,உத்தரப்பிரதேச பாஜக அரசின் காவல்துறை, சஜாதி ஆதிக்க வெறியர்கள் மீதுவழக்கு எதையும் பதிவு செய்யவில்லை.இதனிடையே காகர்புரா பகுதியிலுள்ள முஸ்லிம் களுக்கும் அடக்க ஸ்தலம் இல்லை; அவர்கள் தங்களின் வீடுகளுக்கு உள்ளேயே பிணங்களை அடக்கம் செய்து கொள்ளும் அவலத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.