ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சம வாய்ப்பு வழங்காத எந்தக் கல்வியும், ஏற்றத்தாழ்வையே விதைக்கும்!
September 3, 2020 • Viduthalai • தமிழகம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை,செப்.3, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நேற்றைய தினம் ஆண்ட்ராய்டு செல்பேசி மூலமாக ஆன்லைன் பாடம் படிப்பதில் சகோதரிகளுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி நெஞ்சை கனக்கச் செய்கிறது. உளுந்தூர்பேட்டையை அடுத்த மேட்டு நன்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி ஆறுமுகத்துக்கு மூன்று மகள்கள். நித்தியசிறீ கல்லூரியில் படிக்கிறார். மற்ற இருவரும் பன்னிரண்டு, பத்தாம் வகுப்புகளில் படித்து வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால் அதன் பயன்பாட்டுக்காக மூவரும் தமது தந்தையிடம் செல்போன் கேட்டுள் ளார்கள். மூன்று செல்பேசிகள் வாங்கித் தரும் வசதி அவருக்கு இல்லாததால், மூவருக்கும் சேர்த்து ஒரே ஒரு செல்பேசி வாங்கித் தந்துள்ளார். ஒரே நேரத்தில் மூவருக்கும் வகுப்புகள் வந்தால் யார் பயன்படுத்துவது? இதனால் ஏற்பட்ட விரக்தியில் ஆறுமுகத்தின் மூத்தமகள் நித்தியசிறீ தற்கொலை செய்து கொண் டிருப்பதைச் சாதாரண மரணங்களில் ஒன்றாகக் கடந்து செல்ல முடியாது. அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் என்று சொல்வதற்கு முன்னால், அனை வருக்கும் அத்தகைய வழிமுறையைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறதா, தேவைப்படும் பொருளாதாரப் பின்புலம் உள்ளதா என்பதை அரசு ஆழ்ந்து சிந் தித்ததாகத் தெரியவில்லை. அனைவருக் கும் செல்பேசி இருக்கிறதா, அதுவும் ஆண்ட்ராய்டு செல்பேசியாக இருக் கிறதா, ஒரு வீட்டில் மூன்று குழந்தைகள் என்றால் மூவருக்கும் தனித்தனியாக இருக்கிறதா, இணைய வசதி இருக்கிறதா, அந்த வசதி தடையற்றதாக இருக்கிறதா, அந்த இணையத்துக்கு மாதம் தோறும் செலவு செய்யும் வசதி இருக்கிறதா இவை எது குறித்தும் கவலைப்படாமல் ‘நாளை முதல் ஆன்லைன் வகுப்புகள்’ என்று அறிவித்ததால் ஏற்பட்ட துயரம்தான் நித்தியசிறீயின் மரணம்.

இதற்கிடையில், ஆலங்குடியை அடுத்த கபளம் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ்மா, தனக்கு நீட் தேர்வு எழுத வாய்ப்புக் கிடைக்காத நிலையில் தற்கொலை செய்து கொண்ட செய்தியும் நேற்று வெளியாகி உள்ளது. அத னால்தான் நீட் தேர்வைப் பலிபீடம் என்கிறோம். கல்வி என்பது ஏதோ பட்டம் பதவிகளுக்காக அல்ல; அது அனைவரையும் அனைத்துக்குமாகத் தகுதிப்படுத்தி அதிகாரப்படுத்தும் பொருத்தமான கல்வியாக இருக்க வேண்டும். அத்தகைய தகுதிப்படுத்துதல் கூட, அனைவருக்கும் சமவாய்ப்பை வழங்குவதாக இருக்க வேண்டும். சம வாய்ப்பை வழங்காத எந்தக் கல்வியும், ஏற்றத்தாழ்வையும் விரக்தியையுமே விதைக்கும். அனிதாக்களையும், நித்தியசிறீக்களையும் உயிரைப் பறிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இதைச் சொல்வதால் ஆன் லைன் வகுப்புகளை எதிர்ப்பதாகப் பொருள் கொள்ள வேண்டாம். பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்திக் கொள்வதாக ஆன்லைன் வகுப்புகளைத் தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்தி விட்டு நடத்துங்கள் என்றே சொல்கிறேன். அதை நோக்கிய நகர்வை அரசு தாமத மின்றி முன்னெடுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தை ரத்து செய்யக்கூடாது

 தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சுட்டுரைப்பதிவில் குறிப் பிட்டுள்ளதாவது: முன்னெப்போதும் இல்லாத இந்த பெருந்தொற்றுக் காலத்தின் மத்தியில், வெளிப்படையான தகவல்களை குடிமக்கள் அறிந்துகொள்ள கேள்வி நேரம் மிக முக்கியமானதாகிறது. கேள்வி நேரத்தை ரத்து செய்வது என்பது ஜனநாயகத்தின் முக்கிய அம்சமான எதிர்க்கட்சிகளின் பங்களிப்பை நசுக்கு வதாகும். இம்முடிவினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மாண்புமிகு பிரதமர்  நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.