ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சமூகநீதியின் சின்னம்  பி.பி. மண்டல் - காணொலியில் கழகத் தலைவர் - 3
August 28, 2020 • Viduthalai • கழகம்

* கலி. பூங்குன்றன்

கடந்த 25.8.2020 அன்று மாலை 6 மணியளவில் காணொலி மூலம் சமூகநீதியின் சின்னம் பி.பி. மண்டல் குறித்து திரா விடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கருத்துரையிலிருந்து.... (தொகுப்பு - 2)

பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் - பீகார் மாநில முதல் அமைச்சராக இருந்தவர் - சிறந்த வழக்குரைஞர்.

ஜனதா அரசு காலத்தில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது சரண்சிங் முயற்சியால் இந்திய அரசமைப்புச் சட்டம் 340ஆம் பிரிவின் கீழ் இவர் தலைமையில்தான் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் உருவாக்கப்பட்டது  (1.1.1979). ஜனதாவின் தேர்தல் அறிக்கை யிலும் இது இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

1979 முதல் 1980 வரை இந்தியா முழுவதும் உள்ள 407 மாவட்டங்களில் 405 மாவட்டங்களுக்கு நேரில் சென்று ஆய் வினை அறிவியல் பூர்வமாக மேற் கொண்டது இந்த ஆணை யம்.  1980ஆம் ஆண்டில் பிரதமராக இந்திராகாந்தி இருந்த போது ஆணையத்தின் அறிக்கை அளிக்கப்பட்டது (31.12.1980).

அந்த ஜனதா அரசில் ஏ.பி.வாபேயி, எல்.கே.அத்வானி ஆகியோரும் காபினட் அமைச்சர்களாக இருந்தனர். அதை வைத்துக் கொண்டுதான் - தொலைக்காட்சி விவாதங்களில் நாங்கள்தான் மண்டல் குழு ஆணையத்தை அமைத்தோம் என்று அரட்டை அடிக்கிறார்கள். இதில் இவர்களின் பங்கு என்ன என்பதுதான் முக்கியம்.

உண்மையிலேயே இவர்களுக்கு இப்பிரச்சினையில் அக்கறையிருந்தால், மண்டல் குழுப் பரிந்துரையை செயல் படுத்தும் வகையில் அறிவிப்பினை வெளியிட்டு, செயல் படுத்த முன்வந்த வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்ப்பார்களா என்ற கேள்விக்கு என்ன பதில்?

மண்டல் பரிந்துரை அறிக்கை அரசிடம் அளிக் கப்பட்டும், நாடாளுமன்றத்தில் அறிக்கை வைக்கப்படவில்லை. சட்டப் படியான இந்த நடவடிக்கைக்கே அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதற்காகவேகூட சென்னை - சைதாப்பேட்டையில் திராவிடர் கழகம் ஒரு மாநாட்டை நடத்தியது. கருநாடக மாநில முதல் அமைச்சர் தேவராஜ் அர்ஸ் அதில் கலந்து கொண்டார்.

காங்கிரசில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் பொறுப்பாளராக விருந்த டி.பி.யாதவ் அவர்கள் 200க்கும் மேற் பட்ட எம்.பி.க்களிடம் கையொப்பம் பெற்று பிரதமர் இந்திராவிடம் அளித் தார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட் டங்களையும் நடத்தியிருக்கிறது.

பிரதமர் வீட்டு முன்பும், நாடாளு மன்றத்தின் முன்பும் கூட மறியல் செய்து கழகத் தோழர்களுடன் கைதானோம்.

டில்லி மேனாள் முதல் அமைச்சர் சவுத்ரி பிரம்பிரகாஷ், சந்திரஜித் யாதவ், டி.பி.யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் போன்றவர்கள் எல்லாம் வடபுலத்தில் ஆதரவுக் கரங்களை நீட்டினர். (வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது அமைச்சரவையில் இருந்த ராம்விலாஸ் பஸ்வான்தான் மண்டல் கமிஷன் பரிந்துரையை நாடாளு மன்றத்தில் முன்மொழிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது).

குடியரசுத் தலைவராக கியானி ஜெயில்சிங் இருந்தார் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறோம். அவர் நமக்கு ஆதரவாகவும் இருந்தார்.

குடியரசுத் தலைவர் பதவிக்குப் பிறகு, தஞ்சாவூரில் நாம் நடத்திய மாநாட்டில் பங்கேற்று, மண்டல் குழுப் பரிந் துரையைச் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். (இந்தப் பிரச்சினையில் ஒரு பிரதமர் செய்ய வேண்டிய பணிகளைவிட வீரமணி அதிகம் செய்திருக்கிறார் என்று பாராட்டினார் கியானி ஜெயில் சிங்).

மத்திய அமைச்சராகவிருந்த ஆர். வெங்கட் ராமனிடம் மண்டல் குழுப் பரிந்துரையை செயல் படுத்துவது தொடர்பாக பொறுப்பு இருந்ததால் அவரையும் டில்லியில் சந்தித்தோம்.

பி.பி. மண்டல் தலைமையிலான குழு அமைக்கப் பட்டபோது, அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எவரும் உறுப்பினர் இல்லை. சமூகநீதி மண்ணான தந்தை பெரியார் பிறந்த மண்ணிலிருந்து பிரதிநிதித்துவம் இல்லையா என்று சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்குக் கழகத்தின் சார்பில் தந்தி கொடுத்தோம். சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு. சண்முகம் அவர்களின் சகோதரருமான கே.சுப்பிரமணியம் பிறகு அக்குழுவில் சேர்க்கப்பட்டார்.

சென்னை பெரியார் திடலில் எங்களைப் பலமுறை சந்தித்து இருக்கிறார். சென்னை விருந்தினர் மாளிகையில் அவர் வந்து தங்கியபோதும் சந்தித்து இருக்கிறோம். பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து இருக்கிறோம்.

பி.பி. மண்டலும், அவர்தம் குழுவினரும் சென்னை வந்தனர். அப்பொழுது  முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். - மண்டல் குழு உறுப்பினர்களை மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பதற்காக ஒரு சிறிய அறை மட்டும்தான் ஒதுக் கப்பட்டது; அப்பொழுது இதுகூட பிரச்சினையானது.

பெரியார் திடலில் அக்குழுவினருக்கு வரவேற்பு விழா நடத்தப்பட்டது (30.6.1979).

Òநாங்கள் அறிக்கையைச் சிறப்பாகவே தயாரித்து மத்திய அரசிடம் அளிப்போம். ஆனால் அதனைச் செயல் படுத்துவார்கள் என்பதில் உறுதியில்லை. ஏன் எனில் எங்களுக்கு முன் - காகாகலேல்கர் தலைமையிலான முதல் ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம் அளித்த அறிக்கை என்ன ஆனது என்றே தெரியவில்லைÓ என்று வருத்தத்துடன் கூறிய பி.பி. மண்டல் அவர்கள் ஒரு முக்கிய கருத்தினைப் பதிவு செய்தார்.

Òஆற்றல் மிக்க பெருந் தலைவர் பெரியார் பிறந்த மண்ணுக்கு மட்டும் அதனைச் செயல்படுத்த வைக்கும் ஆற்றல் உண்டு என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம்Ó என்பவைதான் அந்த பொன்னான வரிகள்!

(அதேபோல, பிரதமர் வி.பி. சிங் அவர்கள் மண்டல் குழு பரிந்துரையை செயல்படுத்தும் பிரகடனத்தை வெளியிட்ட போது (7.8.1990) மறக்காமல் Ôதந்தை பெரியார் கனவு நனவாகியதுÕ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். பாபா சாகேப் பாரத ரத்னா, டாக்டர் அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகியோரை குறிப்பிட்டுப் புகழாரம் சூட்டினார்)

இந்த நேரத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். பெரியார் திடலில் பேசும்போது - பிற்படுத்தப்பட்டோருக்கான முதல் ஆணையம் காகாகலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்டது குறித்தும் பேசினா ரேமண்டல் - அதன் வரலாறு என்ன?

பிரதமராக நேரு அவர்கள் இருந்தபோது, மகாராட் டிரத்தைச் சேர்ந்த பார்ப்பனரான காகாகலேல்கர் தலைமை யில் முதல் ஆணையம் (28.1.1953) அமைக்கப்பட்டது. 30.3.1955 அன்று அறிக்கையும் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த அறிக்கை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்படவே இல்லை  என்கிறபோது - செயல்பாட் டுக்கு வருவதுபற்றி நினைத்துப் பார்க்க முடியுமா!

அதைத்தான் மிக்க வேதனை யோடு மண்டல் பெரியார் திடலில் சுட்டிக் காட்டினார்.

ஓர் அதிர்ச்சிகரத் தகவல் என்ன என்றால், பிற்படுத் தப்பட்டோருக்கு 70 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று அறிக்கையில் பரிந்துரை செய்துவிட்டு, பிரதமர் நேருவுக்குத் தனியாக ஒரு கடிதம் எழுதினார் கமிஷன் தலைவர் காகாகலேல்கர். அதில், “என்னுடைய கருத்து என்பது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதே. ஆனால், குழு உறுப்பினர்களின் கருத்து, ஜாதி அடிப்படையில் (சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்) இருக்க வேண்டும் என்று கூறியதால் நானும் அதற்கு ஒப்புதல் தந்து கையொப்பமிட்டு விட்டேன்” என்று பிரதமர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டார்.

பார்ப்பனர்களின் அறிவு நாணயம் எத்தகையது என்பதற்கு இது ஒன்று போதாதா? பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் ஆணையத்துக்குப் பார்ப்பனர் ஒருவரைத் தலைவராகப் போட்டால் அதன் கெதி இப்படியாகத்தானே முடியும்? நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகி விட்டது.

ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்துவோம் என்று கூறப்பட்டதன் அடிப்படையிலும், சமூகநீதி உணர்வாளர் வி.பி.சிங் என்ற மாமனிதர் பிரதமர் என்ற நிலையிலும் நாடாளுமன்றத்தில் விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

நான் திருச்சியில் இருந்தபோது, Ôஇந்துÕ ஏட்டின் செய்தியாளர் என்னைப் பேட்டி கண்டார்.

அப்பொழுது நான் அவரிடம் சொன்னேன் “Hurry The Mandal Report” என்று சொன்னேன்.

இந்து நிருபர் என்னைப் பார்த்துக் கேட்டார். இன்னும் மண்டல் ஆணை ரிப்போர்ட்டே வெளியாகவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி இப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்டார்.

நான் அவரிடம் சொன்ன பதில். மண்டல் ரிப்போர்ட் வெளியாகாமல் இருக்கும்போது உங்கள் ‘இந்து’ ஏட்டில் ‘Burry The Mandal Report’ என்று எழுதியுள்ளீர்களே, அது எப்படி என்று திருப்பிக் கேட்டேன் - அவரும் சிரித்து விட்டார்.

இன்னும் எவ்வளவோ தகவல்கள் உண்டு. உங்கள் காதலியிடம் பேசும்போதுகூட முதலில் மண்டல் கமிஷனைப் பற்றிப் ‘பேசுங்கள்’ என்று சொன்னேன்.

உண்மை வரலாறுகள் இவ்வாறு இருக்க, தி.க. வீரமணிக்கும் மண்டல் கமிஷன் அமலானதற்கும் என்ன சம்பந்தம் என்று தொலைக்காட்சிகளில் பி.ஜே.பி.யினர் அரட்டை அடிப்பதை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. (வீரமணியைப் பார்க்கும் போதெல்லாம் சமூகநீதி உணர்ச் சியை நான் பெறுகிறேன் என்று சொன்னவர் வி.பி.சிங்.)

மண்டல் குழுப் பரிந்துரைகளில் முதலாவதாக வேலை வாய்ப்பில் 27விழுக்காடு என்று சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் அறிவித்தார் 1990 ஆகஸ்டில். அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றது உயர்ஜாதிக் கூட்டம். அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஓர் ஆணையத்தின் பரிந் துரையை, நாடாளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்ட ஒன்றை, கொஞ்சம்கூட யோசிக்காமல் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்தது. (நீதிபதியின் கொடும் பாவியை எரிக்கும் போராட்டத்தை திராவிடர் கழகம் நடத்தியது).

இடைக்காலத் தடை யின் காரணமாக மேலும் மூன்றாண்டுகள் கால தாமதமானது.

இவ்வளவு போராட் டத்துக்கும், தடைகளுக்கும் பிறகு செயல்பட ஆரம் பித்தது.  கிட்டதட்ட 27 ஆண்டுகள் கடந்த பிறகும் 27 விழுக்காடு இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட் டதா என்றால், இல்லை. 12 சதவீதத்தைத் தாண்டவில்லை.

அரசியல் சட்டத்தின் தலைவர் என்று மதிக்கப் படும் குடியரசுத் தலை வர் அலுவலகத்திலேயே 27 சதவீத ஆணை செயல் படுத்தப்படவில்லையே!

வேலை வாய்ப்பில் மட்டுமே பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு; தொடக்கத்தில் கல்வியில் இட ஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.

டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் (UPA) அர்ஜுன் சிங் - மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த போது கல்வியில் இடஒதுக்கீடு ஆணை நிறைவேற்றப்பட்டது (2006).  (அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றதன் காரணமாக மூன்று ஆண்டுகள் தடைப்பட்டன. 2009இல்தான் அது செயல் பாட்டுக்கு வந்தது) அதுவும் எப்படி? ஆண்டு ஒன்றுக்கு 9 சதவீதம் என்று மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் 27 சதவீதம் என்ற விசித்திர ஆணை.

சட்டங்கள் செய்தும், செயல்படுத்தாத நிலைக்கு என்ன தான் பரிகாரம்?

சுதர்சனம் நாச்சியப்பன் தலைமையிலான நாடாளு மன்ற நிலைக்குழு சில முக்கிய பரிந்துரைகளைக் கொடுத்தது.

இடஒதுக்கீடு சட்டப்படி செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கவனிக்கக் கண்காணிப்புக் குழு அமைக் கப்பட வேண்டும் என்றும், தவறு செய்யும் அதிகாரி களுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. எதையும் அதிகார வர்க்கம் கண்டு கொள்ளவேயில்லை - காரணம் எங்கும் நீக்கமறப் பரவி இருப்பது பார்ப்பன அதிகார வர்க்கம்தானே!

மத்தியில் இருக்கும் பா.ஜ.க. ஆட்சி என்பது அடிப் படையில் இடஒதுக்கீடுக்கு எதிரானது - அதைத் தந்திரமாக செய்து கொண்டுள்ளது.

அதே நேரத்தில் உயர் ஜாதியினரின் பொருளா தாரத்தில் நலிந்தோர் என்று கூறி 10 விழுக்காடு இடங்களை அளிக்கும் சட்டம் அவசர அவசரமாக நிறைவேற்றப்படுகிறது.

இதனுடைய விளைவு என்ன தெரியுமா? தாழ்த்தப் பட்டவர்கள் பெறும் மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண்கள் பெறுகின்ற சமூகத்தின் உயர் நிலையில்   உள்ள பார்ப்பனர்களுக்கு இடங்கள் கிடைத்துவிடும்.

இவ்வாண்டு அய்.ஏ.எஸ். தேர்வில் கட் ஆஃப் மார்க் விவரம்                         

பொதுப்பிரிவினர் - 751

பிற்படுத்தப்பட்டோர் - 718

தாழ்த்தப்பட்டோர் - 706

பழங்குடியினர் - 699

உயர் ஜாதி ஏழை EWS- 696

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரைவிட குறைந்த மதிப்பெண் பெறும் உயர்ஜாதியினர்க்கு குறைந்த அளவு கட் ஆஃப். ஸ்டேட் பாங்கு எழுத்தர் தேர்வில் பழங்குடியினருக் கான மார்க் வரையறை 53.75 உயர்ஜாதி பார்ப்பனருக்கோ 28.5  மார்க்.

இது தங்களுக்குப் பயன்படுகின்ற காரணத்தினால், பார்ப் பனர்கள் இப்பொதெல்லாம்  தகுதி, திறமை பற்றி பேசுவ தில்லை.

மத்தியில் இருக்கும் மோடி தலைமையிலான பிஜேபி அரசு யாருக்கானது என்று இப்பொழுது விளங்குகிறதா இல்லையா?

1925இல் தந்தை பெரியார் எச்சரித்த 'பிராமினோகிரசி' என்பது இதுதான்!

ஓர் ஆணை

1981 ஜனவரியில் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.

"இடஒதுக்கீடுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும்படி தூண்டினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இடஒதுக்கீடு பிரச்சினையில் பேச்சு வார்த்தைக்கே இடம் கிடையாது. (Not Negotiable). இதில் அரசின் கொள்கை தெளிவானது என்றது அந்த சுற்றறிக்கை.