ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அரியணை ஏறும் நாளில் தமிழகத்தை பீடித்துள்ள இருள் விலகும்: தி.மு.க. ஆட்சி எனும் இலக்கை அடையும் வரை ஓயக்கூடாது;
September 11, 2020 • Viduthalai • தமிழகம்

தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, செப். 11- திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

திமுக சிறப்பான வரலாற்றில் ஒரு பொருள் செறிந்த நாளாக மாறியிருக்கிறது செப்டம்பர் 9. திமுகவினருக்கு செப்டம்பர் மாதம் எப்போதுமே களிப்பும் ஊக்கமும் தரும் மாதம் தான். செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாள். செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்தநாள். அதே நாள் தான், நம் திமுகவும் பிறந்த நாள். திருவிழாவுக்கு முன் பந்தற்கால் நடுவது போல, இந்த முப்பெரும் விழாவுக்கு முன்பாக, செப்டம்பர் 9 சிறப்பான நாளாக அமைந்து விட்டது.

கரோனா காலத்தில் அரசியல் பணிகள் பலவும் முடங்கியுள்ள நிலையில், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள் இவற் றிற்கு அனுமதி இல்லாத சூழலில், 3500-க்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்ட பேரி யக்கத்தின் பொதுக்குழுக் கூட்டத் தைக் காணொலி வாயிலாக நடத் துவதென்பது சாத்தியமாகுமா என்கிற சந்தேகம் அனைத்துத் தரப்பிலும் இருந்தது. கேள்விக் குறிகளை ஆச்சரியக்குறிகளாகவும், ஆச்சரியக்குறிகளைக் கேள்விக்குறி களாகவும் மாற்றுகின்ற வலிமை, எளிய மக்களின் இனிய இயக்கமான திமுகவுக்கு உண்டு என்பதை, கடந்த 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து  நிரூபித்து வருகிறோம். காணொலி வாயிலான பொதுக்குழுவும் அப் படிப்பட்டதுதான்.

பொதுக்குழுவின் முக்கியத்து வம் என்பது, திமுகவின் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு என்பதாகும். அவர் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்றதால், அவர் வகித்து வந்த பொருளாளர் பத விக்கு டி.ஆர்.பாலு தேர்வு செய்யப் பட்டுப் பொறுப்பேற்றிருக்கிறார். மேலும் 2 துணைப் பொதுச் செய லாளர்களாக க.பொன்முடியும், ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டிருக் கிறார்கள். திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 13 தீர்மானங் கள் நாடாளுமன்றம், சட்டமன்றம் ஆகியவற்றில் குரல் கொடுப்பதன் வழி தீர்வு காணக்கூடியவையாக இருக்கின்றன.

நீதிமன்றங்கள் வழியே சட்டப் போராட்டம் நடத்தி தீர்வு காணக் கூடியவை உண்டு. எல்லாவற்றுக் கும் மேலானது மக்கள் மன்றம். ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் பேராதரவைத் தொடர்ந்து பெற்றுவரும் திமுக, எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர் தலில் வெற்றி பெற்று அரியணை ஏறும் நாளில் தமிழ்நாட்டைப் பீடித்துள்ள இருள் விலகும். உதய சூரியக் கதிர்கள் ஒளி வீசும். அதற் கான வெற்றிப்பாதையைத் திட்ட மிட்டு அமைத்து, நாளைய வெற் றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் காணொலி வாயிலாக மிகச் சிறப் பாக நடந்தேறியுள்ளது பொதுக் குழுக் கூட்டம். உங்களில் ஒரு வனாக இந்தத் தீர்மானங்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன். 

அவற்றை நிறைவேற்றிடும் வகையில் உங்கள் உழைப்பைத் தாருங்கள். ஒருங்கிணைந்து செய லாற்றுங்கள்.

திமுக மீது காழ்ப்புணர்வு கொண்டு வெறும் வாயை மெல்லு கின்றவர்களுக்கு, அவல் அள்ளிப் போடும் செயல்களைத் தவிர்த்து, மக்களிடம் சென்று களப்பணிகளை மேற்கொள்ளுங்கள். அடுத்து அமையவிருப்பது திமுக அரசு தான் என்ற மக்கள் மனதில் ஏற் கனவே எழுதப்பட்டுள்ள தீர்ப்பை, வாக்குப்பதிவு நாளில் உறுதிப்படுத் தும் வகையில் பணியாற்றிட சூளு ரைத்துக் களம் காணுங்கள். 7 மாதங்களில் திமுக ஆட்சி எனும் இலக்கை அடைந்து, அதனை நம் உயிர்நிகர் தலைவரின் ஓய்விடத்தில் காணிக்கை ஆக்குகின்ற வெற்றித் திருநாள் வரை நமக்கு ஓய்வில்லை. 

இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.