ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கு பாஜக ரூ.25 கோடி பேரமாம்!
July 12, 2020 • Viduthalai • இந்தியா

இராஜஸ்தான் காங். அரசை கவிழ்க்க பாஜக முயற்சி

முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்,ஜூலை 12, இராஜஸ் தானில் ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.25 கோடி தருவதாக பாஜக பேரம் பேசியதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார். இராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயல்வதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். இதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களை தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். மாநிலங்களவை தேர்தல் எந்த சச்சரவுமின்றி சுமூகமாக முடிந்தது. இந்நிலையில், தனது ஆட்சியை கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சிப் பதாக அசோக் கெலாட் மீண்டும் பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் கூறியதாவது: கரோனா பாதிப்பில் இருந்து மக்களை பாது காக்க நாங்கள் பாடுபட்டு வருகிறோம். ஆனால் பாஜக தொடர்ந்து பிரச்னையை ஏற்படுத்தி வருகிறது. எங்கள் ஆட்சி நடப்பதை பிரதமர் மோடியாலும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பல குழப் பத்தை விளைவிக்கிறார்கள். இதில் பாஜக அனைத்து எல்லையையும் மீறி விட்டது. எனது ஆட்சியை கவிழ்க்க தொடர்ந்து தனது முயற்சிகளை அதி கரித்து வருகிறது. கட்சி மாறுவ தற்கான எங்கள் எம்எல்ஏக்களுக்கு ரூ.25 கோடி தருவதாக அவர்கள் விலை பேசி இருக்கிறார்கள். முன் பணமாக ரூ.10 கோடியும், ஆட்சியை பிடித்ததும் ரூ.15 கோடி தருவதாகவும் பேரம் பேசியிருக்கிறார்கள்.

இது அவமானகரமானது. 2014இல் மத்தியில் பாஜ வென்ற பிறகு அவர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வந்தது. கோவா, வடகிழக்கு மாநிலங்களில் அவர்கள் எப்படி ஆட்சியை பிடித்தார்கள் என்பது அனைவரும் அறிந்த கதை. குஜராத்தில் மாநிலங்களவை தேர் தலின் போது, 7 காங்கிரஸ் எம்எல்ஏக் களை வளைத்து 2 எம்பி இடங்களை பிடித்தார். இதே பாணியை இராஜஸ் தானிலும் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் திட்டம் பலிக்க வில்லை.

எங்கள் ஆட்சி நிலையாக இருக் கிறது. அது மட்டுமல்ல, நிச்சயம் அய்ந்தாண்டு ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். பாஜகவின் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். வரும் தேர்தல்களில் மக்கள் அவர் களுக்கு சரியான பாடம் புகட்டு வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

2 பேர் சிக்கினர்

காங்கிரஸ் எம்எல்ஏக்களை கட்சி மாற வைக்க குதிரை பேரம் நடப்பதாக காங்கிரஸ் தரப்பில் சிறப்பு காவல் துறைக் குழுவிடம் புகார் அளிக்கப்பட் டிருந்தது. இதன்பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் தொலைபேசி உரையாடல்கள் மூலம் குதிரை பேரம் நடத்த முயன்றவர்கள் என்பது தெரிய வந்திருப்பதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.