ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை வீழ்த்தி
September 10, 2020 • Viduthalai • தமிழகம்

தளபதி மு.க.ஸ்டாலினை முதல் அமைச்சராக ஆட்சியில் அமர்த்துவோம்  : தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை , செப்.10அ.தி.மு.க. ஆட் சியை சட்டசபைத் தேர்தலில் வீழ்த் தவும், தளபதி மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஆட்சியில் அமர்த்தவும் அரும்பாடுபடுவது என்று தி.மு.க. பொதுக்குழு கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி.மு.க. பொதுக்குழுவில் 13 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.அதன் விவரம் வருமாறு:

* பெரியார், அண்ணா , கலை ஞரின் கொள்கை தடம் பற்றி வளர்ந்த, கட்சியின் மூத்த நிர்வாகி துரை முருகன் கட்சியின் பொதுச்செயலாள ராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதற்கு பொதுக்குழு தனது வரவேற்பையும், பாராட் டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. அதே போல பொருளாளராக தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக் கப்பட்டுள்ள க.பொன்முடி, ஆ. ராசா ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறது.

* கரோனா பேரிடர் காலத்திலும் சீரிய முறையில் உழைக்கும் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், கட்சியினர், தன்னார்வலர்கள், மனித நேயப் பண்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டும், வணக்கமும் தெரி விக்கப்படுகிறது.

* அருந்ததியினர் சமுதாயத்துக் கான உள் ஒதுக்கீடு சட்டம் அரசி தழில் வெளியிடப்பட்டதை பொதுக் குழு வரவேற்கிறது.

* மருத்துவ கல்வி இடஒ துக்கீடு தொடர்பாக தி.மு.க. தொடுத்த வழக்கில் இந்த தலைமுறையை மட்டுமின்றி, எதிர்கால தலைமுறை யையும் காப்பாற்றும் தொலைநோக்கு சிந்தனையும், சிறப்பும் கொண்ட இந்ததீர்ப்பை பெறுவதற்கு கலைஞர் வழியில் பாடுபட்டு, வழக்கில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலினுக்கு பாராட் டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

*  முதுகலை மருத்துவப் படிப்பில் கலைஞர் வழங்கியிருக்கும் உள் இடஒதுக்கீடு செல்லும் என்றும், அதில் குறுக்கிட இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை யென்றும் உச்சநீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பை பொதுக்குழு வரவேற்கிறது. 

* இந்திய குடிமை பணிகள் தேர்வு குறித்து பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை  நடத்தி, நியாயம் வழங்கி பிற்ப டுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தினரின் சமூகநீதி எந்தவித தடையுமின்றி,  தொடர்ந்து உறுதி செய்யப்பட வேண்டும்.

* நாடாளுமன்றம் கூடி, கூட் டாட்சி தத்துவம், சமூகநீதி, சமத்துவம் குறித்து அனைத்து மாநில கட்சிகளும் விவாதிக்கும் வரை, அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத் தும் நடவடிக்கைகளில் மத்திய பா.ஜ.க. அரசு ஈடுபடக்கூடாது என்றும், தமிழகத்தின்  இருமொழி திட்டத்துக்கு எதிரான இந்த கொள்கையை அ.தி.மு.க. அரசும் கடுமையாக எதிர்த்திட வேண்டும்.

* திபுதிய சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு, நிபந்தனையின்றி திரும்ப பெற்றிட வேண்டும். 

* அ.தி.மு.க. அரசின் ஊழல்களை கண்டுகொள்ளா மல் அவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கி, தமிழகத்தில் படு மோசமா னதோர் அரசு நடப்பதற்கு ஆக்கமும், ஊக்கமும் அளித்து, தமி ழகத்தின் உரிமைகளை பறித்து மக்கள் விரோத திட் டங்களை திணித் திடும் மத்திய பா.ஜ.க. அரசின் கபட முகத்தை மக்கள் மன்றத்தில் உணர்த்தி டும் ஜனநாயக கடமையை செவ் வனே ஆற்றுவதென இந்த பொதுக்குழு தீர்மானிக்கிறது.

* ஸ்டெர்லைட் ஆலை மூடும் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட் டோருக்கு விரைந்து நீதி கிடைத்திட வேண்டும்.

* கரோனா நோய் தொற் றிலிருந்து தமிழக மக்களை பாது காக்க இயலாமல் ஒவ்வொரு கட்ட ஊரடங்கின்போதும் நிர்வாக ரீதியாக தோல்வியடைந்து, மக்க ளுக்கு நிதி நிவாரணம்  வழங்கிட சிறிதும் அக்கறையற்ற அ.தி.மு.க. அரசுக்கு பொதுக்குழு கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள்கிறது. 

* மக்கள் விரோத, ஜனநாயக விரோத, சட்டவிரோத அ.தி.மு.க. ஆட்சியை சட்டப்  பேரவைக்கான பொதுத்தேர்தலில் வீழ்த்தவும், தி.மு.க.வை ஆட்சிபீடம் ஏற்றவும், தளபதி மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக ஆட்சியில் அமர்த்தவும், தமிழகத்தை மீண்டும் முன்னேற்ற வளர்ச்சி பாதையில் செலுத்தவும், அரும்பாடுபடுவதென இந்த பொதுக் குழு சூளுரை  மேற்கொள்கிறது.

* மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசும், விவசாயிகள் விரோத அரசாக செயல் பட்டு வருவதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.