ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சங்கிகளா திருந்துங்கடா...!
October 3, 2020 • Viduthalai • மற்றவை

தவறான  ஊடகங்களால் ஒரு நல்ல பிரதமரை தோற்கடித்து விட்டோமா !

2009 களில் திடீரென ஜெர்மனி, ஸ்பெ யின், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இன் னும் பல மேலை நாடுகளின் வங்கிகள் எல் லாம் திவாலாகியது. சீனாவில் உணவு பற் றாக்குறை ஏற்பட்டது. உலகமே பொருளா தார தேக்கநிலையால் ஸ்தம்பித்து நின்றது.  உலகம் முழுதும் சுமார் 80 மில்லியன் பேர் வேலை இழந்தனர்.

உலகின் பல துறைமுகங்கள் எரிவாயு தட்டுப்பாட்டை சந்தித்து செய்வதறியாது விழி பிதுங்கி நின்றன.  சரக்கு கப்பல்கள் நங்கூரம் போட்டு மாதக்கணக்கில் துறைமுகத்தை விட்டு அகலாமல் நின்றன. கச்சா எண்ணெய் விலை 160 டாலர்களை தொட்டு அரக்க முகம் கொண்டு பயமுறுத்தியது.

பல நாடுகளில் அனல்மின் நிலையங் களில் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதற் கிடை யில் போர் பதற்றங்கள் வேறு.

இந்தியா மட்டும் சீராக சென்று கொண் டிருந்தது. ஒரு கணம் அமெரிக்கா, ரஷ்யா வின் பார்வைகள் இந்தியாவின் பதற்ற மில்லா நிலையை கண்டு ஆச்சரியத்தில் மூழ்கின.

இந்தியாவில் ஒரே ஒரு வங்கி கூட திவா லாகவில்லை. வளர்ச்சி மற்றும் உற்பத்தி விகிதம் வழக்கம்போல சராசரி அளவில் உயர்ந்தது.

மேலை நாடுகளுக்கு சேவை செய்யும் மிஜி நிறுவனங்கள் மட்டும் அமெ ரிக்காவிடம் இருந்து ப்ரொஜெக்ட் வராத தால் தங்கள் ஊழியர்களை Layoff  செய்தது. வேறு யாரும் வேலை இழக்கவில்லை.

உணவு தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. சிறு நிறுவனங்கள் கூட இந்தியாவில் மூடப்படவில்ல.

இதற்கிடையில் ஊரக மேம்பாட்டுக் காக வாஜ்பாய் ஆட்சியில் உலக வங்கி யில் வாங்கிய கடனும் அடைக்கப்பட்டது.

இது அத்தனையையும் சாத்தியமாக்கிய அந்த மாமேதை இந்தியப் பிரதமரை, மூன்று அய்ரோப்பிய நாடுகளின் பிரதமர்கள் வந்து சந்தித்து நெருக்கடி நிலையை சமாளிக்க ஆலோசனைகள் கேட்டார்கள்.

பொருளாதார தேக்கநிலையை சமாளிக்க மிவிதி நடத்திய கலந்தாய்வில் சிறப்பு விருந் தினராக இந்திய பிரதமர் அழைக்கப்பட்டார். ஆம் உலகமே வியந்த அந்த தன்னிகரற்ற பொருளாதார மாமேதை Dr.மன்மோகன் சிங்.

அப்படிப்பட்ட மாமேதையை தூக்கி எறிந்து விட்டு வளர்ச்சி என்றப் பெயரில் மதவெறிக் கும்பல்களிடம் ஆட்சியைப்  பறி கொடுத்துவிட்டு.......!

இன்று ஒட்டுமொத்தமாக திவாலாகிக் கொண்டிருக்கின்றோம்.

வளர்ச்சி என்றப் பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள்.... இந்தியாவை வள ரும் நாடுகளின் பட்டியலிருந்தே தூக்க வைத்து விட்டு டீமானிடேஷன் என்று ஒட்டு மொத்த இந்திய மக்களையும் தன் நாட்டி லேயே அகதியாய் அலையவிட்டது  தான் இன்றைக்கு ஆட்சியிலிருப்பவர்களின் சாதனை.

- இணையத்திலிருந்து...