ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சங்கராச்சாரியைச் சரணடைய வைத்த சாகு மகராஜா
October 10, 2020 • Viduthalai • மற்றவை

மராட்டிய மாநிலத்தில் உள்ள கோல்காப் பூர் சமஸ்தானம் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் மய்யமாகவே ஒரு காலத்தில் இருந்தது. இந்த சமஸ்தானத்தின் மன்னராக இருந்த சாகு சத்ரபதி பார்ப்பனரல்லாதார் உரிமைக்காகப் பாடுபட்டார்.

1829 இல் பிரிட்டிஷ் அரசோடு ஓர்  உடன்படிக்கை செய்து கொண்டு கோல் காப்பூர் சமஸ்தானம், பிரிட்டிஷ் ஆளுகை யின் கீழ் கொண்டு வரப்பட்டது. அதன் காரணமாக மன்னரின் ராணுவம் கலைக்கப் பட்டது. ராணுவத்தில் இருந்தவர்கள் அனை வரும் பார்ப்பனரல்லாத மராத்தாக்கள். மராத்தாக்கள் ராணுவத்தில் சேர்ந்து சண் டை போட விரும்புவார்களே தவிர, வேறு எந்த வேலைக்கும் போக விரும்பமாட் டார்கள். எனவே, காவல்துறையைத் தவிர, வேறு எந்தத் துறையிலும் மராத்தாக்கள் இல்லை; அதே நேரத்தில 19 ஆம் நூற் றாண்டின் இடைக்காலத்திலிருந்து, பார்ப்ப னர்கள் அனைத்து நிருவாகத் துறைகளிலும் நுழைய ஆரம்பித்தனர்.   19  ஆம் நூற்றாண் டின் இறுதியில் கோல்காப்பூர் பகுதியில் எல்லாத் துறைகளிலும் பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடியது. பார்ப்பனரல்லாத மக்கள் இதைக் கண்டு கொதித்தனர்.

எனவே, அதிகாரச் செல்வாக்குமிக்க பார்ப்பனர்கள் ஓர் அணியாகவும், பார்ப்ப னரல்லாத மக்கள் ஓர் அணியாகவும் பிரிந்து நின்றனர்.

சிவாஜி பரம்பரையில் வந்த சாகு மகா ராஜா ஜோதிபா பூலேயின் தத்துவத்தால் மிகவும் கவரப்பட்டார். பூலேயின் குலாம் கிரி (அடிமைத்தனம்) எனும் நூல் மகா ராஜாவை மிகவும் ஈர்த்துவிட்டது. அதன் பிறகு பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத் துக்கு பாடுபடத் துவங்கினார்.

பார்ப்பனர்கள் மீது மகாராஜாவுக்கு வெறுப்பு வருவதற்கு மற்றொரு காரணம் உண்டு. சமஸ்தானத்தில் இருந்த வேத பார்ப்பனர்கள், மன்னர் ஒரு சூத்திரர் என்பதால் புராண ரீதியான சடங்குகளை நடத்தினரே தவிர, வேத ரீதியான சடங்கு களை நடத்தவில்லை. இது தனக்கு ஏற்பட்ட அவமானம் என்று மகாராஜா கருதினார். இதைத் தொடர்ந்து அரண்மனையில் எல்லா சடங்குகளையும் வேத அடிப்படை யிலேயே நடத்தப்பட வேண்டும் என்றும், அப்படி நடத்தாத பார்ப்பனர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும், 1901 ஆம் ஆண்டு உத்தரவிட்டார். அரண்மனை யில் தலைமைப் பண்டிதராக இருந்த பார்ப்பனர், இதற்கு அடிபணிய மறுத்தார். இதனால், மன்னர் அவருக்கு இனாமாக வழங்கிய நிலங்களைக் கைப்பற்ற உத்தர விட்டார். தலைமை அர்ச்சகப் பார்ப்பனர் செய்ததுதான் சரி என்று கூறினார். ஜெகத் குரு சங்கராச்சாரி; உடனே மகாராஜா, சங்கராச்சாரிக்கு இனாமாகத் தரப்பட்ட நிலங்களையும் கைப்பற்ற உத்தரவிட்டார். பம்பாய் அரசாங்கத்திடம் பார்ப்பனர்கள் முறையிட்டனர். எதுவும் நடக்கவில்லை. மகாராஜாவின் உத்தரவுக்கு பார்ப்பனர்கள் பகிரங்கமாக சவால்  விட்டதற்குக் காரணம் கோல்காப்பூர் சமஸ்தானத்தில் மட்டுமல்ல; பம்பாய் மாகாணம் முழுவதும் பார்ப்பனர் கள் முக்கிய பதவிகளில் இருந்ததுதான். கடைசியில் சங்கராச்சாரியும் பார்ப்பனர் களும்,  மன்னரிடம் சரணடைந்து வேதப்படி சடங்குகள் நடத்துவதாக அறிவித்து இனாம் நிலங்களைத் திரும்பப் பெற்றுக் கொண் டனர். மகாராஜாவின் இந்த நடவடிக்கை பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு எழுச்சி யூட்டியது. தொடர்ந்து 1902 ஆம் ஆண்டு மகாராஜா சமஸ்தான நிர்வாகப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடங்களை ஒதுக்க வேண்டும் என்று உத் தரவிட்டார். இந்த வகுப்புவாரி பிரதிநிதித் துவ உத்தரவுதான் இந்தியாவிலேயே முதன்மையானது. இதைப் பின்பற்றித்தான் தென்னக மாநிலங்களிலும் இத்தகைய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

- “The Justice Party” நூலிலிருந்து...