ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கோவை மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் தந்தைபெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா
August 20, 2020 • Viduthalai • கழகம்

காணொலியில் நடைபெற்ற கோவை மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

கோவை, ஆக. 20- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் 16.8.2020  அன்று மாநில அள வில் நடைபெற்ற மாவட்ட தலை வர்கள், செயலாளர்கள் கலந்துரை யாடல் கூட்டத்தைத் தொடர்ந்து குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப் பட்டு கோவை மாவட்ட கலந்துரை யாடல்  கூட்டம் காணொலிமூலம் நடைபெற்றது. கோவை மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமை யேற்று உரையாற்றினார். த.க.கவுத மன் வரவேற்றார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் சிறப் புரையாற்றினார்.

சிறப்புரையில் அவர் குறிப்பிட்ட தாவது, சுந்தராபுரம் பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து ராகுல் காந்தி அவர்கள் டிவிட் போடும் அளவிற்கு ஆசிரியர் வழிகாட்டுதல். அதை அப்படியே கோவை மாவட்ட கழகம் சரியாக தனது எதிர்ப்பை போராட்ட ஒருங்கிணைப்பை அனைத்து கட்சி மற்றும் அமைப்புகள் ஆதரவாளர்களை திரட்டி நடத்தி யது.

அந்த நபர்மீது காவல்துறை தேசிய பாதுகாப்பு சட்டபடி நடவடிக்கை எடுத்தது என்பவைகளை சுட்டிக் காட்டி நமது ஆசிரியர் வழிகாட்டு தல்படி அவர் என்ன செய்ய சொல் கிறாரோ அதை தொடர்ந்து செய்து முடிக்கும் மாவட்ட கழக தோழர் களுக்கும் பாராட்டுகள் என்றும், அடுத்து வரக்கூடிய தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை வெகுசிறப்பாக நடத்தவேண்டும்.  ஒவ்வொரு அணி யின் சார்பாக தனித்தனியாக பெரியார் பிறந்த நாள் சுவரொட்டிகள் கோவையில் அனைத்து பகுதிகளிலும் வெகுஎழுச்சியாக ஒட்டப்பட வேண் டும். அதேபோல சுவரெழுத்து பணி வாய்ப்புள்ள பகுதியில் சிறப்பாக செய்யவேண்டும். கழக தோழர்கள் அனைவரும் விடுதலை படிக்கவும் விடுதலையை பரப்பவும் நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். அதேபோல இந்த கரோனா காலகட்டத்தில் கழகத் தோழர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால் பயப்படத் தேவையில்லை. கருப்புச் சட்டையின ரின் உயிர் மிக முக்கிமானது. அவர்கள் பாதுகாக்க படவேண்டும். அந்த அள வில் எந்த நேரத்தில் எந்த பிரச்சாரம் செய்யவேண்டும் என்பது மிகவும் முக்கியம். ஓபிசி இட ஒதுக்கீடு, சமுக நீதி, சுற்றுசூழல் மதிப்பீட்டு வரைவு குறித்து ஆசிரியர் வழிகாட்டியபடி விழிப்புணர்வை ஏற்படுத்த மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யவேண்டும். மதவாத பிஜேபியின் மக்கள் விரோதக் கொள்கைகளை அம்பலபடுத்துவதே நமது ஒரே நோக்கம் என்பதை மன தில் வைத்து பிரச்சாரம் செய்ய தயா ராக வேண்டும் என்று  மாநில அள வில் மாவட்ட தலைவர் செயலாளர் கலந்துரையாடல் நடந்து முடிந்த 2 மணிநேரத்தில் சிறப்பாக ஒரு மாவட்ட கலந்துரையாடல் ஏற்பாடு செய்த மாவட்ட தோழர்களுக்கு வாழ்த்துகளை கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் அவர்கள் தனதுரையில் இந்த ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழா கோவை மாவட்ட முழுவதும் வெகுசிறப்பாக எழுச்சியோடு  நடத்தபடும் அதற்கான தொடக்கம் இந்த கலந்துரையாடல் என்பதை எடுத்துச் சொன்னார்.

தொடர்ந்து ‘அறிவுப் பூர்வமான ஆறு கேள்விகள் அனுபவப் பதில்கள்’ என்ற தலைப்பில்  பொள்ளாச்சி தி.பரமசிவம். சட்டக்கல்லூரி மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.பவதாரிணி. மகளிரணி கவிதா. சுய மரியாதை திருமண நிலைய அமைப் பாளர் வ.ராஜேஸ்வரி. பொதுக்குழு உறுப்பினர் திலகமணி. எட்டிமடை மருதமுத்து. மாணவர் கழகம் வெ.யாழினிஆகியோர் அறிவுப்பூர்வமான ஆறு கேள்விகள் அனுபவப் பதில்கள் என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி, மாநக ரத் தலைவர் புலியகுளம் க.வீர மணி.குணியமுத்தூர் பொறுப்பாளர் தருமன். சிவகுமார். பொள்ளாச்சி க.வீரமலை, மாணவர் கழகத் தோழர் கள் வெ.யாழினி. அபிஷேக் ராஜ், கிருஷ்ணன் மூர்த்தி, குறிச்சி ஆனந்த். புண்ணியமூர்த்தி ஆகியோர் உரை யாற்றினார்.

நிகழ்வில்  மாவட்ட அமைப்பாளர் மு.தமிழ்செல்வன், பகுத்தறிவாளர் கழகம் அக்ரி நாகராஜ், ஆட்டோ சக்தி, இருதயராஜ். மண்டல இளைஞ ரணி செயலாளர் ஆ.பிரபாகரன், மாநகர அமைப்பாளர் மே.பா.ரங்க சாமி. வெள்ளளூர் காளிமுத்து, வெங் கடேஷ். இலைக்கடை செல்வம். ஜோதி, பூங்குழலி. சுபாசினி. த.க. யாழினி. தி.ச.யாழினி. தி.ச.முகில், கோமள வள்ளி. அ.மு.ராஜா. இளை ஞரணி திராவிடமணி உள்ளிட்டோர் பங் கேற் றனர். இறுதியாக நன்றியுரை மண் டல செயலாளர் ச.சிற்றரசு வழங்கினார்.

தீர்மானம் 1

செப்டம்பர் 17 தந்தை பெரியார் அவர்களின் 142 ஆண்டு பிறந்த நாள் விழாவை எழுச்சியோடு கோவை மாவட்டம் முழுவதும் வெகு சிறப் பாக கொண்டாடுவது என்ற தீர் மானம் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம் 2

கோவை மாவட்டம் முழுவதும் வாய்ப்புள்ள பல்வேறு பகுதிகளில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சுவரெழுத்துப் பணி விரைந்து செய் வது என தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. தீர்மானங்கள் காணொ லியில் நடைபெற்ற இக்கலந்துரை யாடலில் நிறைவேற்றப்பட்டன.