ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கோர முகம் காட்டும் கோவிட் 19
September 5, 2020 • Viduthalai • தலையங்கம்

தொற்றுநோய் சுகாதார சேவைகள் மற்றும் வாழ்வா தாரங்கள் பேரழிவிற்கு உட்பட்டுள்ளதால், நாடு பேரழி விற்கு செல்கிறது. ஆனால் மோடி அரசு அதை முற்றிலு மாக மறுத்து தற்பெருமை பேசுவதிலேயே குறியாக உள்ளது.

இந்தியாவில் பருவமழை முழு வீச்சில் உள்ளது. மும்பை வீதிகள், பீகார் சமவெளிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் மற்றொரு வகையான நெருக்கடியாக, நோய், பசி மற்றும் இறப்பு ஆகியவை வேகமாக நெருங்கிக் கொண்டுள்ளது.

ஒரு நாளைக்கு பதிவு செய்யப்பட்ட புதிய கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா இப்போது மற்ற எல்லா நாடுகளையும் விட முன்னணியில் உள்ளது.

இப்போது இரண்டு நாடுகள் மட்டுமே தொற்று மற்றும் இறப்புகளில் நெருக்கமாக உள்ளன. தினசரி நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில்  பிரே சில் மற்றும் அமெரிக்கா ஆகிய இந்த இரு நாடுகளையும் விட இந்தியா பின்தங்கியுள்ளது.

மேலும், இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நோயாளி கள் எண்ணிக்கை, உண்மையான கரோனா நோய்த் தொற்று களின் எண்ணிக்கையை விட குறைவாகவே இருக்கக் கூடும்.  இந்தியாவின் வறுமை பாதித்த மாநிலங்களான ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் நிலைமை சிறப்பாக இல்லை. அவர்களுக்கு உதவிட மத்திய அரசு எவ்வித முயற்சியும் செய்யவில்லை. இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு ஒரு மாதத்திற்கு அய்ந்து கிலோ இலவச அரிசி - தானிய ரேஷன்கள் போன்ற தேசிய முடக்கத்தின்போது சில வரையறுக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனால் இப்போது மாநில அரசுகளின் பொறுப்பில் விட்டுவிட்டனர். மற்ற களங்களைப் போலவே, இந்திய அரசாங்கமும் அறிவுபூர்வமான செயலை விட மக்கள் தொடர்புகளில் அதிக கவனம் செலுத்துகிறது.

பல பத்திரிகையாளர்களைப் போலவே, அரசாங்கத் தின் நெருக்கடி செயல்பாடுகளை விமர்சிக்கும் மருத்துவர் கள் மற்றும் செவிலியர்கள் மிரட்டப்பட்டனர் அல்லது துன்புறுத்தப்படுகிறார்கள்.

எல்லாவற்றையும் நன்றாக இருப்பதாக பொது மக்களுக்கு உறுதியளிப்பதற்காக குழப்பமான புள்ளி விவரங்கள் வழக்கமாக பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, கரோனா தொற்று மீட்டெடுப்புகள் வரலாற்று உச்சத்தை 1.5 மில்லியனைத் தாண்டிவிட்டன என்று சுகாதார அமைச்சகம் சமீபத்தில் பெருமையாகக் கூறியது. ஆனால் அன்றாடம் வரும் தகவல்கள் மாறாக உள்ளன.

நிர்வாக அனுபவம் இல்லாமை, பொய்யின் மீதே அனைத்தையும் கட்டமைக்க முயலும் மத்திய அமைச்சரக சகாக்கள், அதே போல் உண்மைக்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், முக்கியமாக இந்த நெருக்கடி காலகட்டத்தில் மனிதாபிமான செயல்களை மேற் கொள்ள மோடி அரசுக்குத் திட்டங்கள் இல்லை என்று தெரிகிறது. ஒரு நெருக்கடியை மறுப்பது அதை மேலும் மோசமாக்குவதற்கான உறுதியான வழியாகும்.

கடந்த ஆறு மாதங்களாக கரோனா உலக மக்களைப் புரட்டிப்போட்டு விட்டது. தொடக்கத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் தீவிர நடவடிக்கைகள் காரணமாக தப்பிப் பிழைத்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட நாடுகளில் பின் வரிசையில் இருந்த இந்தியா முண்டியடித்து இரண்டாவது இடத்திற்கு வந்து விட்டது. இது பெருமைக்கு உரியதுதானா?

"விளக்கேற்றுங்கள், கைதட்டுங்கள்" என்றார் இந்திய பிரதமர். விளைவு என்ன? விஞ்ஞான விளக்கு உயரத்தில் வெளிச்சம் வீசும் ஒரு கால கட்டத்தில், மத மூடநம்பிக்கை இருளில் தள்ளித் தப்பிக்கலாம் என்ற போக்கு மக்கள் நல அரசுக்கு அழகல்ல - மக்கள் உயிருக்கு மட்டுமல்ல; இந்தியாவின் பொருளாதாரத்தின் உயிரும் ஊசலாடும் நிலை தான்.

மக்களை மடை மாற்றம் செய்ய வேண்டாம். உருப் படியான வழியில் பயணித்து மக்களையும், நாட்டின் பொருளாதாரத்தையும் காப்பாற்ற வேண்டியது இந்திய அரசின் கடமை!