ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கொரட்டூர் பகுதியில் காவிக்கும்பலின் அடாவடி செயலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த  இளைஞர்கள், மகளிர், பொதுமக்கள்
August 16, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஆக. 16- கொரட்டூர் பகுதியில் காவிக்கும்பலின் அடாவடி செயலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளைஞர்கள், மகளிர், பொதுமக்கள் அக்கும்பலின் செய லுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். இதுகுறித்து ஒருவர் கூறியுள்ளதாவது,

 நேற்று (15.8.2020) சுதந்திர தினம் அன்று அதிகாலையில் ஒடுக்கபட்ட மக்கள் வாழும் பகுதியான விநாயகர் கோயில் தெருவில் அம் பேத்கர் நூலகம் இயங்கிய பொது இடத்தில் காவி நிறம் பூசப்பட்ட கம்பம் நடப்பட்டு இருந்தது. நாங்கள் காலையில்தான் பார்த் தோம். யார் இதை நட்டது என்று விசாரிக் கும்போதுதான் தெரிந்தது,  இதன் பின்னால் இருக்கும் சதித் திட்டம். காவிக் கம்பத்தில் தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, அடுத்தநாள் காவிக் கொடியை ஏற்றுவதற்கு திட்டமிட்டு இருந்தார்கள். பகுதிமக்களாகிய நாங்கள் காவிக் கம்பத்தில் எப்படி தேசியக் கொடியை ஏற்றலாம்? கொடிக்கம்பம் மூவர்ணம் பூசப் பட்டு இருக்கும் அல்லது வெண்மை நிறம் பூசுவார்கள். இதுதான் பொதுவான நடை முறையாக இருக்கிறது. காவிக் கம்பத்தில் ஏற்றுவது தேசியக்கொடியை அவமதிக்கும் செயல் என்று மக்கள் ஒன்றுகூடி போராடி னோம். வெளியில் இருந்து வந்த பிஜேபி கும்பல், நாங்கள் அப்படித்தான் ஏற்றுவோம், தேசியக் கொடியில் இருக்கும் நிறம் எங்கள் காவி நிறம் இந்துத்துவா நிறம் என்று திமி ராக பேசினார்கள். நாங்கள் அனைவரையும் விரட்டி அடித்தோம் காவல்துறை தலையிட் டது. கம்பத்திற்கு வெள்ளை நிறம் பூசபட வேண்டும் என்று மக்கள் உறுதியாக நின்ற தால் பிஜேபி கும்பலில் ஒருவர் பெயின்ட் வாங்கிவந்து, அவர்களே வெள்ளை நிறம் பூசிய பின்பு கொடி ஏற்ற அனுமதித்தோம்.

நாங்களும் விடுதலைக்கு போராடியவர் களுக்கு வீரவணக்கம் செலுத்தி கலைந்து சென்றோம். மாலையில் கொடியை இறக்கி கொடிக் கம்பத்தை அகற்றிவிடுவதாக உறுதி அளித்தார்கள். நடந்த சம்பவத்தை புகாராக காவல்துறையிடம் வழங்கிவிட்டோம் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் நடந்த சம்பவங்களை விசாரித்து அனுப் பினார். அதற்குப்பிறகு பாஜக கும்பல் கொரட்டூர் காவல் நிலையத்தை முற்றுகை யிட்டு எங்கள் மீது புகார் அளித்து இருக் கிறார்கள். காட்சிகள் மாறுகிறது. தேசியக் கொடியை அவமதித்தக் கயவர்கள்மீது நட வடிக்கை எடுக்காமல் எங்களைக் குற்ற வாளியாக்க முயற்சி செய்தார்கள். இப்படி நடந்துகொண்டு இருக்கும்போது பாஜக கும்பல் ஊருக்குள் புகுந்து தேசிய கொடியை இறக்கிவிட்டு காவிக்கொடியை ஏற்ற சுமார் 100 பேர்கள் புகுந்துவிட்டார்கள். நாங்கள் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என்று திரண்டு விரட்டி அடித்தோம். காவல்துறை எந்த நடவடிக்கையும் அந்தக் கயவர்கள்மீது எடுக்கவில்லை. ஊருக்கு வெளியே ஏற்றப் பட்ட தேசியகொடியை மாலை 5.00 மணிக்கு முன்பாக இறக்கிவிட்டு பாஜக கொடியை ஏற்றிவிட்டார்கள் அந்த கயவர்கள். அனைத் துக் கட்சியும் சேர்ந்து போராட்டத்தில் இருக்கிறோம்.  எங்கள் ஊரை சேர்ந்தவர்களை மிரட்டி பனியவைக்கலாம் என்று முயன்ற அனைவரையும் மக்கள் ஒற்றுமையால் துரத்தி இருக்கிறோம். ஆனால் இது இத் தோடு முடியும் என்று தெரியவில்லை தேசிய கொடியை அவமதித்தவர்கள் அவர்கள். கொடி ஏற்றி இந்துத்துவா முழக்கம் போட் டவர்கள் அவர்கள். போராட்டத்தில் மத வெறியைத் தூண்ட முயன்றவர்கள் அவர்கள். வெளியூரில் இருந்து எங்கள் ஊர் இடத்தை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் அவர்கள்.  விடப் போவதில்லை நாங்கள்.

இவ்வாறு கொரட்டூர் விநாயகர் கோயில் தெரு பகுதிவாசிகள் கொந்தளித்துக் கூறு கின்றனர்.