ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
குருமூர்த்திக்கு வீரமணி ஃபோபியாவா , ‘அனுகூல சத்ரு'வா ஆசிரியர் வீரமணி
August 25, 2020 • Viduthalai • கழகம்

குருமூர்த்திக்கு வீரமணி ஃபோபியாவா?

‘அனுகூல சத்ரு'வா ஆசிரியர் வீரமணி?

* மின்சாரம்

இன்று வெளிவந்த ‘துக்ளக்‘ இதழில் (2.9.2020) வழக்கம் போல புனைவுகளும் உண்மைக்கு மாறான தகவல்களும் பார்ப்பனத்தன குடுமிச்சேட்டைகளும் கூத்தடிக்கின்றன.

இதுவரை ‘விடுதலையில் கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்கத் துப்பில்லாத ‘துக்ளக்Õ கும்பல் மேலும் மேலும் தமக்கே உரித்தான ‘கோயபல்சு’ தனத்தில் கும்மியடிக்கின்றது.

இதோ துக்ளக்:

கேள்வி: 1971 தேர்தலில் எதிரிகள் எப்படி நடந்து கொண்டனரோ, அப்படித்தான் இப்போதும் நடந்து கொள்கின்றனர். எனவே 1971 தேர்தல் முடிவுதான் 2021 பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று தி.க. வின் வீரமணி கூறுகிறாரே?

பதில்: 1971 தேர்தல் முடிவுதான் 2021லும் என்று வீரமணி கூறுகிறார். அப்படியென்றால் ஸ்டாலின் கதி அதோ கதிதான். சேலத்தில் ஊர்வலம் நடத்திய தி.க., 1971ல் காங்கிரஸை ஆதரித்ததால், காங்கிரஸ் தோற்றது.

இப்போது கந்தசஷ்டி கவசத்தைக் கேவலம் செய்யும் தி.க,, தி.மு.க.வை ஆதரிப்பதால், 2021ல் திமுக தோற்க வேண்டும். நிச்சயமாக வீரமணி ஸ்டாலினுக்கு அனுகூல சத்ருதான். 2021 தேர்தலில் ஸ்டாலின் ‘தயவு செய்து என்னை ஆதரிக்காதீர்கள்’ என்று வீரமணியைக் கெஞ்ச வேண்டி வந்தாலும் வரலாம்.

-‘துக்ளக்Õ (2.9.2020 பக்கம் 19)

தெரிந்தே திட்டமிட்டே திசைமாற்றிப் பேசும் திரிநூலின் புத்தி எது கொண்டு சாத்தினாலும் திருந்தப் போவதில்லை.

1971 தேர்தலில் தி.க. ஆதரித்ததால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோற்றதா? திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் பெரு வெற்றியைப் பெற்றதுகூட மே(ல்)தாவி குருமூர்த்திகளுக்குத் தெரியவில்லையா? அல்லது தங்களுக்கே உரிய பூணூல் புத்தியான திருகுதாளமா?

உண்மை என்னவென்றால், சட்டசபைத் தேர்தலில் மட்டுமல்ல; மக்களவைத் தேர்தலிலும்கூட 24 இடங் களில் போட்டியிட்ட திமுக 23 இடங்களிலும், 9 தொகுதி களில் போட்டியிட்ட காங்கிரசு 9 இடங்களிலும் வெற்றி பெற்றது என்பதை காலந்தாழ்ந்தாவது குருமூர்த்திகள் தெரிந்துகொள்ளட்டும்.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்றால் ‘துக்ளக்‘கின் புளுகு அதன் 19ஆம் பக்கச் செய்தியின் முகத்தில் - 31ஆம் பக்கச் செய்தி கரியைப் பூசி ‘கல்தா’ கொடுத்துள்ளது.

1971ல் தி.க. ஆதரித்த காங்கிரஸ் தோற்றது என்கிறார் திருவாளர் சாமிநாதன் குருமூர்த்தி அய்யர்வாள்! (19ஆம் பக்கம்)

31ஆம் பக்கக் கட்டுரையில் - 1971 தேர்தலில் திமுக வெற்றிக்குக் காரணங்கள் இரண்டு, ஒன்று எம்.ஜி.ஆர்., அடுத்தது ‘ஏழ்மையை ஒழிப்போம்‘ என்கிற கோஷம் இந்திராவின் சார்பில் இந்தியா முழுவதும் எதிரொலித்தது என்று எழுதப்பட்டுள்ளது.

எது உண்மை குருமூர்த்தியாரே?

‘துக்ளக்‘கில் 19ஆம் பக்க செய்தி உண்மையா? 31ஆம் பக்கத் செய்தி உண்மையா?

இந்திரா காங்கிரசின் ‘ஏழ்மையை ஒழிப்போம்Õ என்ற கோஷம் வெற்றிக்குக் காரணம் என்கிறது 31ஆம் பக்கம் - இந்திரா காங்கிரஸ் தோற்றது என்கிறார் - ‘துக்ளக்‘கின் 19ஆம் பக்கத்தில் கோயங்கா வீட்டுக் கணக்கப் பிள்ளையான கோயபல்ஸ் குருமூர்த்தி.

ஹி... ஹி... வாயாலா சிரிக்க முடியும்!

1971 தேர்தலில் ராமன் பிரச்சினையால் தி.க. ஆதரித்த தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் கந்தசஷ்டி பிரச்சினையால் 2021 தேர்தலில் தோற்கும் என்பது என்ன “லாஜிக்“? ரொம்பத்தான் மூளை குழம்பிப் போயிருக்கிறார்கள்.

இதே கேள்வி பதிலில் வீரமணி ஸ்டாலினுக்கு அனுகூல சத்ரு என்று கூறுகிறது துக்ளக்.

ஆர்.எஸ்.எஸ். பிஜேபிக்கு அனுகூல சத்ரு என்று வேண்டுமானால் கூறலாம்.

கடந்த பீகார் தேர்தலின்போது, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பாகவத் ‘இடஒதுக்கீடு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்Õ என்று சொல்லப் போய், பிஜேபி எண்ஜாண் உடம்பை ஒரு ஜாணாகக் குறுக்கி நெளிந்ததை வேண்டுமானால் அனுகூல சத்ரு என்று சொல்லலாம்.

திராவிடர் கழகமும், திமுகவும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார் அறிஞர் அண்ணா.

1967 தேர்தலில் திமுகவை தந்தை பெரியார் எதிர்த் திருந்தும் வெற்றி பெற்ற திமுக - அதன் தலைவர் அறிஞர் அண்ணா திருச்சியில் இருந்த தந்தை பெரியாரைத் தேடிச் சென்று ‘ஆசி’ பெற்ற வரலாறு தெரியுமா?

இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை என்று முதல் அமைச்சர் அண்ணா சட்டப் பேரவையிலேயே பிரகடனம் செய்த வரலாறு எல்லாம் குருமூர்த்தி வா(லு)ளுக்குத் தெரியுமா?

அந்தக் கால கட்டத்தில் கோயங்கா வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கணக்கப்பிள்ளை வேலை பார்த்துக் கொண்டு இருந்திருப்பார். 1949ஆம் ஆண்டுக்குப்பின் பெரியார் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தவில்லை என்று (துக்ளக்‘ 19.6.2019) எழுதி தன் அறியாமையை வெளிப்படுத்தியவர்தானே இவர்.

தொடக்கத்திலிருந்தே வீரமணியை விட்டு ஸ்டாலின் விலகி இருக்க வேண்டும் என்று குருமூர்த்தி எழுதி வந்திருக்கிறார்.அதற்கு திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் முதுகை உரிக்கும் சாட்டையடி பதிலைக் கொடுத்து விட்டார்.

“திராவிடர் கழகம் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்கும் எங்களுக்கு வழிகாட்டும்தான்” என்று பார்ப்பனர்களின் பட்டையை உரிக்கும் பதிலடியைக் கொடுத்து விட்டாரே தளபதி மு.க. ஸ்டாலின்.

(தஞ்சை திராவிடர் கழகம் நடத்திய சமூகநீதி மாநாட்டில் -24.2.2019).

இதற்கு முன்பே “நாங்கள் செல்லும் பாதையைத் தீர்மானிப்பது பெரியார் திடல்தான்” என்று மேலும் ஒருபடி சென்று குருமூர்த்தி கூட்டத்துக்கு முகத்தில் அறைந்ததுபோல பிரகடனப்படுத்திவிட்டாரே தளபதி. (‘முரசொலி’ 2.12.2018).

குருமூர்த்திகளின் உடலில் ஓடுவது ரத்தம்தான் என்றால் இந்த பித்துப் பிடித்த உளறல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

1971 - இவர்களின் குருநாதர் ஆச்சாரியார் ராஜாஜியே முயன்று மூக்கறுப்பட்ட நிலையில் இந்தக் கத்துக்குட்டிகள் எம்மாத்திரம்?

“இந்த நாடு ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது” என்று ஒப்புக் கொண்டு ராஜாஜி இரு கைகளையும் தூக்கிக் காட்டி சரண் அடைந்து விட்டாரே!

கடந்த மக்களவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி  தோற்கும் என்று குருமூர்த்திவாள் ஆரூடம் கணித்தாரே - முடிவு என்ன? மூக்கு உடைப்பட்டதுதான் மிச்சம். 2021 தேர்தலிலும் மூக்கு மட்டுமல்ல, முற்றிலுமே உடைப்படும். 2019 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணனைக் காட்டி கிடுக்கிப்பிடி போடலாம் என்ற திட்டம் தவிடு பொடியாக வில்லையா? துள்ள வேண்டாம் துக்ளக் கூட்டம்!

பரிதாபம்! குருமூர்த்திகளைப் பிடித்திருப்பது வீரமணி ஃபோபியா (phobia) - விளக்க முடியாத பேரச்சம்!