ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தடையின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்: தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
August 15, 2020 • Viduthalai • அரசியல்

சென்னை, ஆக. 15- குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை உண்டு எனும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்பை தடையின்றி நடைமுறைப் படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டா லின் வெளியிட்ட அறிக்ககை:

திராவிட இயக்கத்தின் அடிப் படை இலட்சியங்களை ஒட்டி, முத் தமிழறிஞர் தலைவர் கலைஞரின் ஆட்சிக்காலம் நெடுகிலும் பாலின சமத்துவத்தை உருவாக்கும் வகையில் அரசுப் பணிகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப் புகளில் மகளிருக்கு 33விழுக்காடு இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழு எனப் பெண்கள் தங்களின் உரிமை யைப் போற்றி வாழ்வதற்கானப் பல திட்டங்களை, இந்தியாவுக்கே முன் னோடியாக வழங்கினார். 1989இல் பரம்பரைக் குடும்பச் சொத்தில் மகன் களுக்கு இருக்கும் உரிமை போலவே, மகள்களுக்கும் உண்டு என்பதைச் சட்டமாக்கி, பெண்களுக்குச் சம உரிமை வழங்கினார் கலைஞர்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட மேல்முறையீட்டு மனு வினை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.அப்துல் நசீர், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு 11.-8.-2020இ-ல் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதில், “இந்து கூட்டுக்குடும்பச் சொத்தில் மகன் களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து வாரி சுரிமைச் சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல் லும். சொத்து பாகப்பிரிவினையில் இந்து வாரிசு உரிமைச் சட்டம் 2005 திருத்தத்துக்கு முன்பு தந்தை இறந் திருந்தாலும் அந்தக் குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதைப் போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு” என நீதிபதிகள் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளனர்.

பெரியாரும், அம்பேத்கரும் நடத் திய உரிமைப் போராட்டத்தை, அவர் களின் சிந்தனைகளைச் செயல்படுத் தும் வகையில், 31 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பச் சொத்தில் பெண் களுக்குச் சொத்துரிமை வழங்கி தலைவர் கலைஞர் நிறைவேற்றிய சட் டத்திற்கு உறுதியான அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் நாட்டு மக்கள் நம்பி வழங்கிய பெரும்பான்மை பலம் இருப்பதால், மக்களின் உரிமைகளை யும் உணர்வுகளையும் பற்றிக் கவலைப் படாமல், அவசரக் கோலத்தில், உழைக்கும் மக்களுக்கும் உழுவோர்க் கும் சுற்றுச்சூழலுக்கும் எதிரான பல சட்டங்களை, கரோனா பேரிடர் காலத்தில் பெருகிவரும் பதற்றத்தை யும் பாதிப்பையும் பற்றிப் பொருட் படுத்தாமல், அவசர அவசரமாக நிறைவேற்றி வரும் மத்திய பா.ஜ.க. அரசு, பெண்களின் உரிமையைக் காக்கும் இந்தக் குடும்பச் சொத்துரிமை தடையின்றி நிறைவேறிட உடனடி யாக நடவடிக்கைகளை மேற்கொண் டிட வேண்டும் என வலியுறுத்துகி றேன்.

அதேநேரத்தில், இந்திய நாடாளு மன்றம்-சட்டமன்றங்களில் பெண்க ளுக்கு இடஒதுக்கீடு வழங்கிட, அய்க் கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி யில் மேற்கொள்ளப்பட்ட முன்னெ டுப்புகள் நிறைவேறாத நிலை இன் னும் நீடித்துக் கொண்டிருப்பது, இந் திய சமுதாயத்திற்கே பின்னடை வாகும். முக்கியமான அந்தக் குறிக் கோளை நிறைவேற்றிட, மத்திய பா.ஜ.க. அரசு தனது பெரும்பான்மை பலத்தை மிகவும் ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள் கிறேன்.

இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழ்நாடு நிறைவேற்றிய பெண்களுக் கான சொத்துரிமைச் சட்டத்தை நாடு முழுவதும் சரியான வகையில் நடைமுறைப்படுத்திடவும், தலைவர் கலைஞர் தொடர்ந்து எழுதியும் பேசி யும் வலியுறுத்தி வந்த, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்க ளுக்கான இடஒதுக்கீட்டை நிறை வேற்றிடவும், மத்திய அரசுக்குத் தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு உரிய முறையில் அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும், ஏனைய அரசியல் கட்சிகளும் பெண் களுக்கான இந்த இடஒதுக்கீட்டினைக் கையிலெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், திமுக எப்போதும் துணை நிற்கும் என்பதையும், இத் தருணத்தில்  உறுதிமொழியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.