ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
September 4, 2020 • Viduthalai • கழகம்

கிருட்டினகிரி, செப். 4-' கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் (24-.8.-2020) திங்கட்கிழமை மாலை காணொலி வழியாக மாவட்டத் தலைவர் தா.அறிவரசன் தலைமையில் நடைபெற்றது.  மாவட்டச் செயலா ளர் கா.மாணிக்கம் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தொடக்க உரையாற்றினார்.

மாவட்டத் தலைவர்கள், செயலா ளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையை எடுத்துக்காட்டியும், பிஜேபி அரசின் மக்கள் விரோத போக்குகள் பற்றியும், தந்தை பெரியாரின் இன்றியமையாத் தேவைகள் பற்றியும், இந்த காலகட் டத்தில் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாளை எவ்வாறு சிறப்பாக கொண்டாடுவது பற்றியும் எடுத்து ரைத்தார்.

மேலும் இக்கூட்டத்தில் கிருட் டினகிரி ஒன்றிய தலைவர் தா.மாது, செயலாளர் கி.வேலன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் எல் அய்சி.சுப்பிரமணியம்,மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணித் தலைவர் ஈ.லூயிஸ்ராஜ்,கிருட்டினகிரி நகரச் செயலாளர் கோ.தங்கராசன், காவே ரிப்பட்டணம் மேனாள் ஒன்றிய செயலாளர் எல்அய்சி மனோகர், ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வெங்கடாசலம்,செயலாளர் நா.சதீஷ்குமார், அரசம்பட்டி பி.பிர தாப், பருகூர் ஒன்றிய அமைப்பாளர் கா.ஞானசேகரன், கீழ்குப்பம் கிளைத் தலைவர் க.பழனிச்சாமி தர்மபுரி மண்டல இளைஞரணி செயலாளர் வ.ஆறுமுகம்,மண்டல செயலாளர் கோ.திராவிடமணி, மண்டல மாண வர் கழக செயலாளர் மா.செல்ல துரை, மகளிரணி பிரியதர்சினி,மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன்,மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி ஆகியோர் உரைக்குப்பின் இறுதியாக மாநில அமைப்புச் செய லாளர் ஊமை.ஜெயராமன் அவர்கள் உரையாற்றினார். அதில் கழக தோழர்கள் இயக்க தோழர்கள் செயல்பாடுகள் பற்றியும்,ஒவ்வொரு தோழர்களும் முதலில் அவரவர் வீடுகளில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை எப்படி புத்தாடை அணிந்தும் இனிப்புகள் வழங்கியும்,வீடுகளில் அவரவர் வசதிக்கேற்ப உறவினர்களை அழைத்தும் விருந்து வைத்தும் அமர்க் களமாக கொண்டாடுவது பற்றியும் விரிவாக எடுத்துக்கூறினார்.தமிழர் தலைவர் அவர்களின் அறிக்கைகளை ஓவ்வொரு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதையும் எடுத் துக்கூறி நிறையுரையாற்றினார்.இறு தியாக கிருட்டினகிரி நகர மாணவர் கழக அமைப்பாளர் மா.தமிழ்மணி நன்றி கூறினார்.

தீர்மானம் 1

வருகின்ற செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை அனைத்து ஊர்களிலும் சிலைகளுக்கு மாலை அணிவித்தும்,சிலை இல்லாத இடங்களில் மாலை அணிவித் தும், இனிப்புகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப் படுகிறது.

  1. தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு கிருட்டினகிரி நகரில் மட்டும் 15 இடங்களில் நகர கழகத்தின் சார்பில் படம்வைத்து மாலை அணி விப்பது எனவும் ,கிருட்டினகிரி ஒன் றியம் தேவசமுத்திரம் கிராமத்தில் ஒன்றிய கழகத்தின் சார்பில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்காணிப்பு கேமரா பொருத்துவது எனவும்,இதற்கு மாவட்ட திராவிடர் கழகம் ஒத்துழைப்பு நல்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
  2. பருகூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநா ளில் சந்தூர், வெப்பாலம்பட்டி, காட்டுஅக ரம்,தொகரப்பள்ளி,ஜெக« தவி,அ ச்சமங்களம்,செந்தாரப்பள்ளி ஆகிய ஊர்களில் புதியதாக தந்தை பெரியார் படம் வைத்து மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகம் முழுஒத்துழைப்பு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது

கலந்துரையாடலில் தமிழில் பெயர் மாற்றம்

மாவட்ட கலந்துரையாடல் கூட் டத்தில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் கல்லூரி உதவி பேராசிரியராக பணி புரியும் ஆ.அரிசங்கர் என்பவர் இயக் கத்தில் புதியதாக தன்னை  இணைத் துக்கொண்டார்.அவர் பேசும்போது தான் 6 ஆண்டுகளாக தந்தை பெரி யாரின் புத்தகங்களை படித்து வருவ தாகவும், தந்தை பெரியாரின் கருத்து களை கல்லூரி மாணவர்களிடம் எடுத்துக்கூறி வருவதாகவும் தன் வாழ்நாள் முமுவதும் பெரியார் கொள்கைகளை மாணவர்களிடம் பரப்புவதாகவும் உறுதி கூறினார். மேலும் தன் பெயர் அரிசங்கர் என் பதை தமிழில் மாற்றிக்கொள்வதாக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமிழ முதன் என பெயரிட்டார்