ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காற்று மாசு அதிகரிப்பு காரணமாக இந்தியரின் வாழ்நாள் 5 ஆண்டுகள் குறையும்
August 4, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, ஆக. 4- காற்று மாசு அதிகரிப்பு காரணமாக இந்தியர்களின் சராசரி எதிர் பார்க்கப்படும் வாழ்நாள் 5.2 ஆண்டுகள் குறையும் என ஓர் ஆய்வு முடிவு தெரி விக்கிறது.

நகர்ப்புறங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு என்ற பெயரில் ஓர் அறிக்கையை அய்.நா. பொதுச் செயலாளர் அந்தோ னியோ குத்தேரஸ் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.

அதில், ஊரடங்கு காலத்தில் டில்லியில் நைட்ரஜன்டை ஆக்ஸைடு அளவு 70 சதவீதத்துக்கும் அதிகமாக குறைந்துள் ளது. அதே நேரம் இது நிரந்தரமானது அல்ல. ஊரடங்கு முடிவுக்கு வரும்போது காற்று மாசை குறைக்கவும், கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை தடுக்கவும் நட வடிக்கை எடுக்காவிட்டால், மீன்டும் காற்றுமாசு அதிகரிக்கும் என கூறப் பட்டுள்ளது.

இந்நிலையில், யுனிவர்சிட்டி ஆப் சிகாகோவின் எரிசக்தி கொள்கை நிறுவ னத்தால் (இபிஅய்சி) உருவாக்கப்பட்ட காற்று தர வாழ்வு குறியீடு (ஏக்யூஎல்அய்) அண்மையில் ஒரு தரவை வெளியிட்டுள்ளது. காற்று மாசு துகள்கள் மனிதனின் எதிர் பார்க்கப்படும் சராசரி வாழ்நாள் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை இந்தத் தரவு மதிப்பிடுகிறது. இந்த தரவின்படி கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் காற்று மாசு 42 சதவீதம் அதிகரித்துள்ளது. கரோனா தாக்கத்துக்கு முன்பு காற்று மாசு மனிதர் களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்தது.

எனவே, வேறு எந்த நாட்டிலும் இல் லாத அளவில் இந்திய மக்கள் தொகையில் 25 சதவீதம் பேர் காற்று மாசால் பாதிக் கப்பட்டுள் ளனர். இதனால், இந்தியர்களின் சராசரி எதிர்பார்க்கப்படும் வாழ்நாள் 5.2 ஆண்டுகள் குறையும் என ஏக்யூஎல்அய் தரவு தெரிவிக்கிறது.