ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காற்றில் பறக்கவிடப்படும் அரசு உத்தரவு - பொது இடத்தில் ஆக்கிரமிப்பு!
August 15, 2020 • Viduthalai • மற்றவை

வெள்ளகோவில் பகுதியில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட விநாயகர் கோவில்

சமூக அமைதியைச் சீர்குலைக்க வி.எச்.பி. - இந்து முன்னணி திட்டம்

வெள்ளகோவில்,ஆக.15, தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி நடைமுறை குறித்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், வெள்ளகோவில் பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து  இரவோடு இரவாக விநாயகர் கோவில் கட்டியுள்ளனர்.

அப்பகுதியில் வி.எச்.பி.,  இந்து முன்னணி அமைப்பினர் சமூக அமைதியைச் சீர்குலைக்கும் திட்டத் தில் இறங்கியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ள கோவிலில் பயணிக்கும் கரூர்-_கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரி வாக்கப்பணி நடைபெற்று வருகிறது.

உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வரு வதன் ஒருபகுதியாக வெள்ளகோவில் காவல் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவில் என்ற மதவழி பாட்டுத்தலம் கடந்த சில நாட்களுக்கு முன் அகற்றப்பட்டது.இந்நிலையில் கடந்த 13.08.2020 வியாழக்கிழமை அகற்றப்பட்ட இடத்திற்கு அருகிலேயே இரவோடு இரவாக தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்த மான இடத்தை ஆக்கிரமித்து மீண்டும் விநாயகர் கோவில் என்ற பெயரால் வி.எச்.பி.,  இந்து முன் னணியைச் சார்ந்தவர்கள் பூஜை, புனஸ்காரம், வழிபாடு  என்ற பெயரால் தேசிய நெடுஞ்சாலையில் வன்முறையைத் தூண்டும் வேலை களில் இறங்கியுள்ளனர். மேலும், ஆக் கிரமிக்கப்பட்ட பகுதியில் காவிக் கொடிகளைக் கட்டியுள்ளனர்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள "மதச்சார் பின்மைக்    கோட்பாட்டையும், அதனை மய்யப்படுத்தி நீதிமன்றங்கள்,  மத்திய,மாநில அரசுகளால் பிறப் பிக்கப்பட்ட உத்தரவுகளையும் அவமதிக்கும் விதமாகவும், தற்போது அமலிலுள்ள ஊரடங்கு உத்தரவு களுக்கு முரணாகவும், எதேச்சதி காரத்தோடு இரவு நேரத்தில் நடைபெற்றுள்ள இந்த அத்துமீறல் குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும்,காவல்துறை அதிகாரிகளிடமும் கழகத் தோழர்கள் முதற்கட்டமாக தகவல் தெரிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவரிடம் இப்பிரச்சினை குறித்து "விடுதலை" நாளிதழ் சார்பாக தொடர்பு கொண்டு கேட்டபோது மதவழிபாட்டு தல ஆக்கிரமிப்பை அகற்ற விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மதச்சார்பற்ற இயக்கங்கள் மற்றும் கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடி இப்பிரச்சினை குறித்து தொடர்புடைய துறை அதி காரிகளிடம் புகார் தெரிவிக்க ஒருங் கிணைந்து வருகிறார்கள். காவல் நிலையம்  அருகிலேயே தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து இரவோடு இரவாகக் கட்டப்பட்ட கோவிலால் வெள்ளகோவில் பகுதியில் சமூக அமைதி சீர்குலைந்து பதற்றம் நீடித்து வருகிறது.