ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காட்டுமிராண்டிகளின் கூடாரமாக மாறிவரும் பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள்
October 12, 2020 • Viduthalai • இந்தியா

வங்கிக்குச் சென்ற பெண்ணை பாலியல் வன்கொடுமை-கொல்ல முயற்சி; மகனை ஆற்றில் வீசி கொலை செய்த கும்பல்

பாட்னா, அக்.12வட மாநிலங்களில் குறிப் பாக பாஜக அதன் கூட்டணி ஆட்சி செய்யும் மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாகப் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 10 நாட்களில் 47 பாலியல் வன்கொடு மைகள் மற்றும் 23 கொலைகள் நடந் துள்ளது. ஆனால் அரசோ அதை ஆணவக்கொலை, கள்ளக்காதல் கொலை என்று மடைமாற்றி வரு கிறது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அன்று பீகார் மாநிலத்தில் ஒரு பாலி யல் வன்கொடுமை நிகழ்வு நடந் துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள புக்சர் மாவட்டத்தில் ஓஜாகா பரான் என் னும் ஊரில் ஒரு பெண் தனது 6 வயது குழந்தையுடன் வசித்து வந்தார்.   அந்த பெண் நேற்று (11.10.2020) பக் கத்து ஊரில் அமைந்துள்ள வங்கிக்குச் சென்றுள்ளார்.  அப்போது அங்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் பெண் ணையும், குழந்தையையும் கடத்தி சென்றுள்ளது.

அந்தக்கும்பல்அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள் ளனர். இந்த விவரத்தை அந்தப் பெண் வெளியே சொல்லலாம் என எண்ணிய அவர்கள் அப்பெண்ணையும், அவரது குழந்தையையும் கைகால்களைக் கட்டி அங்கு ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் வீசி உள்ளனர்.  அந்தப் பெண் செய் வதறியாது கூச்சலிட்டுள்ளார்.

அதைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அந்தப்பெண்ணை காப்பாற்றி உள் ள னர். ஆயினும், பெண்ணின் குழந்தை ஆற்று நீரில் மூழ்கி மரணம் அடைந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குழந் தையின் உடலை உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.  அந்தப் பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பீகார்மாநிலத்தில்விரைவில்தேர் தல் நடைபெற உள்ளது. ஆகை யால் இந்த விவகாரம் பெரிதாகத் தொடங்கியுள்ளது. இதை மடைமாற் றும் நோக்கத்தில் பெண்ணின் நடத்தை சரியில்லை என்று பீகார் மாநில பாஜகவினர் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மாநில முதல்வர் நிதீஷ்குமார் இது வரை கருத்து தெரிவிக்கவில்லை என் பது குறிப்பிடத்தக்கது,

2018 ஆம் ஆண்டு முசாபர்பூர் சிறுமிகள் காப்பகத்தில் இருந்த சிறுமிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்த போது 13 வயதிற்கு உட்பட்ட பல சிறுமிகளுக்குக் கருக்கலைப்பு செய்யப்பட்டது வெளிவந்தது.

இது தொடர்பாக மாநிலத்தின் சமூக நலத்துறை அமைச்சரும், பாஜக பிரமுகருமான மஞ்சு வர்மா மற்றும் அவரது கணவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தக் காப்பகத்தின் நிர்வாகியும் மஞ்சு வர்மாவின் உறவினர் என்று தெரியவந்த நிலையில், மஞ்சு வர்மா தலைமறைவானார்.  பின்னர் கைதாகி பிணையில் வெளிவந்த இவர், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக விற்கு ஆதரவாக பரப்புரை செய்தார்.

இந்நிலையில்தற்போதுமீண்டும் இவருக்குபகுசராய்தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள் ளது குறிப்பிடத்தக்கது.