ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கழகத்தில் இணைந்த புதிய தோழர்கள்
October 24, 2020 • Viduthalai • கழகம்

திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரில் நடைபெற்ற திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் க.விசாலாட்சி, பள்ளி மாணவர்கள் க.அசோக்குமார், கோ.ஆகாஷ் ஆகியோர் மாணவர் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு ‘இலட்சியத்தை நோக்கி' என்ற புத்தகத்தை மாவட்டச் செயலாளர் ச.இராசேந்திரன் அளித்து மகிழ்ந்தார்.

தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் நடைபெற்ற திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டத்தில், மாணவர்கள் தே.ம.அமுதன், எஸ்.இளவரசன், எஸ்.இனியன், எல்.நாராயணன், எ.அன்பரசு, எம்.சுதன் ஆகியோர் மாணவர் கழகத்தில் பொறுப்பேற்று செயலாற்ற முன்வந்தனர். அவர்களுக்கு மண்டல மாணவர் கழக செயலாளர் அ.சவுந்திரபாண்டியன் ‘பகுத்தறிவு சுடரேந்துவீர்' புத்தகம் அளித்து மகிழ்ந்தார்.