ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கல்வி உபகரணங்கள், புத்தகங்கள் வழங்கும்போது பள்ளிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்புக்கான நடைமுறைகள் அரசாணை வெளியீடு
July 12, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஜூலை 12- பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு விலை இல்லா புத்தகம், கல்வி உபகரணங்கள் வழங்கும்போது பின்பற்றவேண்டிய நடைமுறைகள் என்ன? என்பது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச்செய லாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21 கல்வி ஆண்டு பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கும் மாணவர்கள், கரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் வீட்டில் இருந்தபடியே படிப்பதற்கு உதவி செய்யும் வகையில் விலை இல்லா புத்தகம் மற்றும் வீடியோ வடிவிலான பாடத்திட்டம் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்க அரசு முடிவு எடுத்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் மாணவர்க ளுக்கு விலை இல்லா புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கும் போது பின்பற்றவேண்டிய நிலை யான இயக்க நடைமுறைகளை அரசு விதித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:

பாடப்புத்தகம் மற்றும் கல்வி உபகரணங்கள் மாணவர்கள் அல்லது அவர்களுடைய பெற்றோரிடம் வழங் கும்போது நீண்ட வரிசை ஏற்பட்டு விடாமல் இருக்க முன்கூட்டியே குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்யவேண்டும். குறிப்பிட்ட 1 மணி நேரத்துக்குள் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்லது அவர்களு டைய பெற்றோர் அழைக்கப்படக் கூடாது.

கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள மாணவர்கள், தனிமைப்படுத்துதல் முடிந்த பின்னரோ அல்லது நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னரோ பள்ளிக்கு வந்து வாங்கிக்கொள்ள அறிவுறுத்த வேண்டும்.

கல்வி உபகரணங்கள் வழங்கும் போது சமூக இடைவெளியைப் பின் பற்றும் வகையில் தரையில் வட்டம் வரையவேண்டும்.

மாணவர்கள் அல்லது அவர்களு டைய பெற்றோர் புத்தகம், கல்வி உபகரணங்களை வாங்க வரும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

பிளஸ்-2 மாணவர்களின் லேப் டாப்பில் கல்வி காட்சிப்பதிவு பதிவிறக்கம் செய்யும்போது மாணவர் களோ, அவர்களுடைய பெற்றோரோ நவீன பரிசோதனைக் கூடத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பிரத்யேக அதிகாரி ஒருவர் மடிக் கணினியை வாங்கிக்கொண்டு, அவர் களை உள்ளே அழைத்துச் சென்று விட்டு பின்னர் வெளியே அழைத்து வருவார்.

மாணவர்கள், அவர்களுடைய பெற்றோருக்காக 2 வகுப்பறைகள் சமூக இடைவெளி உடன் காத் திருப்போர் அறைகளாக பயன்படுத் தப் பட வேண்டும்.

புத்தகம் மற்றும் கல்வி உபகரணங் கள் வழங்குவதற்கு முன்பு பள்ளிக் வளாகம், மேஜை, நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்ட மரச்சாமான்கள், கதவு கள், ஜன்னல்கள் உள்பட பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். இந்த நடைமுறைக் கல்வி உபகரணங்கள் வழங்குவதற்கு முன்பு தினந்தோறும் பயன்படுத்தப்பட வேண்டும்.

கை கழுவும் வகையில் சோப்புத்  தண்ணீர் வசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேலும் கைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தும் கிருமி நாசினி வழங்கப்படவேண்டும்.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற் றோர் கைகளைச் சோப்பால் கழுவிய பின்னரே வளாகத்துக்குள் அனுமதிக் கப்படுவார்கள். கைகளை கழுவுவ தற்கு வசதியாக கிருமிநாசினி மற்றும் சோப்பு உள்ளிட்டவை பள்ளியின் நுழைவு மற்றும் வெளியேறும் வாசல் களில் வைக்கவேண்டும்.

கை கழுவும் பகுதிகள், கழிவறைகள் உள்பட அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிகளின் நிர்வாகம் தான் தங்கள் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவ தற்கு பொறுப்பு.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற் றும் அவர்களுடைய பெற்றோர் சுத்த மான முகக்கவசம் அணிவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்யவேண்டும். முககவசத்தை தொடுவதை குறைக்க வேண்டும். முகம் அல்லது முகத்தின் எந்தப் பகுதியையும் தொடுவதை தவிர்க்கவேண்டும்.

மேஜை, நாற்காலி உள்ளிட்ட மரச்சாமான்கள், படிகளின் பக்க வாட்டில் உள்ள கைப்பிடி, லிப்ட் உள்பட பிற தரைத்தளங்களைத் தொடுவதைத் தவிர்க்கவேண்டும்.

பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டையை எல்லா நேரத்திலும் அணிந்திருக்கவேண்டும். பள்ளி வளா கத்தில் கூட்டம் சேர்க்கக்கூடாது.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.