ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கல்வராயன் மலையில் பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகையில் பெரியார் பெயரைக் காவி வண்ணத்தால் அழிப்பதா
July 28, 2020 • Viduthalai • தமிழகம்

கல்வராயன் மலையில் பெரியார் நீர்வீழ்ச்சி பெயர்ப் பலகையில் பெரியார் பெயரைக் காவி வண்ணத்தால் அழிப்பதா?

மக்கள் கொதிப்பு - தி.மு.க. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு - போராட்ட அறிவிப்பு

கள்ளக்குறிச்சி,ஜூலை28, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையிலுள்ள பெரியார் நீர்வீழ்ச்சியின் பெயர்ப் பலகையில் சமூகவிரோதிகள் காவிச்சாயம் பூசியுள்ளனர். இந்நிகழ்வு கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது.  விழுப்புரம் தெற்கு மாவட்டச் செய லாளர் ஆ.அங்கயர்க்கண்ணி, சட்டமன்ற உறுப் பினர்கள் வசந்தம் க.கார்த்திகேயன், தா.உதயசூரியன் ஆகியோர் கடுங்கண்டனம் தெரிவித்து, போராட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருமதி.ஆ.அங்கையற்கண்ணி

விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்ட மன்றத் தொகுதி, கல்வராயன்மலையில் அமைந்துள்ள சுயமரியாதைச் சுடரொளி தந்தை பெரியார் நீர்வீழ்ச் சியில் அமைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகைகளில் தந்தை பெரியார் அவர்களின் பெயர்மீது சில விஷமிகள் காவி வண்ணத்தைப் பூசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

தமிழகம் முழுவதும் சில நாட்களாக, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களைக் கருத்து ரீதியாகவோ, தத்துவங்கள் ரீதீயாகவோ எதிர்கொள்ள முடியாத கயவர்கள், யாருமற்ற நேரங்களில் காவி வண்ணத்தை தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் அல்லது பெயர்ப்பலகையின்மீது பூசி தங்களது கோழைத்தனத்தை வெளிக்காட்டுகின்றனர்.

தமிழகத்தைச் சுயமரியாதை மண்ணாக்கிய தந்தை பெரியார் அவர்களை, இதுபோன்ற செயல்களால் இழிவுபடுத்திவிடலாம் என எண்ணும் மனநோயாளி களின்மீது இந்த அரசும், காவல்துறையும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மிகவும் ஆபத்தானது.

அ.தி.மு.க. அரசாலும், காவல்துறையாலும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது எனும் நினைப்பே இதுபோன்ற செயல்கள் தமிழகத்தில் தொடந்து நடைபெறக் காரணமாக உள்ளது.

உடனடியாக அரசும், காவல்துறையும் இதுபோன்ற கயமைச் செயல்களை செய்யும் கயவர்களைக் கைது செய்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்காவிடில், எங்களது தலைவர் தளபதி அவர்களின் ஆலோசனைகள் மற்றும் ஒப்புதல் பெற்று கையாலா காத அ.தி.மு.க. அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள் கிறேன்.

 

வசந்தம் க.கார்த்திகேயன்

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர் வீழ்ச்சியின் பெயர்ப் பலகைக்கு காவிச் சாயம் பூசியது காட்டுமிராண்டித்தனமானது.

கச்சிராபாளையம்-வெள்ளிமலை செல்லும் மலைப்பாதையில் குண்டியாநத்தம் அருகில் இயற்கை எழிலோடு பருவமழை காலத்தில் விழும் நீர்வீழ்ச்சியான பெரியார் நீர்வீழ்ச்சியின் பெயர் பலகைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று காவிச் சாயம் பூசியுள்ளனர். ஒட்டுமொத்தத் தமிழினமும் மானமும், அறிவும்பெற,சுயமரியாதையுடன் வாழ்ந்திட ஓய்வ றியாமல் தன் இறுதிமூச்சு வரை போராடிய பேரரறிவுச் சூரியன் தென்கிழக்காசியாவின்  சாக்ரட்டீஸ் தந்தை பெரியார் அவர்களின் சிலைகளின்மீது காவிச் சாயம் பூசுதல், செருப்பு மாலை  அணிவித்தல் போன்றவை தமிழகத்தின் ஓரிரண்டு இடங்களில் நடைபெற்றுள்ள  நிலையில்...

கடந்த 1971-_76ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில், பெரியார் நீர்வீழ்ச்சி என பெயர் சூட்டப்பட்ட நீர்வீழ்ச்சியின் பெயர்ப் பலகையில் உள்ள பெரியார் எனும் எழுத்துகளின்மீது காவிச் சாயம் பூசப்பட்டுள்ளது.  அத்தைகைய கொடுஞ்செயல் நமது  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந் திருப்பது மிகுந்த மன வேதனையையும், வருத்தத்தையும் தருகிறது. இந்த காட்டுமிராண்டித்தனம் கடுமையாக கண்டிக்கதக்கது.

தந்தைபெரியார் 21ஆம் நூற்றாண்டின் மாபெரும் சிந்தனையாளர், அவரது வாழ்வும், பணியும் போராட் டமும், பேச்சும், எழுத்தும், உழைப்பும் மிகவும் பின்தங்கியிருந்த தமிழகத்தின் சமூகச்   சூழலை மாற்றி யதுடன், அனைவருக்குமான கல்வி, சமத்துவ உரிமை, சமூக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் தந்தை பெரி யாரின் பங்கை எவரும் மறுக்க முடியாது. சமூகவியல் மற்றும் அரசியல் களங்களில் மட்டுமல்லாமல்,  இட ஒதுக்கீடு, சமூகநீதி ஜாதி, தீண்டாமை, மூடநம்பிக்கை, சடங்கு, பெண் உரிமை, மறுமணம், அரசியல் உரிமை தமிழ், தமிழ்நாட்டின் உரிமை ஆகியவற்றில் பெரியாரின் சிந்தனைகளோடு இன்றைய இளைய சமுதாயம் உடன்பாட்டுடன் பின் தொடர்வதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.  பக்தர்களாக, சமூகப் பிற்போக்குதனமுடையவராக உள்ள தமிழர்கள்கூட பெரும்பான்மையோர் பெரியாரின் ஒருசில நிலைப் பாட்டிலாவது ஒன்றிணைவதை நாம் காணமுடியும். அரசியல் களத்தில் தமிழ்நாட்டில் எப்போதும் காலூன்ற முடியாத  ஆரியக் கூட்டத்தின் தவறான முயற்சிகளால் தமிழகத்தில் இயல்பாய் எழும் எதிர்ப்புகள்தான்  பெரியார் விளைவு (றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ணியீயீமீநீt).

அதனால்தான் வடஇந்திய ஆரிய பாசிசம் யாரை முன்னிறுத்தி எத்தகைய வேடமிட்டு வந்தாலும் அவர்களை  தமிழகமக்கள் செல்லாக்காசாக்கி விடுகி ன்றனர். அதையொட்டியே அண்மைகாலத்தில் இது போன்ற, சமூகத்திற்குத் தொண்டாற்றிய தலைவர் களின் சிலைகளைச் சேதப்படுத்துவது, களங்கப் படுத்துவது போன்ற இழிசெயல்கள் நடைபெறுகிறது. இத்தகைய செயல்பாடுகள் மிகுந்த வருத்தத்தைத் தருகிறது.

அது மட்டுமல்ல, மாபெரும் போராட்டங்களை நடத்தி  உரிமைகளைப் பெற்றுத் தந்து சமுதாய மாற்றங்களை கொண்டுவந்த  தலைவர்களின் கொள்கைகளை, கருத்தை  ஏற்றுக்கொள்வதும் கடைபிடிப்பதும் அல்லது மறுப்பதும்  அவரவரது தனி உரிமையாகும். அதைவிடுத்து கருத்தை க்கருத்தால் எதிர்க்கத் திராணியற்று, தலைவர்களின் சிலைகளை அவமதிப்பது என்பது மனித நாகரிகத்திற்கு மாறான செயலாகும். மதத்தால், ஜாதியால் தமிழர்கள் வேறுபடாமல், தமிழர்கள் என்கிற ஒற்றைச் சொல்லில் பெருமிதம் கொண்டெழுகிற நமது  ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கவும் அதன்மூலம் தங்களது தமிழ்மொழி, தமிழின எதிர்ப்பு அரசியலைப்  பிழைப்பு வாதத்திற்காக முன்னெடுக்கும் சில தீய சக்திகள் போடும் திட்டங்களை, ஏமாந்து ஒருபோதும் தமிழினம் ஏற்காது என்பதையும், நமது  மண்ணில், சமூக ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்கும் விதமாக தந்தைபெரியாருக்கு அவமரியாதையை ஏற்படுத்திட நினைத்து பெயர்ப்பலகையில் காவிச் சாயம் பூசிய விஷமிகளை விரைந்து கண்டுபிடிப்பதுடன் அவர்களைப் பின்னாலிருந்து இயக்கும் சமூக விரோதி களையும், காவித் தீவிரவாதிகளையும் அடையாளம் கண்டு, சமூகத்தின் முன்னும், சட்டத்தின் முன்னும் நிறுத்தி அவர்களைத் தோலுரித்துக் காட்டிட, கடுமை யான விரைவான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசும்,  காவல்துறை உயர் அதிகாரிகளும் மேற் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

தா.உதயசூரியன்

சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தொகுதிக்கு உட்பட்டது கல்வராயன்மலை. இங்கே சிறிதும் பெரிதுமாக பத்திற்கும் மேற்பட்ட நீர் வீழ்ச்சிகள் உள்ளன. அதில் செல்லும் வழியிலேயே பெரியார் நீர்வீழ்ச்சி உள்ளது. திமுக ஆட்சியின் போதுதான் கலைஞர் அவர்களால் பெரியார்  நீர் வீழ்ச்சி புனரமைக்கப்பட்டது. பின்னாளில் இந்நீர் வீழ்ச்சியில் திமுக தலைவர் தளபதி அவர்கள் அவர்கள் நீராடி மகிழ்ந்த வரலாறும் உண்டு.

தற்பொழுது கல்வராயன் மலைப் பகுதியில் சுற்றுலா வரும் பொதுமக்கள் இந்த பெரியார் நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வார்கள். தற்போது இந்த பெரியார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வர தொடங்கி யுள்ளது. இந்தப் பகுதியில் வந்த சமூக விரோதிகள் சிலர் பெரியார் நீர்வீழ்ச்சி உள்ள பெயர் பலகையில் பெரியார் பெயருக்குக் களங்கம் ஏற்படுத் தும் வகையில் காவிச் சாயம் பூசி உள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. வனத்துறை பாதுகாப்பில் உள்ள இந்த பெயர் பலகைக்குச் சமூக விரோதிகள் காவி சாயம் பூசியது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வனத்துறை மற்றும் காவல்துறை கண் காணிப்பாளர் ஆகியோருக்குப் புகார் செய்யப்பட்டுள்ளது.

எனவே பெயர்ப்பலகைக்கு காவிச்சாயம் பூசிய சமூக விரோதியை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். தவறினால் எங்களது தலைவர் தளபதி அவர்களின் ஆலோசனைகள் மற்றும் ஒப்புதல் பெற்று கையாலாகாத அ.தி.மு.க. அரசைக் கண்டித்து மாவட்டச் செயலாளர் திருமதி.ஆ.அங்கயற்கண்ணி தலைமையில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப் பினர் டாக்டர்.பொன்.கவுதமசிகாமணி முன்னிலை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.