ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கலை, அறிவியல், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
July 24, 2020 • Viduthalai • தமிழகம்

சென்னை, ஜூலை 24- கரோனா தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக் கையாக கலை, அறிவியல்,

பொறியியல் கல்லூரி மாணவர் களுக்குச் செமஸ்டர் தேர்வுகள் ரத்து குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல் பட்டப்படிப்பு

படிக்கும் மாணவர்கள், பொறியியல் பட்டப்படிப்பு, பாலிடெக்னிக் டிப் ளமோ படிக்கும் மாணவர்களுக்கு தற்போது உள்ள சூழ்நிலையில் பரு வத் தேர்வு(செமஸ்டர்) நடத்துவது குறித்து ஆராய உயர்மட்டக்குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று கார ணமாக தேர்வு நடத்த இயலாதநிலை உள்ளதாக அந்த குழு தன்னுடைய பரிந்துரையைத் தெரிவித்து இருக்கி றது. எனவே மாணவர்களின் நலன் கருதி, பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல் விக் கவுன்சில் வழிகாட்டுதலின்படி மதிப்பெண் வழங்க முடிவு செய்யப் பட்டு உள்ளது.

அதன்படி, முதலாம், 2ஆம் ஆண்டு கலை, அறிவியல் இளங்கலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர் களுக்கும், பாலி டெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கும், முது கலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதேபோல், பொறியியல் இள நிலை பட்டப்படிப்பில் முதலாம், 2ஆம், 3ஆம் ஆண்டு படிக் கும் மாணவர்களுக்கும், பொறியியல் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாண வர்களுக்கும், எம்.சி.ஏ. முதலாம், 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் களுக்கும் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வில் இருந்து விலக்கு அளிக் கப்பட்டு இருக்கிறது.

இவர்கள் அடுத்த கல்வி ஆண் டுக்கு செல்ல அனுமதிக்கவும், இது குறித்து விரிவான ஓர் அரசா ணையை உயர்கல்வித்துறை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் முதல்- அமைச் சர் கூறி உள்ளார்.

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் களுக்கான செமஸ்டர் தேர்வில் மாநில அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா கூறுகையில், “இறுதி செமஸ்டர் தேர்வு தொடர் பாக முதல்-அமைச்சர், மத்திய அர சுக்கு க்கடிதம் எழுதி இருக்கிறார்.

எனவே இதுகுறித்த முடிவை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி அறிவிப்பார்“ என்று பதில் அளித்தார்.