ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனா வைரஸ் இதயத்தைத் தாக்கும்   மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
August 6, 2020 • Viduthalai • கரோனா

கொல்கத்தா, ஆக. 6- கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் குறித்து நாளும் புதுப்புது தகவல்கள் வெளி யாகி வருகின்றன. இதுவரையில் கரோனா வைரஸ் தொற்று ஒரு வரைத் தாக்கினால் அவரது நுரை யீரலையும், சிறுநீரகத்தையும் தாக்கு கிற வாய்ப்புகள் இருப்பதாக தகவல் கள் வெளியாகி இருக்கின்றன.

இதை ஆய்வுத் தகவல்களும் உறு திப்படுத்தி உள்ளன. இந்த நிலையில் இப்போதைய புதிய தகவல், கரோனா வைரஸ் தொற்றால் இதய மும் பாதிக்கப்படும் என்பதுதான். கொல்கத்தாவில் உள்ள பி.எம்.பிர்லா இதய ஆராய்ச்சி மய்யம் இதுகுறித்து முக்கியத் தகவல்களை வெளியிட்டு உள்ளது. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகிற 5 நோயாளிகளில் ஒருவருக்குச் சுவா சப் பிரச்சினை இருந்தாலும் இல் லாவிட்டாலும் இதயத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுபற்றி மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, “20 சதவீத கரோனா நோயாளிகள் தங்களுக்கு நெஞ்சு வலி இருப்பதாகவும், மூச்சுத் திணறல் இருப்பதாகவும் கூறுகின்ற னர். இது ஒரு கட்டத்தில் மார டைப்புக்கும் கொண்டுசெல்லும் வாய்ப்பு உள்ளது” என்கிறார்கள்.

இதுபற்றி பி.எம்.பிர்லா இதய ஆராய்ச்சி மய்யத்தின் தலையீட்டு இதயவியல் துறையின் இயக்குநர் டாக்டர் திமன் கஹாலி விளக்கி னார்.

“கரோனா வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய பிரச்சினை இத யத்தைப் பாதிக்கும். கரோனா வைரஸ் தொற்று இதயத்தை ஏன் சேதப் படுத்துகிறது என்பதற்கு சில வழி முறைகள் உள்ளன என ஆராய்ச்சித் தகவல்கள் கூறுகின்றன. கரோனா வைரஸ் தொற்று நேரடியாக இதய அமைப்பை காயப்படுத்துகிறது. கரோனா வைரஸ் நோயாளிகளும் தங்களுக்கு மார்பு வலி இருப்பதா கவும், மூச்சுத் திணறல் உள்ளதாகவும் கூறுகிறார்கள். இறுதியில் இது அவர் களை மாரடைப்பில் கொண்டு போய் விட்டு விடும் வாய்ப்பும் உள்ளது” என்கிறார் அவர்.

கரோனா வைரஸ் தொற்றுக் கடு மையாகப் பாதிக்கிறபோது, உடல் முழுவதும் வீக்கத்தை ஏற்படுத்துகி றது. அது இதயத்தைப் பாதித்தால், அதன் விளைவுகள் மோசமாகலாம். ஏற்கெனவே இதய நோய் இருப்ப வர்களுக்கு கரோனா வைரஸ் தொற் றும் ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. கரோனாவுக்கு முன் பாக இதயத்தில் பாதிப்பு இல் லாதவர்களுக்கும் கரோனா வைரஸ் தொற்றின் பிடியில் சிக்குகிறபோது இதயம் சேதமடைகிறது. இதய நோய் இருப்பவர்கள், கரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் இருப் பவர்களிடம் இருந்து எப்போதும் விலகியே இருக்க வேண்டும். தொடர்ந்து சிகிச்சை அவசியம். இன்புளூவென்சா, நிமோனியா நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

கரோனா வைரஸ் தொற்றுக்கான பாதிப்பு நம்மை அதிகமாக வந்து சேராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்? மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் எச்சரிக்கை வருமாறு,

உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்யவேண்டும். சீரான உணவு சாப்பிடவேண்டும், போதுமான அளவில் உறக்கம் வேண்டும். நண் பர்களுடனும், குடும்பத்தினருடனும் பேசும்போது தனிமனித இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும். மது அருந்தக்கூடாது. போதைப் பொருட்கள், புகையிலைப் பொருட் கள் பயன்படுத்தக்கூடாது. கரோனா பற்றிப் பேசுவதை குறைக்க வேண்டும். பதற்றம் தவிர்த்து மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை வீட்டில் இருங்கள். காய்ச்சல், மார்பு தொற்று என்றால் தனிமைப்படுத்தி கொண்டு, மருத்துவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். எப்போதும் முகக் கவசம் அணியவேண்டும்.

கைகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கண்களை, மூக்கை, வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும். கதவின் கைப்பிடிகள், சுவிட்சுகள், டி.வி. ரிமோட், செல் பேசி போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.