ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனா தொற்று தீவிரப் பரவலை எட்டியுள்ளது :  உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
July 25, 2020 • Viduthalai • கரோனா

ஜெனீவா, ஜூலை 25  கரோனா வைரஸ் தொற்று பரவல் சில நாடுகளில் தீவிர பரவலை எட்டியுள்ளதாக உலக சுகா தார நிறுவனத்தின் இயக்குனர் டாக் டர் டெட்ரோஸ் எச்சரித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதா னோம், ஜெனீவாவில் நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

கரோனா வைரஸ் தொற்று 1 கோடி பேருக்கும் மேலாக பாதித்து இருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் பலியாகி இருப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தில் பதிவாகி இருக்கிறது. எல்லா நாடுகளும் இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட் டுள்ளன. ஆனாலும் ஒப்பீட்டளவில் சில நாடுகளில் தீவிரமான பரவலை நாங்கள் தொடர்ந்து பார்க்கிறோம்.

உலகளவில் கரோனா பாதித்த 1 கோடி பேர் அல்லது மொத்த பாதிப் பில் மூன்றில் இரு பங்கினர் 10 நாடு களை சேர்ந்தவர்கள். மொத்த பாதிப் பில் பாதிப்பேர் வெறும் 3 நாடுகளை சேர்ந்தவர்கள்தான். நாங்கள் ஏற்க னவே கூறியதுபோல, ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள், சமூக ஈடுபாடு உள்ளவர்கள் இரு முக்கிய தூண்களாக இருந்து கரோனா தொற்றுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசைப் பொறுத்தமட்டில் பயன்படுத்த வேண்டிய கருவிகளில் ஒன்று சட்டம். இது கட்டாயப்படுத் துவது அல்ல. பொது ஆரோக்கியத் தையும், மனித உரிமைகளையும் பாதுகாப்பது ஆகும்.

உலக சுகாதார நிறுவனம், அய்.நா மேம்பாட்டு திட்டம் மற்றும் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கரோனா வைரஸ் தொற்று சட்ட தரவுத்தளம் ஒன்றை தொடங்கி உள்ளோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தியுள்ள சட்டங்களின் தரவுத்தளம் ஆகும்.

அவசர கால அறிவிப்புகள், தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள், நோய் கண்காணிப்பு, முக கவசம் அணி வதையொட்டிய சட்ட நடவடிக் கைகள், தனிமனித இடைவெளியை பராமரித்தல், மருந்து மற்றும் தடுப் பூசிகளை அடைதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

நன்றாக வடிவமைக்கப்பட்ட சட் டங்கள், வலுவான சுகாதார அமைப் புகளை உருவாக்க உதவும். பாது காப்பான மற்றும் பயனுள்ள மருந் துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது. பாதுகாப்பான பொது இடங் களை, பணித்தளங்களை உருவாக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இருந்தாலும், மோசமாக வடிவ மைக்கப்பட்டு, அமல்படுத்தப்படுகிற சட்டங்கள் ஓரங்கட்டப்பட்ட மக்க ளுக்கு தீங்கு விளைவிக் கின்றன. பாகுப்பாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை தடுக்கின்றன.

கரோனா வைரஸ் பரவலை தடுப் பதற்கும், உயிர்களைக் காப்பதற்கும் சிறப்பான வழி உண்டு. தனி நபர்களும், சமூகத்தினரும் தங்கள் சொந்த ஆபத்தை நிர்வகிப்பதற்கும், அவர் களின் சொந்த ஆரோக்கியத்தையும், அவர்களைச்சுற்றிலும் இருப்பவர் களை பாதுகாப்பதற்கான ஆதாரங் களை அடிப்படையாக கொண்ட முடிவுகளை எடுப்பதாகும்.

கரோனா தொற்று நோய் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. ஏராளமானோர் மாதக்கணக்கில் வீடுகளில் அடை பட்டுள்ளனர். மக்கள் தங்கள் வாழ்க் கையை தொடர விரும்புகிறார்கள் என்பது முழுமையாக புரிந்து கொள்ளத்தக்கது.

ஆனால் நாம் பழைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட முடியாது. ஏற் கனவே தொற்றுநோய் நமது வாழ்க் கையை மாற்றிப்போட்டிருக்கிறது. புதிய இயல்புக்கு மாறுவது, நமது வாழ்க்கையை பாதுகாப்பாக வாழ்வ தற்கான வழியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.