ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனா தொற்றினால் உயிரிழந்த முன் களப்பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம்
August 7, 2020 • Viduthalai • தமிழகம்

தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஆக. 7- கரோனாவால் இறந்த முன் களப்பணியாளர்களின் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு 25 லட்ச ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை நேற்று (ஆக.6) வெளியிட்டுள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர் கள், உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் மற்றும் வருவாய்ப் பணியாளர்களுக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு விலையில்லாமல் சிகிச்சையும் 2 லட்ச ரூபாயும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் உயிரிழந்த 28 முன்களப் பணியாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் வழங்கு வதற்கான அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

பள்ளிகள் திறப்பது குறித்த முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை: பள்ளிக் கல்வித்துறை

சென்னை, ஆக. 7- தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் எடுக்க வில்லை என்று பள்ளிக் கல்வித் துறை விளக்கமளித்துள்ளது.

ஊரடங்கால் கடந்த மார்ச் 16 முதல் பள்ளிகள், கல்லூரிகள் உட் படக் கல்வி நிறுவனங்கள் மூடப்பட் டுள்ள நிலையில், தற்போது, பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வரும் சூழலில், மீண்டும் பள்ளிகளைத் திறப்பது எப்போது என்று அனைத்து தரப்பிலும் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியான செய்தி தவறானது என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க வில்லை என்றும், சூழலைப் பொறுத்தே பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், சூழல் சரியான உடன், பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து முதல மைச்சர் முடிவு எடுப்பார் என்றும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தமிழில் அளிக்கப்பட வேண்டும்

பூவுலகின் நண்பர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, ஆக. 7- சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பிறகே மக்களிடம் கருத்து களைக் கேட்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசு, புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான 2020ஆம் ஆண்டிற்கான வரைவைக் கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று வெளியிட்டது. பொதுமக்கள் அந்தப் புதிய வரைவின் மீதுள்ள விமர்சனங்களையும் கருத்துகளையும் தெரியப்படுத்த ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்திருந்தது. மேலும், இந்த வரைவு அறிக்கையில், பல முக்கியத் திட்டங்களை மக்கள் கருத்துக் கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம் என்கிற அம்சமும் இடம்பெற்றுள்ளதால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில், சுற்றுச்சூழல் தொடர்பான விவகாரங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (ஆகஸ்ட்-6) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட பிறகே மக்களிடம் கருத்துகளைக் கேட்க வேண்டும்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மதுக்கடைகளைத் திறந்ததில் பொது நலன் ஏதுமில்லை: உயர்நீதிமன்றம் மதுரை கிளை

மதுரை, ஆக. 7- தேனி மாவட்டம் அன்னை சத்யா நகரில் உள்ள மறுவாழ்வு மய்யம் அருகில் உள்ள அரசு மதுபானக்கடையை (டாஸ்மாக்) மூடக்கோரி கோபால் என்பவர் சென்னை உயர்நீதி மன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ‘‘டாஸ்மாக் கடைகளின் வருவாயில் நலத்திட்ட உதவிகள் செய்தாலும் மதுக்கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை. டாஸ்மாக் கடைகளில், தனி மனித இடைவெளியை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதா? மதுபாட்டிலில் குறிப்பிட்டுள்ள விலைக்குத் தான் விற்கப்படுகிறதா?’’ என கேள்விகள் எழுப்பினர்.

பின்னர் வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.