ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனா தடுப்பூசி உருவாக்கத்தில் இந்தியாவின் பங்களிப்பு உலக சுகாதார அமைப்பு பாராட்டு
August 5, 2020 • Viduthalai • இந்தியா

ஜெனீவா,ஆக.5,  உலக சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குநர் டாக்டர் மைக்கேல் ரயான் கூறியதாவது:-

கரோனாவுக்கு சக்திவாய்ந்த தடுப்பூசி உருவாக்குவதில் இந்தியா முன்னணி இடம் வகிக் கிறது. அதுபோல், சக்திவாய்ந்த கரோனா தடுப்பு மருந்துகளையும் தயாரித்து வருகிறது. எனவே, மொத்தத்தில் பன்னாட்டளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால், இந்தியா பெரிய நாடு, அங்கு 130 கோடி மக்கள் வசிக்கிறார்கள் என்ற கண்ணோட் டத்தில் அதை பார்க்க வேண்டும். அதுபோல், கரோனா பரிசோதனைகளையும் இந்தியா நன்கு செய்துள்ளது. ஏற்கெனவே 2 கோடி மாதிரிகளை பரிசோதித்துள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 லட்சம் மாதிரிகளை பரிசோதித்து வருகிறது. கடந்த சில நாட்களாக பரிசோதனைகளை அதிகரித்து வருகிறது. கரோனா பரிசோதனை மய்யங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், இந்தியாவில் கிராமப்புறங்களிலும் கரோனா பரவி வருவது கவலை அளிக்கிறது. இளைஞர்களையும் தாக்கி வருகிறது. எனவே, நோய் பரவலை தடுப்பதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் ஆதனோம் கூறுகையில், கரோனா பிரச்சினையில் உலக நாடுகள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. எதிர் காலத்தில் என்ன நடப்பதாக இருந்தாலும், அது நம் கையில் தான் இருக்கிறது என்றார்.

 

கரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு ஏழு நாட்கள் காலதாமதம் ஆவது ஏன்?

அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

மதுரை, ஆக.5, மதுரையில் கரோனா தொற்று அதிகரிப்பது குறித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை நடத்தியது. கரோனா பரிசோதனை முடிவு வருவதற்கு ஏழு நாட்கள் காலதாமதம் ஆவது ஏன் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் பொதுமக்கள் பயன்படுத்திய மாஸ்க்குகள், கையுறைகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

கரோனா மருத்துவக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக ஏற்கெனவே விதிமுறைகள் உள்ளன. நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், பதிலளிக்க தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளித்து விசாரணை ஒத்தி வைத்தனர்.

 

இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு  நிரந்தர ஆணையம்

விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தல்

புதுடில்லி,ஆக.5, இராணுவத்தில் பெண் அதிகாரிகள் நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து விண்ணப்பங்களைத் தாக்கல் செய்ய இராணுவத் தலைமையகம் விரிவான அறிவுறுத்தல் வெளியீடப்பட்டுள்ளது.

இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்தை அமைப்பதற்கான அரசின் முறையான அனுமதிக் கடிதம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இராணுவத் தலைமையகம், இந்த ஆணையத்துக்கான பெண் அதிகாரிகளைத் தேர்வு செய்வதற்கான சிறப்பு எண் 5 தேர்வு வாரியக் கூட்டத்தைக் கூட்டும் நடைமுறையில் ஈடுபட்டுள்ளது.

பரிசீலனைக்காக, பாதிக்கப்பட்ட அனைத்து பெண் அதிகாரிகளும் தங்கள் விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யுமாறு, விரிவான அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட் டுள்ளன. மகளிர் சிறப்பு நுழைவுத் திட்டம் மூலமாக இராணுவத்தில் சேர்ந்த பெண் அதிகாரிகள், குறுகிய சேவை ஆணையப் பெண்கள் ஆகியோர் இதற்குப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும், தங்கள் விண்ணப்பப் படிவங்கள், விருப்பச் சான்றிதழ், மற்றும் இது தொடர்பான ஆவணங்களை இம்மாதம் 31ஆம் தேதிக்குள் ராணுவத் தலைமையகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சரியான ஆவ ணப்படுத்துதல் நடைமுறைக்காக, நிர்வாக அறிவுறுத்தல் களில், மாதிரிப் படிவங்கள் மற்றும் விரிவான சரிபார்ப்புப் பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளன.