ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனா சிகிச்சைக்கு புதிய ஊசி மருந்து
July 15, 2020 • Viduthalai • கரோனா

மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி

புதுடில்லி, ஜூலை 15- கரோனா வைரஸ் தொற்றை குணமாக் கும் மருந்துகளை கண்டு பிடிக்கவும், தடுப்பூசியை உரு வாக்கவும் உலகளா விய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பிற நோய் களுக்காக கண்டுபிடிக்கப் பட்ட மருந்துகளை மருத் துவ ரீதியில் பரிசோதித்து கரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில், சொரியா சிஸ் என்ற சரும பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்து கிற இட்டோ லிசுமாப் என்ற நோய் எதிர்ப்புச்சக்தி ஊசி மருந்தை, கரோனா நோயாளி களுக்கும் அவசர காலத்தில பயன் படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப் பாட்டு அதிகாரி மருத்துவர் வி.ஜி.சோமானி நேற்று முன் தினம் அனுமதி அளித்துள் ளார்.

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இந்த ஊசி மருந்தை பெங்களூருவை சேர்ந்த பயோகான் மருந்து நிறுவனம் தயாரித்து, சந்தையிடுகிறது.

இந்த ஊசி மருந்தை மிதமான மற்றும் கடுமையான நாள்பட்ட சொரியாசிஸ் பிரச்சினைக்கு மருத்துவர்கள் பரிந்து ரைத்து அளித்து வந் தனர். அல்சுமாப் என்ற வர்த்தக பெயரில் இந்த ஊசி மருந்து 2013ஆம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வருகிறது. உள்நாட்டில் தயா ரிக்கப்படுகிற இந்த மருந்து, இப்போது கரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள் ளது. முன்னதாக இந்த மருந் தின் 2ஆவது கட்ட மருத்துவ பரி சோதனை முடிவுகளை பயோகான் மருந்து நிறு வனம், இந்திய மருந்து கட் டுப்பாட்டு அமைப்பிடம் அளித்தது. இது குறித்து அந்த அமைப்பின் நிபுணர் கள் குழுவினர் விவாதித்தனர். விரிவான கலந்துரையாடல் மற்றும் குழுவின் பரிந்துரை களை கருத்தில் கொண்ட பின்னர், கரோனா வைரஸ் தொற்று காரணமாக மிதமா னது முதல் கடுமையான வரை யிலான சுவாசப் பிரச்சினை உள்ளவர்களுக்கு வழங்குவ தற்காக சந்தைப்படுத்த இந் திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தி ருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை யில் கூறி உள்ளது.

இந்த மருந்தினை சம்பந் தப்பட்ட நோயாளியின் சம்ம தம் பெற்றும், இடர்ப்பாடு நிர்வாக திட்டம் வகுத்தும், மருத்துவமனை அமைப்பில் மட்டுமே பயன்படுத்த வேண் டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தானது தற்போது மருத்துவ சோதனையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படு கிற பிற மருந்துகளை விட விலை மலிவானது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

நாடு முழுவதும் 8 லட்சத் துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்து, தற்போது 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிற சூழலில் இந்த இட் டோலிசு மாப் ஊசி மருந்தை, கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப் பது குறிப்பிடத்தக்கது.