ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனாவில் இருந்து தப்பிக்கச் சுய பாதுகாப்பு அவசியம் தமிழக மக்களுக்கு தளபதி மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
August 13, 2020 • Viduthalai • அரசியல்

சென்னை, ஆக.13 கரோனாவில் இருந்து தப்பிக்க, தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத் துள்ளார்.

கரோனா ஊரடங்கு கண் துடைப்பு நாடகம். எனவே தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக் கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கரோனா நோய்த் தொற்றா ளர்களின் எண்ணிக்கை மாநில அள வில் 3 லட்சத்திற்கும் அதிகமாகவும், சென்னையில் 1 லட்சத்தையும் தாண் டியிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. 3 நாளில் போய் விடும், 10 நாளில் குறைந்து விடும், இது பணக்காரர்கள் வியாதி என்றெல்லாம் ஏனோதானோ என்று பொறுப்பற்ற முறையில் பேசினார் முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி.

திறமையான நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முறையாக எடுக்க முடியாமல், வெற்று நம்பிக்கையை ஊட்டி, மக்களை நட்டாற்றில் தவிக்க விட்ட அவர் தலைமையிலான அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வி இன் றைக்கு இந்திய அளவில் கரோனா நோய்த் தொற்றில் இரண்டாவது பெரிய மாநிலமாக உருவெடுத்து தமிழ்நாட்டிற்கு அவப்பெயரையும், தமிழக மக்களுக்குப் பெரும் பதற் றத்தையும் தேடித் தந்து விட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டை மூடியதில் தாமதம், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி டாஸ்மாக் கடை களைத் திறந்ததில் அவசரம், ஊரடங்கு காலத்தில் 12ஆ-ம் வகுப்பு மாணவர்களைத் தேர்வு எழுத வைத்தது, கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் உயிர்த்தியாகம் செய்த முன்களப் பணியாளர்களுக்கு அறிவித்த ரூ.50 லட்சம் இழப்பீட்டை ரூ.25 லட்சமாகக் கருணையின்றிக் குறைத்து இன்றுவரை ஒருவருக்குக் கூட இழப்பீடு வழங்காமல் அலைக்கழிப்பது, உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கும் அறிவிப்பைக் காற்றில் பறக்க விட்டது, கரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு நோய்க்குள்ளான ஆயிரக்கணக்கான முன்களப் பணியாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக அறிவிக் கப்பட்ட ரூ.2 லட்சத்தை இதுவரை வழங்காதது எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது கூட 1.5 லட்சம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இறுதியாண்டுத் தேர்வை நடத்தியே தீருவோம் என்று அடம் பிடிப்பது என்று முதல்-அமைச்சர் மாநிலப் பேரிடர் தலைவர் என்ற முறையில் செய்த அனைத்து நிர்வாக தோல்வி களுக்கும் தனியாக ஒரு பெரிய அகராதியே வெளியிடலாம்.

கரோனா பரவி ஏறக்குறைய 7 மாதங்கள் கழித்து இப்போது தான் முதல்-அமைச்சர் உண்மை நிலவரம் உணர ஆரம்பித்திருப்பது போல் பேசத் தொடங்கியுள்ளார். கள்ளக் குறிச்சியில் பேசிய முதல்-அமைச்சர், தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவி இயல்பு நிலை கடுமையாகப் பாதிக் கப்பட்டுள்ளது என்ற உண்மையை ஒப்புக் கொள்ளத் தொடங்கியிருக் கிறார். ஆகவே இதுவரை பிரதான எதிர்க்கட்சி தலைவராக, தமிழ் மக் களின் பாதுகாப்பு கருதி, நான் முன் வைத்த பல்வேறு ஆக்கப் பூர்வமான ஆலோசனைகளை ஏற்கவில்லை என்றாலும் இனியாவது மக்களின் பாதிப்பைத் தயவு செய்து எண்ணிப் பாருங்கள். குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம், உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கி, 3 லட்சத்தைத் தாண்டியுள்ள கரோனா பாதிப்பு மேலும் சில லட்சங்களைத் தொட்டு விடாமல் இருக்க அனைத்து மருத்துவப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற் பாடுகளையும் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பள்ளி _ -கல்லூரிகள், பொதுப் போக்குவரத்து, கோவில்கள் தவிர எல்லாம் செயல்பட அனுமதித்து விட்டு, இதனை ஊரடங்கு என்று சொல்வதைப் போல சட்டக் கேலிக் கூத்து இருக்க முடியாது. இந்த ஊர டங்கைக் கண்துடைப்பு நாடக மாகவே மக்களில் பெரும்பாலான வர்கள் நினைக்கத் தொடங்கி விட் டார்கள். இந்த கண்துடைப்பு நாட கத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது என்று மக்கள் கேட்கிறார்கள்.

மதிப்பிற்குரிய தமிழக மக்களே! அனைத்திலும் தோல்வியடைந்து விட்ட அ.தி.மு.க. அரசை இனியும் சிறிதுகூட நம்பியிருக்காமல் கரோ னாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள சுய பாதுகாப்பு நடவடிக் கைகளில் கவனமாகவும், எச்சரிக்கை யாகவும் இருக்க வேண்டும். அது ஒன்றுதான் உயிர்ப்பாதுகாப்புக்கான ஒரே வழி என்று தோன்றுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.