ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட வேண்டும்
July 24, 2020 • Viduthalai • தமிழகம்

உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 24- கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. இதற்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல் இருப்பதே காரணமாகக்  கருதப்படுகிறது.

இந்நிலையில், கரோனா தொற்று பாதித்து, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய வர்களுக்கு மீண்டும் தொற்று பாதிக்காமல் இருக்கும் வகை யில், நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை மருந்துகளை வழங்கவேண்டும் எனவும், 15 நாட்கள் இடைவெளியில் மீண் டும் மருத்துவப் பரிசோதனை செய்து நோய்த் தொற்று இல்லை என்பதை உறுதி செய்யவும் உரிய வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி, மக்கள் பணியில் மக்கள் என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் மனோதிடத்தையும், நம்பிக் கையையும் அதிகரிக்கும் வகை யில் தகுந்த மனநல ஆலோ சனைகளை வழங்க வேண்டும் எனவும், குணமடைந்தவர்கள் மீண்டும் தங்களை பரிசோதித் துக்கொள்ள பிரத்யேகமாக மருத்துவமனையை அறிவித்து, தொடர் சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, உலக சுகாதார மய்யத்தின் வழிகாட்டுதல்படி, கரோனா வால் பாதிக்கப்பட்டு குண மடைந்து வீடு திரும்பியவர் களுக்கு மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுக ளுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.