ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனாவால் விழிப்புணர்வால் மருத்துவக் காப்பீட்டில் 130 திட்டங்கள் அறிமுகம்
August 21, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி,ஆக.21. கரோனா பரவல் காப்பீடு சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பரவலுக்கு பிறகு, மருத்துவக் காப்பீட்டில் மக்கள் அதிக கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். இதற்கேற்ப புதிய காப்பீடுகளுக்கு இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (அய்ஆர்டிஏஅய்) ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, ஆன்லைன் காப்பீடு தொடர்பாக பிக்கி ஏற்பாடு செய்த மாநாட்டில் பேசிய, இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் டி.எல்.அலமேலு, ‘‘கடந்த 20 ஆண்டுகளில் சுமார் 500 மருத்துவக் காப்பீடு திட்டங்கள் அறிமுகம் ஆகியுள்ளன. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மட்டும் 130 புதிய காப்பீட்டுத் திட் டங்களுக்கு நாங்கள் அனுமதி அளித்திருக்கி றோம். ஏற்கெனவே, மோட்டார் வாகன காப்பீட்டை விட மருத்துவக் காப்பீடு சந்தை வளர்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டு இறுதியில், மோட்டார் வாகனக் காப்பீட்டுக்கும், மருத்துவக் காப்பீட்டுக்கும் இடையே உள்ள இடைவெளி இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது’’ என்றார்.

காப்பீடு பிரீமியத்தில் மோட்டார் வாகனக் காப்பீடு பங்களிப்பு 38 விழுக்காடாக இருந்தது. இது தற்போது 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், கடந்த ஆண்டு 30 விழுக்காடாக இருந்த மருத்துவக் காப்பீடு, தற்போது 33 விழுக்காடாக வளர்ச்சி அடைந்துள்ளது. கரோனாவுக்காக பிரத் யேகமாக ‘கரோனா கவசம்’ என்ற காப் பீட்டை அய்ஆர்டிஏஅய் அறிமுகம் செய் துள்ளது. இந்த காப்பீடு இது வரை 7.5 லட்சம் விற்றுள்ளது. இதுபோல் ‘கரோனா ரக்ஷக்’ 1.9லட்சம் பாலிசி விற்கப் பட்டுளளது. அதேநேரத்தில் பொதுவான மருத்துவக் காப்பீடான ஆரோக்கிய ‘சஞ்சீவினி’ பாலிசி வெறும் 72,000 மட்டுமே விற்கப்பட்டுள்ளது என அலமேலு தெரிவித்தார்.