ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கரோனாவால்  வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்ட குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் வழங்கிடுக!
August 21, 2020 • Viduthalai • அரசியல்

கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை,ஆக.21, கரோனா வால்  வாழ்வாதாரம் பாதிக் கப்படடிருப்பதால் குடும்பத் துக்கு ரூ.5 ஆயிரம் வழங்கிடுக என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி இன்று வெளி யிட்ட அறிக்கை வருமாறு:

“கரோனா பாதிப்பைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊர டங்கு அமல்படுத்தப்பட்டுள் ளது. மாதந்தோறும் தளர் வுகள் அறிவிக்கப்பட்டாலும், தமிழக மக்களின் வாழ்வா தாரத்தை மீட்டெடுப்பதாக அந்த தளர்வுகள் இல்லை.

ஊரடங்கால் பாதிக்கப் பட்ட ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் சொல் லொண்ணா துயரத்தில் உள்ளனர். பல குடும்பங்களில் வறுமை தாண்டவமாடுவதை கண்கூடாகப் பார்க்க முடி கிறது. அவர்களை வறுமை யில் இருந்து மீட்டெடுக்கும் எந்த திட்டமும் தமிழக அர சிடம் இல்லை.

கடந்த மார்ச்-மே மாதங் களில் 53 விழுக்காடு குடும்பத் தினரில், குறைந்தது ஒருவரா வது வேலை இழந்துள்ளதாக, தமிழக அரசு நடத்திய கணக் கெடுப்பில் தெரியவந்துள் ளது. ஊரடங்கால் நகர்ப்புறத் தினர் 50 விழுக்காட்டினரும், கிராமப்புறத்தில் 56 விழுக் காட்டினரும் வேலை இழந் துள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 53 விழுக்காடு குடும்பத்தில் வேலை இழப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த 3 மாத காலத் தில், கிராமப்புறத்தில் 92 விழுக்காடு குடும்பத்திலும், நகர்ப்புறத்தில் 95 விழுக்காடு குடும்பத்திலும் ஒன்றிலிருந்து இரண்டு பேர் வரை வேலை இழந்துள்ளனர். மேலும் மீத முள்ள 8 விழுக்காடு கிராமப் புற குடும்பங்களிலும், 5 விழுக் காடு நகர்ப்புற குடும்பங்களி லும் 3 முதல் 5 பேர் வரை வேலைவாய்ப்பை இழந்துள் ளதாகவும் அந்த கணக்கெ டுப்பு கூறுகிறது.

வேலை இழந்தோரில் 83.4 விழுக்காட்டினர் அன்றாடக் கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். 13.3 விழுக்காடு குடும்பங்களில் வேலை இழந் தோர் தனியார் துறைகளில் பணி புரிந்தவர்களாக உள்ள னர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட் டத்தில், ஊரடங்குக்கு முன்பு 37 விழுக்காடு கிராமப்பற குடும்பத்தினர் பணியாற்றி னர். இவர்களில் மூன்றில் 2 விழுக்காட்டினர் கடந்த ஏப் ரல் மாதம் வேலைக்கு திரும் பினர். ஆனால், 1 விழுக்காட்டி னர் ஊரடங்கால் வேலை இழந்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக 67 சதவிகித தமிழக குடும்பத்தி னர் வருவாயை இழந்துள் ளனர். கிராமப் புறங்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய் 11,472 ஆக இருந்த சராசரி வருமானம், மே மாதத்தில் ரூபாய் 6,522 ஆக குறைந்துள்ளது. நகர்ப்புறங் களில் கடந்த பிப்ரவரி மாதம் ரூபாய் 17,717 ஆக இருந்த சராசரி குடும்ப வருமானம், மே மாதத்தில் ரூபாய் 11 ஆயிரத்து 337 ஆக குறைந்துள் ளது.

தமிழகத்திலேயே விருது நகர் மாவட்டம்தான் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இங்கு 67 விழுக்காடு குடும் பத்தினர் வேலை இழந்துள் ளனர். வெளிமாநிலங்களில் வேலை இழந்து 8.19 விழுக் காட்டினர் தமிழகம் திரும்பி யுள்ளனர். இவர்களும் வரு மானம் இன்றி வறுமையில் வாடிக்கொண்டிக்கின்றனர்.

இத்தகைய புள்ளிவிவரங் கள் தமிழக மக்களின் நிலை குலைந்து போன வாழ்க் கையை படம்பிடித்துக் காட் டுவதாக உள்ளன. இவர் களுடைய வாழ்க்கை பாது காப்பை உறுதி செய்ய தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதற்காக ஏதும் நிதி ஒதுக்கப்பட்டதா? விவசாயிகளுக்கு வழங்கப் படும் ரூபாய் 2 ஆயிரம் உத வியும், மக்களுக்கு வழங்கப் படும் இலவச ரேஷன் பொருட்களும் அவர்களது வாழ்வாதாரத்துக்கு போது மானதா? என்பது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண் டும்.

மேலும், பொருளாதார தொகுப்பாக குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் கொடுத்தால் மட்டுமே, வறுமையில் வாடும் மக்கள் ஓரளவுக்கு வாழ்வா தாரத்தை மீட்டெடுக்க முடி யும். இதற்கான நடவடிக் கையை போர்க்கால அடிப் படையில், தொடங்குமாறு முதல்வர் எடப்பாடி பழனி சாமியை கேட்டுக் கொள்கி றேன்”.

இவ்வாறு கே.எஸ்.அழ கிரி தெரிவித்துள்ளார்