ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கடுமையான ஆய்வும்- மதிப்பீடும் தேவை!
August 12, 2020 • Viduthalai • உலகம்

ரஷ்ய தடுப்பூசி குறித்து உலக சுகாதார அமைப்பு கருத்து

நியூயார்க், ஆக.12 கரோனா தொற்றுக்கான உலகத்தின் முதல் தடுப்பூசியைப் பதிவு செய்துள்ளதாக ரஷ்யா தெரி வித்துள்ள நிலையில், கடு மையான ஆய்வு தேவை என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உல கமே அஞ்சி நடுங்குகிறது. இந்த வைரசின் பிடியில்

200-க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கித் தவிக்கின்றன. கரோ னாவுக்கு முடிவு கட்ட தடுப் பூசி ஒன்றுதான் ஆயுதமாக இருக்கும் எனக் கருதப்படு கிறது.

அதனால்தான் இதுவரை வேறு எந்தத் தொற்று நோய்க்கும் இல்லாத அள வில், கரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிராக உலகமெங்கும் ஏறத்தாழ 165 தடுப்பூசிகள் உருவாக்கப் பட்டு வருவதாக உலக சுகா தார நிறுவனம் கூறுகிறது. இவற்றில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட 6 தடுப்பூசிகள் மட்டும் பரி சோதனையின் இறுதிக்கட் டத்தில் உள்ளன.

கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக விளங்கும் ரஷ் யாவில், அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும், கம லேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் சேர்ந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்தத் தடுப்பூசி பரி சோதனைகளை வெற்றிகர மாக முடித்துக்கொண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல்கள் வெளிவந்தன. அதன்படி, அந்த தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தயாராகி நேற்று பதிவு செய்யப்பட்டு விட்டது.

இந்தத் தகவலை வெளி யிட்ட ரஷ்ய அதிபர் புதின், கரோனா தடுப்பூசிக்கு ‘ஸ்புட் னிக்-வி’ என பெயரிடப்பட் டுள்ளதாகவும், இது மிகவும் திறம்படச் செயல்படுகிறது. இது ஒரு நிலையான எதிர்ப் புச் சக்தியை உருவாக்குகிறது. இந்தத் தடுப்பூசியானது, தேவையான சோதனை களுக்கு உட்படுத்தப்பட்டு விட்டது. இந்தத் தடுப்பூசி ஆற்றல்மிக்கது என்பது சோதனைகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது. இது பாதுகாப் பானது எனவும் தெரிய வந்துள்ளது'' என்றார்.

இந்த நிலையில், ரஷ்யா வின் கரோனா தடுப்பூசி குறித்து கருத்துத் தெரிவித்த உலக சுகாதார அமைப்பு  பாதுகாப்பு ஆய்வுகளை மிகக்கடுமையாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் செய்தி தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் ஜெனீவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.  அப் போது அவர் கூறுகையில்,

“ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் உள் ளோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது குறித்த நடைமுறைகள் பற்றிய ஆலோசனை நடைபெறு கிறது. எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என் பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே இருக்கும்'' என்றார்.

இதற்கிடையில் 3- ஆவது கட்ட சோதனையை இன்று தொடங்க இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.