ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஓபிசி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் ஏன்
October 29, 2020 • Viduthalai • தமிழகம்

ஓபிசி கணக்கெடுப்பு நடத்த தயக்கம் ஏன்?

 மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு....

மதுரை, அக்.29 தேசிய இதர பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை பரிசீலனை செய்யக் கோரிய வழக்குக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என உயர்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரையை சேர்ந்த தவமணி தேவி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கடைசியாக 2001ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் (OBC) கணக்கெடுப்பு தனியாக நடத்த பரிந்துரை செய்தும்தனி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பிற்படுத் தப்பட்ட வகுப்பினரை கணக்கெடுத்து தனியாக வரைமுறை செய்யப்படும்போது இட ஒதுக்கீடு சம்பந்தமான பல்வேறு முடிவுகள் எடுப்பதற்கு உதவியாக இருக்கும். பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஆணையத்தின் கணக்கெடுப்பு முறையாக இல் லாததால் இட ஒதுக்கீட்டில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்து வருகிறது. இதனால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தின் பரிந்துரையின் படி 2021 ஆம் ஆண்டு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது தேசிய பிற்படுத் தப்பட்ட வகுப்பு ஆணையத்தின் (OBC) பரிந்துரையை பரி சீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுசெய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வு முன்பு புதனன்று  விசாரணைக்கு வந்தது.அப்போது நீதிபதிகள் கூறும்போது 1992இல்  உத்தரவு பிறப்பித்த  நிலையில், ஓபிசிகுறித்து கணக்கெடுப்பதில் என்ன தயக்கம்? கணக்கெடுப்பு நடத்தினால் தானே ஒதுக்கீடு தொடர்பான வற்றை வழங்க இயலும்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து இது குறித்து, மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

சென்னையில் சில மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை

சென்னை,அக்.29, சென்னையில் விடிய, விடிய இடை விடாமல் பெய்யும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மய்யம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது.   கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள் ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரித்து உள்ளது.

வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் துவங்கினாலும் இயல்பான மழை கிடைப்பதற்கான சூழல்கள் இருப்பதாகச் சென்னை மண்டலம் வானிலை ஆய்வு மய்யம் முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் மழை குறித்து டுவீட் செய்துள்ளார், அதில், சென்னையில், சில மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது  என்றார்.