ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி: காந்தியார் விட்டுச் சென்றது...
August 16, 2020 • Viduthalai • மற்றவை

ஜனவரி 30 தேசத் தந்தை காந்தியார் படுகொலை செய் யப்பட்டார்.

ஒரு தொண்டனைப் போல் குனிந்து நெளிந்து வந்த ஒரு பார்ப்பன அரவமான நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத் தீ போலப் பரவியது அந்தச் செய்தி:

‘‘காந்திஜியைச் சுட்டு விட்டார்கள், காந்திஜியைக் கொன்று விட்டார்கள்.''

சரியாகத் தகவல் அறிந்து முதலில் பட்டேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடி வந்தார். கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவன் கத்தினான்.

‘‘காந்தியை ஒரு முஸ்லிம் கொன்று விட்டான்.'' அதிர்ந்து திரும்பிய மவுண்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்.

‘‘நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!''

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக் கொண்டே சென்றடைந்தது; ‘‘காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தி யைச் சுட்டது ஒரு முஸ்லிம்'' என்று திட்டமிட்ட குரல் - பிரச் சாரம் - தமிழ்நாட்டில் வாணியம் பாடி, ஆம்பூர் பகுதிகளில் இஸ் லாமியர்கள் தாக்கப்பட்டனர்.

இந்திய வரலாற்றில் காந்தி யின் மரணம் பல உயிர்களைப் பலி வாங்கும் ரத்தக் களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேரு வும், பட்டேலும், மவுண்ட் பேட்டனும் துரிதமாகச் செயல் பட்டதும் ஒரு காரணம் என்று சொல்லவேண்டும். வன்முறைக் குக் கத்தி தீட்டப்பட்ட தொடக் கத்திலேயே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்.

தமிழ்நாட்டில் வானொலி உரைமூலம் தந்தை பெரியார் அந்தப் பெரும் கடமையைச் செய்தார்.

‘‘காந்திஜியை சுட்டுவிட் டார்கள், காந்திஜியைக் கொன்று விட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து'' என்ற உண்மை வெளிச்சத்துக்குக் கொண்டு வரப்பட்டது.

காந்தி கொல்லப்பட்ட தக வலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி; அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது; குரூர நோக்கம் இருந்தது. இந்து - முஸ்லிம் கலவரங்கள் எப் போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உல கின் மோசமான படுகொலைக் களத்தையும், இந்தியா எதிர் கொண்டிருந்த காலகட்டம். அப்படியான சூழலில், காந்தி யைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக் களறியாகும். முஸ்லிம்கள் வேட் டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உரு வாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசை திருப்பப்பட்ட தன் நோக்கம் இதுதான்.

காந்தியாரோடு இந்தக் களங்கம் கல்லறை கண்டதா? இல்லையே! குஜராத்தில் என்ன நடந்தது?

மதமே நீ என்று ஒழிவாய்?

- மயிலாடன்