ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி : 1937-லேயே பெரியார்!
September 20, 2020 • Viduthalai • மற்றவை

அதாவது, அவரது (இராஜகோபாலாச்சாரியார்) பதவி ஆதிக்கத்திலுள்ள வகுப்பு முறை சுதந்திரத்தை ஒழிக்கிறாரா? என்று கேட் கின்றோம். என்னவென்றால், இன்று கனம் டாக்டர் ராஜன் அய்யங்கார் தேவஸ்தான இலாகா மந்திரியாயிருக்கிறார். அவர் ஆதீனத்தில்தான் இந் நாட்டுக் கோவில்களின் ‘‘தலை யெழுத்து'' பூராவும் இருக் கின்றன. சட்டசபையும் கனம் டாக்டர் ராஜன் காலாட்டினால் மற்றவர்கள் தலையை ஆட் டும்படியான மெஜாரிட்டியாய் இருக்கிறது. சர்க்காரோ காங்கிரசே சர்க்கார் - சர்க்காரே காங்கிரஸ் என்று கனம் ராஜனே சொல்லிக் கொள்ளும்படியான நிலைமையில் இருக்கிறது.

இந்நிலையில், இந்தக் கோவில்களுக்கெல்லாம் பார்ப் பானே மணி அடிக்கவேண்டும், பார்ப்பானே சோறு பொங்க வேண்டும், பார்ப்பானே வேதம் ஓதவேண்டும் என்பவை ஆன ‘‘பார்ப்பானே செய்யவேண்டும்''  என்கின்ற காரியங்களை மாற்றி, ‘‘வகுப்புவாதம் புரிகின்ற'' ஜஸ்டிஸ் கட்சியார் உள்பட தனித்தொகுதி கேட்பதும், இந்து மதத்தை விட்டுப் போவதும், ஆபத்து என்று கூறி தடுக் கப்படும் ஷெட்யூல் வகுப்பார் வரை உள்ள எல்லா இந்துக் களும் செய்யலாம் என்று ஒரு சட்டமோ உத்தரவோ செய்து வகுப்புவாத ஆதிக்கத்தை ஒழிப்பாரா? என்று வணக்க மாய் கேட்கின்றோம். இதாவது நாளைக்குச் செய்யட்டும். இன் றைக்கு எல்லா இந்துக்களும் வகுப்பு ஜாதி என்கின்ற வித் தியாச முறை இல்லாமல் ‘‘சர்வ சக்தியும், சர்வவியாபகமும், சர்வதயாபரமும் உள்ளவரான பகவானைத் தரிசிக்க சர்வ சுதந்திரமாய் அனுமதிக்கப் படும்'' என்று உத்தரவு போட ட்டுமே என்றுதான் கேட் கிறோம்.

இதாவது கொஞ்சம் தாம திக்கட்டும். அதைவிட அவ சரமாக இனிமேல் எந்தப் பார்ப்பானும் ஓட்டல்களிலோ, காப்பிக் கடைகளிலோ பிரா மணாள் காப்பிக்கடை, பிரா மணாள் ஓட்டல், பிராமணா ளுக்கு மாத்திரம், பிராமணா ளுக்கு இங்கே, சூத்திராளுக்கு இங்கே - பஞ்சமன், நாய், பெருவியாதிக்காரர்கள் ஆகிய வர்கள் பிரவேசிக்கக் கூடாது என்பன போன்ற போர்டு போடக்கூடாது என்று உத் தரவுகள் போடட்டுமே பார்ப் போம். எனவே, இத்தியாதி காரியங்கள் செய்ய அதிகார மும், அவசியமும், சவுகரியமும் இருந்தும் இவற்றைச் செய் யாமல் வகுப்பு ஆதிக்கக் கொடுமையையும், வகுப்பு முறைத் துன்பங்களையும் வைத்துக்கொண்டு ‘‘ஜஸ்டிஸ் கட்சி வகுப்பு, வகுப்புவாத முறை ஏற்படுத்திவிட்டது. நான் அதை ஒழிக்கப் போகிறேன். பயப்படவேண்டாம்'' என்றால், என்ன அர்த்தமென்று கேட் கின்றோம்? ஆகவே, இந்த மாதிரிப் பேச்சுகள் எல்லாம் நாம் எதிர்பார்த்தபடியே கொடுங்கோன்மை ஆட்சி முறைப் பேச்சென்றே வருத்தத் துடன் கூற வேண்டியிருக்கிறது.

‘குடிஅரசு' தலையங்கம் 8.8.1937

83 ஆண்டுகளுக்கு முன்பே கூறியவர் தந்தை பெரியார்.

 - மயிலாடன்