ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி : பெரியார் பார்வையில் படிப்பகம் - கோவில்!
September 12, 2020 • Viduthalai • மற்றவை

தந்தை பெரியார் மேனாட் டுச் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருந்தார்.  ஸ்பெயினில் ஒரு சாதாரண ஓட்டலில் தங்கி யிருந்தார். அந்த ஓட்டலில் தரையைச் சுத்தம் செய்யும் பெண் துணியை கையில் வைத்துக்கொண்டு தரையைச் சுத்தப்படுத்திக்கொண்டே, மறு கையில் அன்றைய பத்திரி கையை வைத்துக்கொண்டு, படித்துக்கொண்டே.. வேலை செய்தார். அந்தப் பத்திரிகை யின் பெயர் ‘‘ஔரா.'' ‘‘ஔரா'' என்றால் காலம் என்று பொருள். அதில் விட்டல்பாய் படேலின் படம் முன் பக்கம் போடப்பட்டு இருந்தது. அந்தப் படத்தில் உள்ளது பெரியார் படம் என்று நினைத்து அப்பெண் இப்பத் திரிகையை பெரியாரிடம் சுட்டிக்காட்டி, ‘உங்கள் படம் தானே!' என்றார். அப்பொழுதே பெரியார் தாடி வைத்திருந்தார். அதனால் ஏற்பட்ட குழப்பம்! பெரியார் அப்பெண்ணிடத்தில் அப்படத்துக்கு உரியவர் யார் என்பதைத் தெளிவுப்படுத்தி னார்.

26.10.1964 அன்று கும்ப கோணத்தில் ‘‘பெரியார் படிப் பக''த்தைத் திறந்துவைத்து உரையாற்றிய தந்தை பெரியார் ஸ்பெயின் நாட்டில் வீடு கூட்டும் பெண்கூட பத்திரிகை படிப்பதில் ஆர்வம் காட்டு வதைச் சுட்டிக்காட்டினார்.

‘‘நம் நாட்டில் தெருவுக்குத் தெரு கோயில் இருப்பதற்குக் காரணம் நாம் பொது அறிவு பெறக்கூடாது; முட்டாளாகவே இருக்கவேண்டும் என்பதற்கா கத்தான். இதனை ஒழிக்கவேண் டுமென்றால் தெருவுக்குத் தெரு படிப்பகத்தைத் திறக்கவேண் டும்'' என்று குறிப்பிட்டார்.

தந்தை பெரியார் தெரிவித் துள்ள இந்த எடுத்துக்காட்டும், கருத்தும் எத்தனை சிறப்பா னவை - செயல்படுத்தப்பட வேண்டியவை.

அடுப்பூதும் பெண்களுக் குப் படிப்பு எதற்கு என்பதை ஒழித்துக் கட்டினார் பெரியார். ஆனாலும், வாசிப்புப் பழக்கம் முக்கியம், அவசியம்!

ஒரு காலத்தில் திண்ணை கள் எல்லாம் திராவிட இயக்கப் படிப்பகங்களாக விளங்கி யதுண்டு. 300-க்கும் மேற்பட்ட திராவிட இயக்க இதழ்கள் வெளிவந்ததாக திராவிட இயக்க ஆய்வாளர் மானமிகு திருநாவுக்கரசு கூறுகிறார்.

கணினி வந்து, படிக்கும் ஆர்வத்தைப் பறிமுதல் செய் ததாகக் கூறுகிறார்கள். கணினி யில் பதிவிறக்கம் செய்யக் கூடிய அரிய நூல்களும் உண்டே!

படிப்பகம் பகுத்தறிவை வளர்க்கும் - கோவில்கள் பகுத் தறிவைப் பறிமுதல் செய்து புரோகித சுரண்டலைக் கொழுக்க வைக்கும்!

 - மயிலாடன்