ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி - பாண்டியர்களும்...
August 23, 2020 • Viduthalai • மற்றவை

நம்முடைய மூவேந்தர்கள் பற்றி - பெருமையாகப் பேசப் படுவது எல்லாம், அவர்கள் போர் புரிந்து நாட்டைக் கைப் பற்றிய பெருமைகளைத்தான். உடலால் வன்மையை வீரமாகப் போற்றினாரே தவிர, உள்ளத்தள வில், சம உணர்வு, சம நுகர்வு, சமவாய்ப்புகள், சமூகம் பற்றி யெல்லாம் குறிப்பிடத்தக்க அள வில் தங்கள் அறிவுக் குறிப்பில் ஏற்றிக் கொள்ளவில்லை.

சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் கூட, மனுவின் கட்டை விர லின்கீழ் மக்கள் வாழ்வு அமைந் ததற்குக் கட்டியம் கூறினர் என்பது வெட்கக்கேடே!

சோழர் காலத்தில் மிகப் பெரிய அளவில் வளர்ச்சியுற்ற வேதக் கல்வி, பாண்டியர் காலத்திலும் தொடர்ந்தது. அரச நிர்வாகத்திற்குத் துணை புரியும் நூலாக விளங்கிய மனுதர்மம் பாண்டிய அரசாட்சிக் காலத்தி லும் தொடர்ந்தது. மனுதர்மத்தை நிலைநாட்டுகின்ற அரும்பணிக் குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதாக எல்லாப் பாண்டிய மன்னர்களும் தங்கள் மெய்க் கீர்த்தியில் குறிக்கின்றனர். சங் கம் வைத்து தமிழைக் காப்பாற் றிய பாண்டியர்கள் பிற்காலத்தில் வடமொழியையும் காப்பாற்றி னர் என்பதுதான் வரலாறு.

மனுதர்மத்தை முன்னிறுத்தி வருணாசிரமத்தைக் கட்டிக் காப் பதுதான் இடைக்கால மன்னர் களின் தலையாய பணியாக இருந்தது. இடைக் காலத்திற்குரிய தமிழகத்தில் சோழர், பாண்டியர், போசளர், விசயநகரத்தார் ஆகி யோர் இதைக் காத்து நின்றனர். அவர்களுடைய மெய்க்கீர்த்தி களும் இதற்குச் சான்று சொல் கின்றன.

முதலாம் மாறவர்மன் சுந் தரபாண்டியன் கி.பி.1220 ஆம் ஆண்டு மெய்க்கீர்த்தியில் மூவ கைத் தமிழும் முறைமையில் விளங்க... நால்வகை வேதமும் நவின்றுடன் வளர.... அய்வகை வேள்வியும் ...... அறுவகைச் சம யமும் ... சிறக்க தாம் நாட்டை ஆட்சி செய்ததாக அறிவிக்கின் றான். மற்றொரு மெய்க்கீர்த்தியில் பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த / மனுநெறி தழைக்க மணிமுடி சூடி.... எனக் கூறப் பட்டுள்ளது.

இதுபோல் முதலாம் சடைய வர்ம சுந்தரபாண்டியன் (கி.பி.1251-71) தனது, மெய்க்கீர்த் தியில் அருந்தமிழும், ஆரியமும் அறு சமயத்து அறநெறியும், திருந்துகின்ற மனு நெறியுந் திறம் பாது தழைத்து ஓங்க, முத்தமிழும் மனு நூலும் நான்மறை முழுவதும், எத்தல சமயமும் இனிதுடன் விளங்கவும்... எனக் குறிப்பிடுகின்றான்.

பாண்டிய மன்னர்கள் மனு நெறியையும், வேத நெறியையும் ஏற்றே ஆட்சி செலுத்தினர் என்பதற்கு மேற்கண்ட மெய்க் கீர்த்தி வரிகளேச் சான்று.

அந்தணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு வகுப்பினராக மக்களைப் பிரித்து ஒவ்வொரு பிரிவில் உள்ளவர்களும் தங்கள் வர் ணத்திற்கு விதிக்கப்பட்ட தொழில் மரபுப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மனுவின் வரையறை நிலப் பிரபுத்துவ ஆட்சி முறைக்கு முக்கியத் தேவையாக இருந்தது. ஜாதி -  தொழில் - உற்பத்தி - உபரி - இலாபம் என்ற முறையி லான  சுரண்டல் சமூக அமைப் புக்கு மனுநீதி பாதுகாப்பானதாக இருந்தது. இவ்வமைப்பில் சிறு மாறுபாடு ஏற்பட்டாலும் அரசு தன் அதிகாரத்தையும், சுகபோக ஆடம்பர வாழ்க்கையையும், இலாபத்தையும் இழக்க வேண் டியிருக்கும். மனுநெறியைக் கட்டிக் காப்பதில் இதனால்தான் அரசு அதிகாரம் முனைப்புக் காட்டியது.

(ஆதாரம்: ‘‘தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு'', சி.இளங்கோ)

- மயிலாடன்