ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி - தெரியுமா
September 16, 2020 • Viduthalai • மற்றவை

ஒற்றைப் பத்தி - தெரியுமா?

சென்னை அரசினர் தோட் டத்தில் திராவிடர் கழகத் தலை வர் பெரியார், காங்கிரசின் மூத்த தலைவர்களுள் ஒருவரான வரத ராஜுலு நாயுடு மற்றும் காமராஜர் மூவரும் பேசிக் கொண்டிருந் தனர். முதலில் வரதராஜூலு நாயுடு பேசினார்.

‘‘அய்யா அடுத்த முதலமைச் சராக காமராஜரே ஆகட்டும்னு நாங்க எல்லோரும் நினைக்கி றோம். ஆனா அவரு ஒத்துக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறார். அதனால நீங்க ஒரு வார்த்தை சொன்னா தட்டாம கேட்பாரு காமராஜர். அதனாலதான் உங் களைக் கூப்பிட்டோம்'' என்றார். இதைக் கேட்ட பெரியார் சிறிது நேரம் யோசித்தார்.

‘‘காமராஜர் நீங்க கொஞ்சமும் தயங்கக் கூடாது. இது முக்கிய மான பொறுப்பு ஆச்சாரியார் உட்கார்ந்த நாற்காலியில் நீங்க தான் உட்காரணும்'' என்று சொன்னார் பெரியார்.

ஆனால், காமராஜருக்கோ இதில் கொஞ்சமும் விருப்ப மில்லை. நிதானமாக பதில் சொன்னார்.

“இப்போ மாநில கமிட்டித் தலைவராக இருக்கேன், கூடவே பார்லிமெண்ட் மெம்பராகவும் இருக்கேன். இதுவே போதும், என் குணத்துக்கு நிர்வாகம் எல் லாம் ஒத்துவராது. நம்ம ஆளு ஒருத்தரை உட்கார வைச்சு ஆட்சி நடத்துவோம்'' என்றார் காமராஜர்.

ஆனாலும் பெரியார் அவரை விடுவதாக இல்லை. மீண்டும் பேசினார்.

‘‘நாங்க இருக்கோம், எல்லாத் தையும் பார்த்துக்கறோம். என் வார்த்தையைத் தட்டாதீங்க'' என்று உணர்ச்சிகரமாகப் பேசி னார் பெரியார்.

அந்த வார்த்தைகள் காம ராஜரை அசைத்தன. சரியென்று தலையாட்டினார்.

நன்றி: ‘மாலைமலர்',

காமராஜர் 115 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர், பக்கம்  86

இந்த வரலாறு எல்லாம் தெரியுமா நம் நாட்டு மக்களுக்கு? தந்தை பெரியாரை சிறுமைப் படுத்தியும், காமராசரை உயர்த் தியும் மித்திரபேதம் செய்யும் பச்சைப் பாரப்பன குருமூர்த்தி - ‘துக்ளக்' கும்பலுக்குத் தெரி யும்தான். ஆனால், உண்மை யைச் சொல்லுவது மனுதர்மத் துக்கு எதிரானது ஆச்சே!

இன்று காமராசரை உயர்த் துவதுபோல நடிக்கும் இந்தக் கூட்டம்தான் காமராசர் கைநாட் டுப் பேர்வழி என்றும், கருப்புக் காக்கை என்றும் ஏகடியும் செய்தன.

பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் - ஒரு பட்டப் பகலில் (7.11.1966) இந்தியாவின் தலைநகர மான டில்லியில் காமராசரை உயிரோடு கொளுத்த நிர்வாணத் தாண்டவம் ஆடின! ஆர்.எஸ்.எஸ்., ஜனசங்கம் (இன்றைய பா.ஜ.க.வின் முந்தைய பெயர்), நிர்வாண சாமியார்கள், சிருங் கேரி பூரி சங்கராச்சாரியார்கள் போன்றவர்கள் கையில் சூலாயு தமும், வேலாயுதமும், தீ வட்டியும் தூக்கிக் கொண்டு கிளம்பினர் என்ற தகவல்கள் எல்லாம் தெரி யுமா?

ஆரியக் கூட்டத்தின் அந்த மோசமான கலவரத்தை - காலித் தனத்தை ‘‘காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'' என்ற தலைப் பில் அய்யாவின் ஆணைப்படி ஒரு நூலாகவும் கொண்டு வந் தார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இந்த வரலாறுகள் யாருக்குத் தெரியப் போகிறது என்ற திமிரு டன் குருமூர்த்திகள் உளறினால், கருஞ்சட்டைகள் இருக்கவே இருக்கிறார்கள் என்பதை மறக்கவேண்டாம்!

 - மயிலாடன்