ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி - தானமும், தருமமும்!
August 24, 2020 • Viduthalai • மற்றவை

தானம், தர்மம் என்ப தெல்லாம் பார்ப்பனர்களுக்கு மதத்தின் பெயரால் கொட்டிக் கொடுக்கும் தடபுடலான ஏற்பாடு.

  1. யாகசாலை தருமம்: 1828 இல் இரண்டாம் சரபோஜி மன்னன் காவிரிக்குத் தென் கரையில் யாக சாலை தரும மாய் 133 குழி நிலத்தை யாகம் செய்த பிராமணர்களுக்குக் கொடுத்தான்.
  2. தச தானங்கள்: பிரா மணர்களுக்கு விசேஷ நாட் களில் பசு, பூமி, எள், பொன், நெய், ஆடை, வெல்லம், வெள்ளி, உப்பு என்ற இவை பத்தும் கொடுப்பது தசதானம்.
  3. அன்னதானம்: ஏழை களுக்கும், சாதாரண மக் களுக்கும் அன்னதானம் கொடுக்கும் முறை பழக்கத் தில் இருந்தாலும், சில சிறப் பான நாட்களில் பிராமணர் களுக்கு மட்டும் தனியாக அன்னதானம் கொடுக்கப்பட் டது. இலட்சம் பிராமணர் களுக்கு உணவளிப்பதை அன்றைய அரசர்கள் பெரும் பேறாகக் கருதினர். மராட்டிய அரசர்கள் 100 ஆயிரம் பிரா மணர்களுக்கு விருந்தளித்த மைக்குச் சில சான்றுகள் உள்ளன. 1801 ஆம் ஆண்டில் இலட்சம் பிராமணர்களுக்கு உணவு அளிக்க 5000 சக்கரம் செலவழிக்கப்பட்டது. மேலும் இதே ஆண்டில் முத்துலஷ்மி பாடலி என்பவர் தாஸ்தான் மகாலில் இலட்சம் பிராமண போஜனம் ஒன்றை நடத்தி னார்.
  4. திலபர்வததானம்: பிரா மணர்கள் எள்ளைத் தான மாகப் பெறுவதற்குத் தயங் குவர். இதனால், அவர்களுக்கு எள்ளுடன் மிகு தொகையும் கொடுத்து எள் தானம் கொடுக்கப்பட்டது. மராட்டிய மன்னர்கள் எள் தானம் பெறும் பிராமணர்களுக்கு 500 சக்கரம் வரை தானமாகத் தொகைக் கொடுத்த செய் தியை அறிய முடிகின்றது. (சனி என்னும் கோளால் ஏற்படும் துன்பங்களைப் போக்குதற் பொருட்டும், ஆயுள் வளர்தற் பொருட்டும், நன்மக்கள் பேற்றுக்கும் ஆக மலையளவு எள் தானமாகக் கொடுத்தல் என்பது இதன் பொருள்).
  5. சாயாதானம்: நெய் அல்லது நல்லெண்ணெயில் தன் முகத்தின் நிழலைப் பார்த்து இதனோடு சிறிது தக்ஷணை இட்டுத் தானமாகக் கொடுப்பது.

அரசர்கள் இவ்வாறு பிரா மணர்களுக்குக் கொடுத்த கொடைகள் பலவாகும். தனி மனிதர்கள் சில பேர் பிரா மணர்களுக்குத் தானங்களை அளித்துள்ளனர். சிதம்பரம் செட்டி என்பவர் கி.பி.1891 இல் வஞ்சூரில் மண்டபம், குளம், அக்கிரகாரம், 12 வீடுகள், கோவில் முதலியவற்றைக் கட்டி தானமாகக் கொடுத்தார். இதற்குச் சில உதவிகளை அரசனும் செய்வான்.

(ஆதாரம்: கே.எம்.வெங் கட்ராமையா, ‘தஞ்சை மராட் டிய மன்னர் கால அரசியலும், சமுதாய வாழ்க்கையும்', பக்கம் 258).

மதமும், பக்தியும் யார் வயிற்றில் அறுத்துக்கட்ட என்பது புரிகிறதா?

- மயிலாடன்