ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி - தமிழ்பற்றி காந்தியார்
September 6, 2020 • Viduthalai • மற்றவை

83 ஆண்டுகளுக்கு முன் (1937இல்) வெளியிடப்பட்ட துண்டறிக்கை

இந்தியா தமிழைப் பொது மொழியாகப் பெறவேண்டும்.

காந்தியடிகள் மாடர்ன் ரிவியுவில் எழுதியது.

‘‘இந்தச் சச்சரவில் (டிரான்ஸ் லால் சச்சரவு) தமிழர்கள் செய்த காரியத்தைப்போல் வேறு எந்த இந்திய ஜாதியும் செய்யவில்லை. ஆதலால் வேறு யாதொரு காரண மும் இல்லாவிட்டாலும் அவர் களுக்கு என் திருப்தியை நன்கு உணர்த்துவதற்காக மாத்திரமாவது அவர்களுடைய புஸ்தகங்களை ஊன்றிப் படிக்கவேண்டும். சென்ற மாதம் அவர்களுடைய பாஷை யைக் கவனமாகப் படித்து வந் தேன். அதைப் படிக்கப் படிக்க அந்தப் பாஷையிலுள்ள அழகு அதிகமாகத் தெரிகிறது. அது நேர்த் தியானதும் அமிர்தம் போன்றது மான பாஷை. நான் படிப்பதிலி ருந்து எனக்குத் தெரிவது என்ன வெனில்:- தமிழர்களின் மத்தியில் பூர்வகாலத்திலும் இப்போதும் அநேக புத்திமான்களும், ஞான வான்களும் இருந்திருக்கிறார்கள், முடிவில் இந்தியா முழுமையும் ஒரே ஜனாங்கமாக ஏற்பட வேண் டுமானால் சென்னை ராஜதானிக்கு வெளியில் உள்ளவர்களும் தமிழ்ப் பாஷையைத் தெரிந்துகொள்ள வேண்டும்.''

‘‘சுதேசமித்திரன்'' மொழி பெயர்த்தது  ‘செந்தமிழ்' தொகுதி 8, பக்கம் 214 கரந்தைக் கட்டுரை பக்கம் 20 வெளியிட்டது.

அன்று இப்படி எழுதிய காந் தியடிகளின் கருத்து இன்று மாறு பட்டு நடைபெறுவதென்னோ! அவர்வழி வருவாரின் மாறு பாடோ? அன்றித் தமிழ்த்தாயின் தவக்குறைவோ?

தமிழ் மகன்,

சோழ. கந்த. சச்சிதாநந்தன்.

83 ஆண்டுகளுக்குமுன்பு காந்தியார் கூற்றினை ஒரு துண்ட றிக்கையாக சோழ.கந்த. சச்சிதா நந்தன் என்பவர் வெளியிட்டுள் ளார்.

இந்தியையும், சமஸ்கிருதத்தை யும் இந்தியா முழுவதிலும் திணிக்கத் துடியாய்த் துடிக்கும் துரோணாச்சாரி பரம்பரையினர், காந்தியார் கூறும் இந்தக் கருத் தினை செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.

வேண்டுமானால், இந்தியா வின் பிரதமர் தேவைப்படும் பொழுது ஒரு திருக்குறளை எடுத் துக்காட்டுவார்- அதிகபட்சமாக தமிழையும் தூக்கிப் பிடிப்பார்.

நரிவலம் போனால் போகட்டும் அல்லது இடம் போனாலும் போகட்டும்; ஆளை விழுந்து குத றாமல் இருந்தால் சரி என்பதுபோல, தமிழ் மொழியை மட்டும் அகில இந்திய மொழியாக ஆக்க வேண் டும் என்று கூடக் கூறவில்லை - ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தில் 5 மொழிகளை ஆட்சி மொழியாக - அலுவல் மொழியாக ஆக்கி யதுபோல, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 8 ஆம் அட்டவணை யில் கண்டுள்ள 22 மொழிகளையும் ஆட்சி மொழிகளாக - அலுவல் மொழிகளாக ஆக்கலாமே!

தேவைப்படும்பொழுது மட்டும் காந்தியாரின் பெயரை உச்சரிப்பவர்கள், காந்தியாரின் இந்தத் தேவையான கருத்தை உற்ற வகையில் செயல்படுத்த லாமே!

 - மயிலாடன்