ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி - சோமநாதபுரம்
August 5, 2020 • Viduthalai • மற்றவை

சோமநாதபுரம் ஆல யத்தை கஜனி முகம்மது பதினெட்டு முறை படை யெடுத்து அழித்தான் என்று தான் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. பேச்சு வழக்கில் கூட ஒரு செயலைத் தொடர்ந்து செய்தால் என்ன சொல்லுவார்கள்?

‘‘கஜனி முகம்மது 18 முறை படையெடுத்து சோமநாத புரம் கோவிலை இடித்தது போல'' என்றுதான் சொல்லு வார்கள். அதன் உண்மை வரலாறு என்ன?

புகழ்மிக்க வரலாற்றுப் பேராசிரியர் ரொமிலா தாப்பர் இதுகுறித்து என்ன சொல்லு கிறார், இதோ:

‘‘உதாரணமாக 1299 ஆம் ஆண்டு உலூகான் என்பவர்  சோமநாதர் ஆலயத்தைத் தகர்த்து அவ்விடத்தில் ஒரு மசூதியை ஸ்தாபித்து அதி லிருந்த விக்கிரகத்தினை டில்லியிலிருக்கும் அலாவு தீன் கில்ஜிக்கு அனுப்பி வைத் தார் என ஒரு வரலாற்று குறிப்பு சொல்கிறது. குஜ ராத்தின் ஆளுநராயிருந்த முஜாஃபர் கான் என்பவர் 1395 இல் சோமநாதர் ஆல யத்தைத் தாக்கி அவ்விடத்தில் மசூதி ஒன்றை ஏற்படுத்தினார் என்று ஃபெரிஷ்டா  (திமீக்ஷீவீsலீtணீ) என்ற வரலாற்றாசிரியர் குறிப் பிடுகிறார். பதினான்காம் நூற் றாண்டின் இறுதியில், ஜாபர் கான் என்பவர் சோமநாதர் ஆலயத்தின் மேல் படை யெடுத்து சிலையை உடைத்து, அங்கு இஸ்லாத்தை ஸ்தா பித்தார் எனவும் ஒரு வர லாற்றுக் குறிப்பு இருக்கிறது. முஜாஃபர் கானின் பேரன் 1413 இல் சோமநாதர் ஆல யத்தின் மீது படையெடுத்த தாக அதே ஃபெரிஷ்டா குறிப்பிட்டிருக்கிறார்.

குஜராத்தின் சுல்தானாக இருந்த மஹ்மூத் பெகடா என்பவர் 1469 இல் சோமநாதர் ஆலயத்தைத் தரைமட்ட மாக்கி அங்கு மசூதியை  நிறுவியதாகவும் ஒரு கதை உண்டு. இப்படி ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஏதோவொரு இஸ்லாமிய சுல்தானோ அல் லது தளகர்த்தரோ அவரவர் பங்குக்கு சோமநாதர் ஆல யத்தை இல்லாமலாக்கி விட்டு, அதில் இருந்த விக்கி ரகத்தைத் தகர்த்து அங்கு மசூதியை உண்டாக்கின கதையானது அந்த வரலாறு களில் தொடர்ச்சியாக சொல் லப்பட்டு வந்திருக்கிறது. அந்தச் சித்தரிப்புகளில் கோயில் இடிக்கப்பட்டு அத னிடத்தில் மசூதி ஒன்று ஆக்கப்பட்டுவிட்ட பின்பும், அங்கு அதே இடத்தில் மசூதி மீண்டும் உருவாக்கப்பட் டதை அந்த வரலாறுகள் சொல்லுகின்றன.

முதல் சுல்தான் கோயிலை இடித்து அங்கு மசூதி கட்டிவிட்டாரென்றால், அங்கே மசூதிதான் நிலைத் திருக்கும்; கோயில் இருக்காது. முதல் சுல்தானுக்குப் பின் னால், படையெடுத்து வந்த இரண்டாவது சுல்தான், முன் னவர் கட்டிய மசூதியைத் தானே இடிக்கும்படியான நிலை இருந்திருக்கும். அதற்குப் பதிலாக அங்கு மசூதியில்லை, அங்கு கோயில்தான் இருந்தது. அதுதான் இடிக்கப்பட்டது என்று சொல்லுவது எப்படிச் சாத்தியமாகும்? முதன் முதலாக கோயிலைத் தகர்த்த உலூகானுக்குப் பின் வந்த முதல் படையெடுப்பாளர்கள், மசூதியைத்தானே இடித்திருப்பார்கள் என்று நம் முன் எழும் கேள்வியானது, பதில் காணப்படாமலேயே நிற்கிறது'' என்கிறார்.

ரொமிலாதாப்பர் கஜினி முகம்மது சோமநாதர் படை யெடுப்பு  வரலாற்றின் பல குரல்கள் - பாரதி புத்தகாலயம்.

- மயிலாடன்