ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒற்றைப் பத்தி - உலகெங்கும் பெரியார்!
August 28, 2020 • Viduthalai • மற்றவை

‘மண்டைச் சுரப்பை உலகு தொழும்!' என்று தந்தை பெரியார்பற்றி புரட்சிக்கவிஞர் 1958 இல் பாடினார்.

கவிஞன் சொல் கல்வெட்டாக ஒளிவீசுகிறது. எடுத்துக்காட்டுக்குச் சில:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அற வாழி அவர்கள், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு அனுப்பிய கடிதம்.

‘‘வணக்கம், என் பெயர் அறவாழி. நான் நார்வே நாட்டின் பொறியியல் நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன். பணி தொடர்பான மூன்று நாள் பயிற்சிக் கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அலுவலகப் பணி நிமித்த மாக நான் முதல் நாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளவில்லை; மறுநாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்றபோது, பயிற்சியாளர் அர்லிட் நொர்டெ பயிற்சி வகுப்பு ஆரம்பிக் கும் முன்பு என்னைப்பற்றி அனை வரிடமும் அறிமுகப்படுத்தும்படி கூறினார். அதில் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். எனது சொந்த ஊர் காஞ்சிபுரம் என்றதும், அவர் வியப் படைந்தார்.

அவரது அடுத்த கேள்வி, ‘‘நீங்கள் தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இருந்து வந்தவரா?'' என்று கேட்டார். மேலும் அவர், தந்தை பெரியாரின் கருத்துகளை பல காலங்களாகப் படித்து வருபவர் என்றும், அவரது கருத்துகளைத் தவறாது பின்பற்றி வருவதாகவும் கூறினார்.

அதன்பிறகு நானும், அவரும் தந்தை பெரியாரின் சிந்தனைகள் பற்றி பல கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம்.  ஆனால், அவர் என்னைவிட பெரியாரைப்பற்றி அதிகம் அறிந்துள்ளார். கருத்தரங்கம் முடிந்ததும் அவருடன் நிழற்படம் எடுத்துக்கொண்டேன்.

நாங்கள் இருவரும் பேசியது மற்றும் தந்தை பெரியார் பற்றிய அர்லிட் நொர்டெவின் கருத்துகளை ‘‘பெரியார் பகுத்தறிவு'' என எனது சமூக இணைய தளத்தில் பதிவிட் டேன். அது உடனடியாக பல அயல் நாட்டு நண்பர்களிடம் சென்றடைந் தது.

அவர்களும் பெரியார் குறித்து கருத்து சொல்லியும், தங்கள் நண்பர் களுக்குப் பகிர்ந்தும் மகிழ்ந்தனர். நான் ‘‘பெரியார் பகுத்தறிவில்'' போட் டிருந்த பதிவை நொர்டேவுக்கு அனுப்பினேன்.

அவர் எனக்கு அனுப்பிய பதிலில், தந்தை பெரியார் பற்றியும், நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பற்றியும் படத்துடன்  நார்வே நாட்டு பத்திரிகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்த செய்தியை ஸ்கேன் செய்து அனுப்பினார்.

தந்தை பெரியாரின் கருத்துகள் மற்றும் திராவிடர் கழகத்தின் சமு தாயப் பணிகள் கடல் கடந்து அய் ரோப்பிய நாடுகளிலும் மதிப்புமிக்க ஒன்றாக இருப்பதை தமிழக மக்களுக்குத் தெரிவிக்கும் விதமாக இந்தச் செய்தியைத் தெரிவிப்பதில் பெருமையடைகிறேன்."

- அறவாழி கிருபானந்தன் (பொறியாளர். ரெனிஸெர்சன் எஸ்லேவ் இரிக்ச்சன் சென்டர். நார்வே)

பெரியார் நினைவிடத்தில் மார்ட்டின் பக்லி

அதுபோலவே, இங்கிலாந்து நாட் டைச் சேர்ந்த பிரபல பயண எழுத் தாளர் மார்ட்டின் பக்லி (Martin Buckle) என்பவர் 2008 இல் 'An Indian Odyssey' என்னும் தலைப் பில் எழுதியுள்ள ஒரு நூலில், இராமா யணங்களைப் பற்றிப் படித்து விட்டு, அதற்குமுன் 25 ஆண்டுகளுக்கு முன், அதையொட்டிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, இராமா யண எதிர்ப்பாளர்களின் இயக்கங்களைப் பற்றியும்கூட அறிந்து கொண்டு தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

அவர் பெரியார் திடலுக்கு வந்து, அங்கேயுள்ள தந்தை பெரியாரின் நினைவிடம் சென்று, அங்கே உள்ள பெரியார் கருத்துரைகளையும், அவர் இராமாயண எதிர்ப்பாளராக எப்படி இருந்தார் என்பதைப்பற்றியும் அந் நூலில் வெகுவாகப் பதிவு செய்துள் ளார்!

16 ஆவது அத்தியாயத்தில் 'The Dravidians Strike Back' என்னும் தலைப்பில் எழுதத் தொடங்கும்முன், பெரியார் நினைவிடம்பற்றிய வர் ணனையோடுதான் தொடங்குகிறார்.

"The Black fist clutching a flaming lamp... rational thought''

மேற்காட்டிய பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் இப்படி பெரியார் சிந்தனைகளாலும் ஏற்படுத்தும் கருத் துப் புரட்சியின் தாக்கத்தை நன்றா கவே பதிவு செய்துகொண்டுள்ளனர்!

- மயிலாடன்