ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளமில்லாத விடுப்பு வழங்கும் மத்திய அரசின் முடிவு மனிதத்தன்மையற்ற செயல்
July 20, 2020 • Viduthalai • இந்தியா

 திரிணமூல் தலைவர் டெரிக் ஓ’பிரையன் கண்டனம்

கொல்கத்தா, ஜூலை 20- கடந்த புதனன்று ஏர் இந்தியா தன் ஊழியர்களை 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரையிலும் இதையே 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் விதமாகவும் சம்பளமற்ற விடுப்புக்கு அனுமதி அளித் துள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியா ஊழியர் களுக்கு சம்பளமில்லாத விடுப்பு வழங்கும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும். இது மனிதத்தன்மையற்ற செயல் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ’ பிரையன் மத்திய வான்வழிப்போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதம் வருமாறு:

இந்தக் கடினமான காலக்கட்டத்தில் இப்படி அறிவிப்பது தன்னிச்சையான செயல். ஊழியர்களுக்கான வாழ்க்கைக் கான உரிமையையும் வாழ்வாதாரத்துக்கான உரிமையையும் பறிக்கும் செயல். தொழி லாளர் உரிமைகள் என்ற லட்சியத்தை இது கடைப்பிடிப்பதாகாது. எனவே சம் பளமில்லா விடுப்பு என்ற இந்த மனிதத் தன்மையற்ற அறிவிப்பை உடனே நீங்கள் வாபஸ் பெற வேண்டும்.

சம்பளமில்லா விடுப்பு என்பது ஜன நாயகமற்ற செயல். மேலும் இதை செயல் படுத்தும் முறையை விட ஜனநாயக மீறல் எதுவும் இருக்க முடியாது. தொழிலாளர்கள் சார்பில் பேசக்கூட ஒருவரும் இல்லை. பிரதிநிதித்துவம் இல்லாத ஆதரவற்றோர் மீது செலுத்தப்படும் பலவந்தமாகும் இது.

லாக் டவுன் காலத்தில் எந்த நிறுவனமும் தொழிலாளர்களுக்குச் சம்பள நிறுத்தம் செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட மத்திய அரசு, தானே அதை மீறலாமா?

கரோனா லாக் டவுன் காலத்தில் ஏர் இந்தியா ஊழியர்கள் நாட்டுக்கு ஆற்றிய பணியை கொஞ்சமாவது நினைத்துப் பார்க்க வேண்டும். 150 ஊழியர்களுக்குக் கரோனா பாசிட்டிவ். ஆனால் இவர்களைப் பயன்படுத்தித் தூக்கி எறியும் யூஸ் அண்ட் த்ரோ கொள்கைக்கு மத்திய அரசு இலக் காக்குகிறது. அவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளமும் கொடுப்பதில்லை” என்று கடி தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, சம்பளமில்லாத கட்டாய விடுப்பு என்பது மேல்நிலை நிர்வாக அதிகாரிகளைப்  பாதுகாத்து  மற்றவர்களின் நலன்களைப் புதைப்பதாகும். ஏர் இந்தியா வின் சம்பளமற்ற கட்டாய விடுப்பு என்பது இதுவரை வரலாற்றில் எந்த ஒரு பொதுத் துறை நிறுவனமும் செய்யாதது.

இது ஏர் இந்தியாவை வாங்க முயற்சி செய்பவர்களுக்கான மேட்ச் பிக்சிங், வேலையை விட்டு அனுப்புவதையே வேறு ஒரு பெய ரில் செய்வதாகும், என்று டெரிக் ஓ’பிரையன் டுவிட்டர் பதிவில் குறிப் பிட்டுள்ளார்.