ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து
September 13, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், சென்னை:     நாடாளுமன்றக் கூட்டத்தொடர் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் தொடர்ந்து 18 நாட்கள், சனி, ஞாயிறு உட்பட அக்டோபர் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத் தொடருக்கு முன்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடை பெறுவது வழக்கம். அதனை மோடி அரசு ரத்து செய்து விட்டது. கேள்வி நேரம் கிடையாது. ஜீரோ ஹவர் 60 நிமிடம் என்பதும் 30 நிமிடமாக மாற்றப்பட்டுவிட்டது. இரு அவைகளும் ஷிப்டு முறையில், காலையில் மக்களவையும், மாலையில் மாநி லங்களவையும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.     மோடி அரசு, நீட் தேர்வை நடத்துவதன் மூலம் மாணவர் களின் உயிரோடு விளையாடுகிறது. இதற்குரிய விலையை சட்ட மன்றத் தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என புதுச்சேரி மாநில முதல்வர் வே. நாராயணசாமி கூறியுள்ளார்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:     ராஜஸ்தான் மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள குஜ்ஜார் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீத உள் இட ஒதுக்கீடு முறையாக அமல்படுத்தப்படவில்லை என முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான சச்சின் பைலட் அம்மாநில முதல்வர் அசோக் கேலாட்டுக்கு கடிதம் எழுதியுள்ளார். சென்ற ஆண்டு இதற்கான தனிச் சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.     ஆரிய சமாஜ் தலைவரும், கொத்தடிமைத் தொழிலாளர் களுக்காக பாடுபட்டவருமான சுவாமி அக்னிவேஷ் மறைவுற்ற நிலையில், அவர் ஹிந்து விரோதி; இறந்தது நல்லது என சி.பி.அய். அமைப்பின் முன்னாள் இயக்குனர் நாகேஷ்வரராவ் டிவிட்டரில் பதிவிட்டதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித் துள்ளனர். இத்தகைய மன நிலையுடையவர் உயர்ந்த பதவி யில் எத்தகைய வன்மத்தோடு இருந்திருப்பார். அதனையும் ஆராய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.     நீட் தேர்விற்கு முன்பாக, மன அழுத்தம் காரணமாக மூன்று மாணவர்களின் தற்கொலையை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கலையும், மத்திய அரசு நீட் தேர் வுக்கு விலக்கு அளிக்காததைக் கண்டித்தும் அறிக்கை விடுத்து உள்ளனர்.


தி டெலிகிராப்:     மூன்று அவசரச் சட்டங்கள் மூலம் விவசாய நிலங்களை கார்ப்பரேட்டுக்கு தாரை வார்க்கும் மோடி அரசின் முடிவை எதிர்த்து நாடு தழுவிய அளவில் போராட்டம், விவசாய சங்கங் களுடன் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.     நீதிமன்ற அவதூறு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்வதற்குரிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் வகுக்க வேண்டும் என மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
13.9.2020