ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
October 12, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • பிப்ரவரி 2020இல் குடியுரிமை திருத்த மசோதாவில் கலந்து கொண்டதற்காக, அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 14 மாணவர்கள் மீது தற்போது காவல்துறை எப்.அய்.ஆர். பதிவு செய்துள்ளது.
  • விவசாயத்தைப் பாதிக்கும் சட்லஜ் யமுனா இணைப்பு கால்வாய் திட்டத்தை பஞ்சாப் விவசாயிகள் கடுமையாக எதிர்த்து பின்னர் அது ஒரு வன்முறை இயக்கமாக மாறியது. ஆயிரக்கணக் கானோர் இறந்தனர். தற்போது மோடி அரசின் வேளாண் சட்டத்தை கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்று திருத்திக் கொள்ள வேண் டும் என மனீஸ் திவாரி, எம்.பி. தனது கட்டுரையில் விவரித்துள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • நீதித்துறையும் லஞ்சம் - ஊழல் பரவி உள்ளது. இதனைத் தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை மேலும் வலுப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
  • தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை யொட்டி, தேர்தல் அறிக்கை தயாரிக்க எட்டு பேர் கொண்ட குழுவை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • மத்திய மாநில உறவை மேம்படுத்த, மத்திய அரசு கடன் பெற்று மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என 14ஆவது நிதிக்குழு ஆணையத்தின் உறுப்பினர் எம்.கோவிந்த ராவ் கூறியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  • உ.பியில் உயர்ஜாதியினர் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது குற்றம் புரிவது என்பது அவர்களது பெருமைமிக்க கலாச்சாரம். ஆகவே, பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என்றால் பிரச்சினை முடிந்தது என மூத்த பத்திரிக்கையாளர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

தி இந்து:

  • டில்லியில் குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்புக்கு பிறகு நடந்த மத வன்முறை குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி உள்ளிட்ட மக்கள் குழு விசாரணை நடத்திட உள்ளது.
  • தாழ்த்தப்பட்டவர்கள், முஸ்லீம்கள், பழங்குடியின மக்களை மனிதர்களாகக் கூட பெரும்பான்மை இந்தியர்கள் கருதவில்லை. உ.பி. முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஹத்ராஸ் தாழ்த்தப் பெட்ட பெண் பாலியல் வன்கொடுமைக் குறித்து எந்த கருத்தும் சொல்லவில்லை. காரணம், அவர்களைப் பொறுத்தவரை அந்த பெண், யாராகவும் இல்லை என்பதுதான் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து கூறியுள்ளார்.

தி டெலிகிராப்:

  • ஆடம்பரமாக ஆர்ப்பாட்டமாக பண்டிகையைக் கொண்டாட எந்த மதமும், கடவுளும் நம்மிடம் கேட்கவில்லை. ஆகவே வருகின்ற பண்டிகைகளை குடும்பத்துடன் வீட்டிலேயே பாதுகாப்புடன் கொண்டாடுங்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் கூறினார்.
  • உ.பி.ஹத்ராஸ் அராஜகம் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இருக்கும் வெறுப்பைக் காட்டுகிறது என பல்கலைக்கழக மேனாள் தலைவர் சுக்தியோ தோரட் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

12.10.2020