ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 16, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத் பதிப்பு:

 • ஆட்சிக்கு வந்தால், ஹெச்1-பி விசா விதிகளில் டிரம்ப் அரசு செய்த மாற்றத்தை மறுபரிசீலனை செய்வதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.
 • பிரதமர் மோடியின் சுதந்திர தினப் பேச்சில் வார்த்தைகள் இருந்தன. மக்கள் சந்திக்கும் பிரச்சினைக் குறித்து எந்த தீர்வும் இல்லை என பத்திரிக்கையாளர் ஆகார் படேல் தனது கட்டுரை யில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டில்லி:

 • தமிழ் நாட்டில் மீண்டும் மொழி குறித்த விவாதம் துவங்கி விட்டது பற்றி எழுத்தாளர் அமிர்த்லால் தனது கட்டுரையில் விவரிக்கிறார்.
 • சென்ற சுதந்திர தினத்திற்குப் பிறகான ஓர் ஆண்டு முழுவதும் வெறுப்பு ஆண்டாக இருந்தது என கட்டுரையாளர் தல்வீன் சிங் எழுதியுள்ளார்.
 • புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி என்றும் இந்தி, சமஸ்கிருதம் என்றும் சொல்லப்படுவது இந்தித் திணிப்பாகவும், பார்ப்பனர்கள் ஆதிக்கமாகவும் தமிழகத்தில் பார்க்கப்படும். ஆகவே தான், அனைத்து அரசியல் கட்சிகளும் ஒட்டு மொத்த மாக இந்த கல்விக் கொள்கையை எதிர்க்கின்றன என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
 • மத்திய அரசுப் பணியில் இருந்து பணி நிறைவு பெற்றவர் களை, தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் நியமிப் பது குறித்த விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
 • ஜனநாயக மரபு, அரசமைப்புச் சட்ட விதிகள் மற்றும் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் அனைத்திற்கும் எதிராக மோடி அரசு உள்ளது. மக்கள் தங்கள் கருத்தைப் பேசவும், எழுதவும், கேள்வி கேட்கவும் முடியாது என்கிற நிலை உள்ளது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சாடியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பங்கு என்ன? என்பது பற்றி விளக்க வேண்டும் என மேற்கு வங்க அமைச்சர் அமித் மித்ரா பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி யுள்ளார்.
 • கரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் சில நிறுவனங்கள் தயாரிக்கத் துவங்கியுள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் அவை கிடைத்துவிடும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலை வர் சவுமியா சுவாமிநாதன் சென்னையில் பத்திரிக்கையாளர் களிடம் தெரிவித்தார்.

தி இந்து, டில்லி:

 • பீகாரில் நிதிஷ்குமார் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, பஸ்வான் தலைமையிலான லோக் ஜன்சக்தி கட்சி திரும்பப் பெறக்கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 • கரோனா காரணமாக, தில்லி முழுவதும், கணேஷ் உத்சவ் விழா பொது இடங்களில் நடைபெறவும், பின்னர் யமுனை ஆற்றில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுபவர் களுக்கு ரூ. ஒரு லட்சம் அபராதம் மற்றும் அய்ந்து ஆண்டுகள் சிறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெக்கான் ஹெரால்டு:

 • உடுப்பி மாவட்ட நிர்வாகம் கணேஷ் சதுர்த்தி பொது இடங்களில் வழிபடவும், கரைக்கவும் தடை விதித்துள்ளது.

- குடந்தை கருணா

16.8.2020