ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
September 15, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

 • மாநிலங்களவைத் துணைத் தலைவராக அய்க்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த ஹரிவன்ச் நாராயண் சிங் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக பாஜக கூட்டணி மட்டுமல்லாமல் பிஜூ ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.
 • டில்லியில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித் கைது செய்யப்பட்டுள்ளார்.
 • உமர் காலித் கைதைக் கண்டித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் ஆகியோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 • மத்திய அரசின் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் அண்மையில் எழுதி வெளியிட்ட புத்தகத்தில் உள்ள நாட்டுப் பிரிவினை, தாராளமயமாக்கல், பொருளாதார வீழ்ச்சி குறித்து எழுதிய கருத்துகள், சாதாரணமாகவும், நடப்புப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லாமல் சாக்குப்போக்கு சொல்லும் விதமாக உள்ளது என மூத்த பத்திரிகையாளர் ஆகார் படேல் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிகல், சென்னை:

 • நீட் தேர்வு குறித்து திரைப்பட நடிகர் சூர்யா கூறிய கருத்தை பெரிது படுத்த வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.பி.சகிக்கு முன்னாள் நீதிபதிகள் ஆறு பேர் கடிதம் எழுதியுள்ளனர்.
 • இந்தி நாளை முன்னிட்டு பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது என்று பேசியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 • டில்லியில் குடியுரிமை திருத்த மசோதா எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தின் போது நடைபெற்ற கலவரத்தைச் சுட்டிக்காட்டி, ஜே.என்.யூ. முன்னாள் மாணவர் உமர் காலித் கைது செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, ராமசந்திர குகா, அருந்ததி ராய், பிருந்தா காரத், ஜிக்னேஷ் மேவானி, பி.சாய் நாத், பிரசாந்த் பூஷன், ஹரிஸ் மந்தர் உள்ளிட்ட 36 பேர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
 • ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பு, பாஜக - ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் 2011இல் உருவாக்கப் பட்டது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸை வீழ்த்துவ தற்காக இந்த அமைப்பு தொடங்கப்பட்டது என்பதை தற்போது உணர்ந்து வருந்துகிறேன். அதேபோன்று, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு அளித்ததற் காகவும் வருந்துவதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
 • விவசாயத்தையும், கூட்டுறவு வங்கிகளையும் அழித் தொழிக்கும் மசோதாக்களை அவசர சட்டங்களாக கொண்டு வரும் மோடி அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்தன.
 • புதிய கல்விக் கொள்கையில், கிராமத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த கல்வித் திட்டமும் கூறப்படவில்லை என மானுடவியலாளர் ஏ.ஆர். வாசவி தனது கட்டுரையில் கூறியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 • இந்தி நாளை கருப்பு தினமாக அனுசரிக்கக் கோரி, மேற்கு வங்க மாநிலத்தில் பங்களா பொக்கோ, ஜாதியோ பங்களா சம்மேளனம் போன்ற அமைப்புகள் மக்களுக்கும் அரசுக்கும் அறிவித்துள்ளன. வங்க மொழிக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இந்திக்கு முன்னுரிமை கொடுப்பது பல்மொழி பேசும் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு எதிரானது என இந்த அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

தி டெலிகிராப்:

 • இளைஞர்கள், மாணவர்கள் பேச்சுரிமை தடுக்கப்படுகிறது. அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கி, ஆயிரக்கணக்கனவர் களை சிறையில் அடைத்துள்ளது என உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் லோகுர் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

15.9.2020