ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஏட்டுத் திக்குகளிலிருந்து...
August 25, 2020 • Viduthalai • மற்றவை

டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

  • உச்ச நீதிமன்றம் குறித்தும், நீதிபதிகள் குறித்தும் டிவிட்டரில் பதிவிட்ட மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் மீது தானாகவே முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து குற்றவாளி என தீர்ப்பளித்தது. பின்னர் மன்னிப்பு கேட்டால் தண்டனை மறுபரிசீலனை என அறிவித்தது. தனது கருத்தில் உறுதியாக இருப்பதாகவும், மன்னிப்பு கேட்டால் அது தனது மனசாட்சியை அவதூறு செய்வதாகிவிடும் என தற்போது பிரசாந்த் பூஷண் தெரிவித்துள்ளார்.
  • நாட்டில் கரோனா தொற்று அதிகரிப்பு, வேலையின்மை, பொருளாதாரப் பின்னடைவு, எல்லையில் சீன ஆக்கிரமிப்பு என இத்தனைப் பிரச்சினைகள் இருக்கும்போது, தற்கொலை செய்து கொண்ட ஒரு நடிகர் குறித்து வட இந்திய ஊடகங்களும், அதனை வைத்து பீகார் தேர்தலைச் சந்தித்து வாக்குப் பெறுவார் கள் என கூறுவதும் வியப்பாக இருப்பதாக மூத்த பத்திரிக்கையா ளர் ஆசார் படேல் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.
  • காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் இன்னும் ஆறு மாதங்களில் தேர்ந்தெடுக்கப்படுவார். அதுவரை சோனியா காந்தியே தற்காலிகத் தலைவராக நீடிப்பார் என காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு எடுத்துள்ளது.

டெக்கான் கிரானிகல், சென்னை:

  • தேசியக் கல்விக் கொள்கை குறித்து ஆசிரியர்களின் கருத்துக் கேட்டு மத்திய கல்வித்துறைச் செயலாளர் மாநில செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதம் வெறும் கண் துடைப்பு. மாற்றுக் கருத்துகள் எதையும் அரசு பரிசீலிக்கவில்லை என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
  • மத்திய அரசின் கல்வித்துறைச் செயலாளர் நேரடியாக மாநில அரசுகளின் கல்வித் துறைச் செயலாளர்களிடம் கொள்கை குறித்து கருத்து கேட்பது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என தமிழ் நாடு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப் பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்து உள்ளார்.
  • நீட், ஜே.இ.இ. தேர்வுகளை தள்ளி வைக்குமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் :

  • அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தொடர்ந்து படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேசியக் கல்விக் கொள்கை குறித்து இன்னும் மாநில அரசுகள் ஒப்புதல் தெரிவிக்காத நிலையில் மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடங்களை உறுதி செய்யும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

25.8.2020